சூரிய சக்தியில் சூரியன் போல எட்டிப்பார்த்த இந்தியா - உலகில் மூன்றாவது இடத்தை பிடித்த புதிய சாதனை!

உலகளாவிய மின்சாரத் துறையில் இந்தியா முக்கிய சாதனை படைத்துள்ளது. 2024ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட "எம்பர்ஸ் குளோபல் எலக்ட்ரிசிட்டி ரிவியூ( Ember's Global Electricity Reviews)" அறிக்கையின்படி, உலகளவில் காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தி மூலம் அதிகளவு மின் உற்பத்தி செய்யும் மூன்றாவது நாடாக இந்தியா உயர்ந்துள்ளது. இந்தியாவின் இந்த சாதனை, ஜெர்மனியை பின்னுக்குத் தள்ளி, சீனா மற்றும் அமெரிக்காவுக்குப் பிறகு உலக வரிசையில் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Ember's அறிக்கையின்படி, கடந்த ஆண்டில் உலகளவில் மின் உற்பத்தியின் 15% பசுமை ஆற்றல் மூலம் கிடைத்துள்ளது. இதில் இந்தியாவின் பங்கு 10% ஆக இருந்தது. மேலும், காற்றாலை மற்றும் சூரிய சக்தி இணைந்து அதிகளவில் மின் உற்பத்தியில் பங்களித்துள்ளது. உலகளவில் 2024ஆம் ஆண்டில் 858 டெராவாட் மணிநேரங்கள் புதுப்பிக்கத்தக்க(Renewable) ஆற்றலால் உற்பத்தி செய்யப்பட்டது. இது கடந்த 2022ஆம் ஆண்டை விட 49% அதிகமாகும்.

சூரிய சக்தியில் சூரியன் போல எட்டிப்பார்த்த இந்தியா - உலகில் மூன்றாவது இடத்தை பிடித்த புதிய சாதனை!

இந்தியாவில் மொத்த மின் உற்பத்தியில் சுமார் 22% சுத்தமான எரிசக்தி ஆதாரங்கள் கிடைத்துள்ளது. இதில் நீர்மின் சக்தி 8% பங்காக உள்ளது. காற்றாலை மற்றும் சூரிய சக்தி சேர்ந்து 10% பங்கு கொண்டுள்ளது. 2024ஆம் ஆண்டில் மட்டும் இந்தியா 24 ஜிகாவாட் சூரிய மின் உற்பத்தி திறனை சேர்க்கப்பட்டுள்ளது. இது கடந்த 2023ம் ஆண்டை விட இரட்டிப்பு அதிகரிப்பு ஆகும். இதன் மூலம் சீனா மற்றும் அமெரிக்காவுக்கு அடுத்ததாக இந்தியா மூன்றாவது பெரிய சந்தையாக மாறியுள்ளது.

உலகளவில் கடந்த மூன்று ஆண்டுகளில் சூரிய மின் உற்பத்தி இரட்டிப்பு வளர்ச்சி கண்டுள்ளது. 2024ஆம் ஆண்டில் மட்டும் 474 TWh மின் சக்தி சூரிய சக்தியில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி 2021ம் ஆண்டுடன் ஒப்பிட்டால் இரட்டிப்பு வளர்ச்சி கண்டுள்ளது. தற்போது 7% மின் உற்பத்தி சூரிய சக்தி மூலமாக கிடைக்கிறது.

ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றத் தலைவர்(Climate change leader) சைமன் ஸ்டீல், இந்தியாவை "சூரிய சக்தி சூப்பர் பவர்" என கூறியுள்ளார். இந்தியா முழுமையாக பசுமை ஆற்றல் வளர்ச்சியில் ஈடுபட்டால் அதன் பொருளாதார வளர்ச்சி வேகம் கூடும் என்று தெரிவித்துள்ளார்.

இந்திய அரசின் நோக்கம், 2030ஆம் ஆண்டுக்குள் மொத்த மின் உற்பத்தி திறனில் 50% பங்கு புதுப்பிக்கத்தக்க ஆற்றலால் நிரப்புவதாகும். மேலும் 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனை இலக்காக கொண்டு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் பசுமை ஆற்றல் வளர்ச்சி சிறப்பாக இருந்தாலும், எதிர்கால வளர்ச்சிக்கு சில சவால்கள் உள்ளன. மின் தேவை அதிகரித்து வரும் நிலையில் பசுமை ஆற்றலால் தேவையை பூர்த்தி செய்வது மிகப்பெரிய சவாலை உருவாக்குகிறது. இதனை தாண்டி வளர்ச்சி பெறும் நாடுகளுக்கு இது ஒரு பொருளாதார வாய்ப்பாக இருக்கலாம் என்று எம்பர்ஸ் அறிக்கை கூறுகிறது.

உலகின் மின்சார தேவையை பூர்த்தி செய்ய சூரிய சக்தி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பேட்டரி சேமிப்பு தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டால் சூரிய சக்தியின் பயன்கள் அதிகரிக்கலாம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த புதிய ஆற்றல் சந்தை வளர்ச்சி உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பையும், பொருளாதார வளர்ச்சியையும் உறுதி செய்யும் என தெரிவிக்கப்படுகிறது.

இதன் மூலம் இந்தியா தனது பசுமை ஆற்றல் திட்டங்களில் முன்னேற்றம் கண்டுள்ளது என்பதும், எதிர்காலத்தில் இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் பசுமை ஆற்றல் இலக்குகள் மற்றும் உலகளாவிய முன்னேற்றம் தொடர்பான இந்த வளர்ச்சி தகவல் நம் நாட்டின் பெருமையை அதிகரிக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+