EPFO, NPS மற்றும் ESIC தரவுகளை வைத்து ஆய்வு செய்ததன் அடிப்படையில் இந்திய பொருளாதாரத்தில் 2020- 2023 ஆம் நிதியாண்டு வரையிலான காலக்கட்டத்தில் கிட்டத்தட்ட 5.2 கோடி புதிய முறைப்படுத்தப்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் இக்காலக்கட்டத்தில் மொத்த நிகர பணியாளர்கள் எண்ணிக்கை 2.7 கோடி அதிகரித்துள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில் EPFO ஊதியப் பட்டியல் தரவுப் போக்குகள், நிகர புதிய EPF சந்தாதாரர்களின் சேர்க்கை 4.86 கோடியாக இருந்த நிலையில் தற்போது 5.2 கோடி ஆக உள்ளது. EPFO தரவுகளில் புதிதாக ஊதியம் பெறுவர்கள் (முதல் வேலை), இரண்டாவது ஊதியம் (மீண்டும் இணைந்த அல்லது மீண்டும் சேர்ந்த ஊழியர்கள்) மற்றும் முறைப்படுத்தப்பட்ட துறையில் ஊழியர்களாக இருப்பவர்களின் தரவுகள் உள்ளன.

இந்த EPFO எண்ணிக்கையில் புதிதாக பணியில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கையை தனியாக பிரிந்து பார்த்த போது 2020- 2023 ஆம் நிதியாண்டு வரையிலான காலக்கட்டத்தில் கிட்டத்தட்ட 2.27 கோடி பேர் புதிதாக பணியில் சேர்ந்துள்ளனர்.
இந்தியாவில் வேலைவாய்ப்பு சந்தை பல ஆண்டுகளாக பெரிய அளவிலான வளர்ச்சி இல்லாமல் இருப்பது ஒரு முக்கிய பிரச்சனையாக பார்க்கப்படும் வேளையில், கடந்த சில வருடங்களாக உற்பத்தி, சேவை, ஏற்றுமதி என பல துறைகளில் வேகமாக வளர்ச்சி பதிவாகி வரும் காரணத்தால் கொரோனா தொற்றுக்கு பின்பு வேலைவாய்ப்பு சந்தையில் சாதகமான மாற்றங்கள் வருகிறது.
மேலும் ஒவ்வொரு மாநிலமும் புதிய முதலீடுகளை ஈர்ப்பதன் மூலம் வர்த்தகத்தை விரிவாக்குவது மட்டும் அல்லாமல் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் அடுத்த சில வருடத்தில் உற்பத்தி, GCC, ஏற்றுமதி, போக்குவரத்து துறையில் அதிகப்படியான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications