இந்திய பெரும் பணக்காரரும் , தொழிலதிபருமான கௌதம் அதானிக்கு சொந்தமான அதானி குழுமம், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்கான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கொண்ட உயர் செயல்திறன் தரவு மையங்களை 2035-க்குள் உருவாக்க $100 பில்லியன் நேரடி முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் அதானி குழுமம் டேட்டா செண்டர் பிஸ்னஸில் பெருமளவில் கால்பதிக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது.
அண்மையில் தான் மத்திய அரசு வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய தரவு மையங்களை பயன்படுத்தினால் வரி செலுத்த தேவையில்லை என பட்ஜெட்டில் அறிவித்திருந்தது. இந்த நிலையில் அதானி குழுமம் 100 பில்லியன் டாலரை ஏஐ சார்ந்த டேட்டா மையங்களை அமைக்க முதலீடு செய்வதாக அறிவித்திருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இது இந்தியாவை 'அறிவாற்றல் புரட்சி'யில் உலகத் தலைவராக நிலைநிறுத்த எடுக்கும் முயற்சிகளில் ஒன்று என அதானி குழுமம் தெரிவித்துள்ளது. இந்த முதலீடு, சேவையக உற்பத்தி, மேம்பட்ட மின் உள்கட்டமைப்பு, சுதந்திர கிளவுட் தளங்கள் மற்றும் துணைத் தொழில்களில் 2035-க்குள் கூடுதலாக $150 பில்லியனை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதன் மூலம், அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவில் $250 பில்லியன் மதிப்பிலான AI உள்கட்டமைப்பு சூழலியல் உருவாகும் என அதானி என்டர்பிரைசஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
"இந்தியாவின் தொழில்நுட்ப இறையாண்மையை மையமாகக் கொண்ட முழுமையான ஐந்து அடுக்கு AI ஸ்டாக்கை விரிவுபடுத்த, நாங்கள் தரவு மையங்கள் மற்றும் பசுமை ஆற்றலில் எங்கள் அடித்தளத்தை உருவாக்கி வருகிறோம். AI யுகத்தில் இந்தியா வெறும் நுகர்வோராக இருக்காது. நாங்கள் அறிவாற்றலை உருவாக்குபவர்களாகவும், கட்டியெழுப்புபவர்களாகவும், ஏற்றுமதி செய்பவர்களாகவும் இருப்போம், மேலும் அந்த எதிர்காலத்தில் பங்கேற்பதில் பெருமிதம் கொள்கிறோம்," என்று அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி தெரிவித்தார்.
அதானி கான்னெக்ஸின் தற்போதைய 2 GW தேசிய டேட்டா மையத் திறனை 5 GW ஆக உயர்த்துவது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ், அதானி குழுமம் கூகுளுடன் இணைந்து விசாகப்பட்டினத்தில் நாட்டின் மிகப்பெரிய ஜிகாவாட் அளவிலான AI தரவு மைய வளாகத்தையும், நொய்டாவில் கூடுதல் வளாகங்களையும் அமைக்கிறது.
மேலும், மைக்ரோசாஃப்ட்டுடன் இணைந்து ஹைதராபாத் மற்றும் புனேவிலும் தரவு மையங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. பிளிப்கார்ட்டின் அடுத்த தலைமுறை டிஜிட்டல் வர்த்தகம், உயர் செயல்திறன் கணினி மற்றும் பெரிய அளவிலான AI பணிகளை ஆதரிக்க, இரண்டாவதாக ஒரு பிரத்யேக AI தரவு மையத்தை உருவாக்க அதானி குழுமம் பிளிப்கார்ட்டுடனான கூட்டாண்மையையும் உறுதிப்படுத்துகிறது. அதானி குழுமத்தின் இந்த டேட்டா மைய அறிவிப்பு வெளியான உடன் பங்குச்சந்தையில் அதானி என்டர்பிரைசஸ் பங்கு ரூ 2,235.00 ஆக 2.30% உயர்ந்து வர்த்தகம் ஆனது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications