டெல்லி: சில நாட்களுக்கு முன்பு சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் பல அமைச்சர்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் குறித்தும், அதன் நினைத்து பார்க்க முடியாத வேகமான வளர்ச்சி குறித்தும், இதன் மூலம் மக்கள் இழக்க கூடிய வாய்ப்புகள் குறித்துப் பேசிய வீடியோ உலகம் முழுவதும் வைரலானது.
இதுமட்டும் அல்லாமல் சிங்கப்பூர் நாட்டில் மக்களுக்கு ஏஐ துறை குறித்த புரிதல், பயிற்சி ஆகியவற்றுக்குத் தனித் திட்டம், AI கல்விக்காக 20 மில்லியன் டாலர் நிதியுதவி எனப் பல முக்கிய அறிவிப்புகள் வெளியானது. இதன் மூலம் ஏஐ ஆதிக்கம் நிறைந்த உலகை எதிர்கொள்ளச் சிங்கப்பூர் தயாராகியுள்ளது.

இந்த நிலையில் மார்ச் 8 ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அடுத்த ஐந்தாண்டுகளுக்கான இந்தியா செயற்கை நுண்ணறிவு (AI) மிஷன் என்னும் திட்டத்திற்கு 10,371.92 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.
'இந்தியா ஏஐ மிஷன்' திட்டத்தின் கீழ், நாட்டில் செயற்கை நுண்ணறிவு பிரிவில் கம்பியூட்டிங் திறனை அதிகரிக்க விரும்பும் தனியார் நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்கப்படும். மேலும், செயற்கை நுண்ணறிவு துறையில் தொடங்கப்படும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கும் Seed Funding அதாவது துவக்க முதலீடுகளை இந்தத் திட்டத்தின் நிதியில் இருந்து வழங்கப்படும்.
இந்தியா ஏஐ மிஷன் மொத்த ஒதுக்கீடு ரூ.10,371.92 கோடி ஆகும். இந்த நிதியைப் பெருமளவில் பெரிய கம்பியூட்டிங் கட்டமைப்புகளை உருவாக்க பயன்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அமைச்சரவை கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார், அதில் ஒன்று தான் இந்த India AI Mission. இத்திட்டத்தின் கீவ் 10,000 க்கும் மேற்பட்ட GPUக்களைக் கொண்ட supercomputing capacity உருவாக்கவும், இதன் மூலம் செயற்கை நுண்ணறிவு சூழலை இந்தியாவில் உருவாக்கும் முயற்சியில் இந்திய அரசு இறங்கியுள்ளது.
இந்தியா ஏஐ இயக்கத்தின் கீழ் நிறுவப்பட்ட செயற்கை நுண்ணறிவு சூப்பர் கம்பியூட்டிங் கட்டமைப்பை ஸ்டார்ட்அப்கள், கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில் துறையினர் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பியூஷ் கோயல் தெரிவித்தார்.
India AI Missionகீழ் ஒரு தேசிய தரவு மேலாண்மை அதிகாரி நியமிக்கப்படுவார். இந்த அதிகாரி ஏஐ சார்ந்து இருக்கும் பல்வேறு அரசு துறைகளுடன் இணைந்து செயல்பட்டு, தரவின் பாதுகாப்பு, பயன்பாட்டுத் தன்னமை, நிர்வாகம் என அனைத்தும் மேம்படுத்தப்படும் எனவும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
This is how Singapore is preparing its citizens for the coming wave of AI! pic.twitter.com/LX4QyylfLU
— Alvin Foo (@alvinfoo) February 28, 2024
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications