இந்தியாவின் முன்னணி நிறுவனங்களான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அதானி குழுமங்கள், டெல்லியில் நடைபெறும் AI உச்சிமாநாட்டை தங்கள் நிறுவனங்களுக்கான இளம் பொறியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் களமாகப் பயன்படுத்த தொடங்கியுள்ளன. உலகளவில் AI கருவிகள் மற்றும் பயன்பாட்டுக்கான போட்டி தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த துறையில் திறமையாளர்களுக்குத் தேவை அதிகரித்துள்ளது.
டெல்லியில் நடைபெறும் ஏஐ உச்சி மாநாட்டில் பல்வேறு நாடுகளின் டெக் நிபுணர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதனை வாய்ப்பாக பயன்படுத்தி தங்கள் நிறுவனங்களுக்கு தீவிரமாக திறமையான நபர்களை வேலைக்கு எடுக்க தொடங்கியுள்ளன இந்திய நிறுவனங்கள். அதானி கனெக்ஸ் மார்க்கெட்டிங் நிர்வாகி பிரியான்ஷி பவிஷி, "திறமையாளர்களைக் கண்டறிய இது சிறந்த இடம். இத்துறை தனித்துவமானது, தகுதியானவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் உள்ளன" என்றார்.

இந்த உச்சிமாநாட்டில், ஆல்ஃபபெட் சி.இ.ஓ சுந்தர் பிச்சை, ஓபன்ஏஐயின் சாம் ஆல்ட்மேன் போன்ற புகழ்பெற்ற தொழில்நுட்பத் தலைவர்கள் உரையாற்றினர். பிரெஞ்சு அதிபர் இமானுவல் மேக்ரான் முக்கிய உரை வழங்கினார். இந்தியா உலக AI எதிர்காலத்தை வடிக்கும் சக்தி கொண்டது எனக் காட்ட இது ஒரு பெரும் வாய்ப்பு. AI துறையில் இந்தியா ஏற்கெனவே $50 பில்லியன் முதலீடுகளைப் பெற்றுள்ளது.
இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக ஆந்த்ரோபிக் நிறுவனம் குறிப்பிட்ட தொழில்களுக்கு மேம்பட்ட AI தீர்வுகளை உருவாக்க, இன்ஃபோசிஸ் உடன் கூட்டு சேர்ந்ததாக அறிவித்துள்ளது. அதானி குழுமம் 2035க்குள் டேட்டா மையங்களில் $100 பில்லியன் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. கூகுள், "$15 பில்லியன்" ஒதுக்கி இந்தியாவில் ஒரு AI மையத்தை உருவாக்குவதாக கூறியுள்ளது.
இந்தியாவின் தொழில்நுட்பப் பட்டதாரிகள் மத்தியில் AI திறமைக்குப் பற்றாக்குறை நிலவுகிறது. எர்ன்ஸ்ட் & யங் எல்எல்பி அதிகாரி சித்தார்த் சூட், "நாம் சேவை சார்ந்த நாடு, ஆனால் புதுமையான சிந்தனையாளர்களை (ideapreneurs) தேடுகிறோம். சைபர் பாதுகாப்புக்கான AI மற்றும் AI க்கான சைபர் பாதுகாப்பு – இதுவே தற்போது அதிக டிமாண்ட் கொண்டது " என்றார்.
இந்த உச்சிமாநாடு, AI பொறியாளர்கள், தரவு விஞ்ஞானிகள், கிளவுட் டெவலப்பர்களுக்கு பயோடேட்டா சமர்ப்பிக்க நேரடி வாய்ப்பளிக்கிறது. டெல் டெக்னாலஜிஸ், சேல்ஸ்ஃபோர்ஸ் நிர்வாகிகள், வழக்கமான ஆன்லைன் விண்ணப்பச் செயல்முறை மூலம் அணுக முடியாத திறமையாளர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஏனெனில், பல விண்ணப்பங்கள் AI மென்பொருளால் நிராகரிக்கப்படுகின்றன. இதனால் நேரடி நேர்காணல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
டெலாய்ட் ஹாஸ்கின்ஸ் & செல்ஸ் எல்எல்பி அனலிட்டிக்ஸ் பிரிவின் மூத்த மேலாளர் வைரல் டேங்க், "காலையிலிருந்தே மாணவர்கள் திரளாக வருகின்றனர்; ஆள்சேர்ப்பு எங்கள் நிகழ்ச்சி நிரலில் முதன்மையானது. இது இரு தரப்புக்கும் நன்மை. நான் ஆட்களைத் தேடுகிறேன், அவர்கள் வேலை தேடுகிறார்கள்" என்று குறிப்பிட்டார்.தொழில்நுட்பத் தலைவர்கள் பணியமர்த்த, தயாரிப்புகளை விற்க, நிபுணத்துவத்தைப் பகிரும் நிலையில், இந்த மாநாட்டில் மிகச்சிறந்த திறமையாளர்களை தேடி தேடி அதானி மற்றும் அம்பானி நிறுவனங்கள் பணிக்கு அமர்த்த தொடங்கி இருக்கின்றனவாம்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications