இந்தியாவில் அண்மைக்காலமாக புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவது தொடர்பான தகவலை நாம் அதிகளவில் பார்க்க முடிகிறது. புற்றுநோயை பொருத்தவரை அதனை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து விட்டால் உரிய சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டு வர முடியும், அடுத்தது நிலைகளுக்கு செல்ல செல்ல நாம் அதிலிருந்து மீண்டு வருவதற்கான வாய்ப்பு படிப்படியாக குறைந்துவிடும்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கீமோதெரபி, ரேடியேஷன், மாத்திரைகள் என பல வழிகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தியாவில் புற்று நோய்க்கான பல்வேறு மருந்துகள் பயன்பாட்டில் இருக்கின்றன. அந்த வகையில் மத்திய அரசு இந்தியாவில் 7 நிமிடங்களில் செலுத்தக்கூடிய ஒரு புற்றுநோய் மருந்துக்கு அனுமதி தந்திருக்கிறது.

சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த Roche என்ற நிறுவனம் புற்றுநோய் மருந்துகளை உற்பத்தி செய்கிறது. இந்த நிறுவனத்தின் Tecentriq எனப்படும் Atezolizumab வகை ஊசியினை இந்தியாவில் இறக்குமதி செய்து சோதனை நடத்துவதற்கு மத்திய அரசு அனுமதி தந்திருக்கிறது. இந்தியாவை சேர்ந்த மருந்துகளுக்கான பரிசோதனைகளுக்கு அனுமதி தரக்கூடிய குழு ராச்சே நிறுவனத்தின் இந்த புற்றுநோய் மருந்து தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்தது.
இந்தியாவில் இதனை இறக்குமதி செய்யவும் நான்காம் கட்ட மருத்துவ சோதனையை நடத்தவும் அனுமதி தந்துள்ளது. எனவே இந்தியாவில் Tecentriq எனப்படும் Atezolizumab மருந்தினை இறக்குமதி செய்து இந்த நிறுவனம் பரிசோதனை செய்யலாம். வழக்கமாக Atezolizumab மருந்தினை ஐவி எனப்படும் intravenous (IV) அடிப்படையில் தான் செலுத்துவார்கள். ஆனால் தற்போது அனுமதி தரப்பட்டுள்ள மருந்து subcutaneous வகை அதாவது தோலின் அடியில் ஊசியாக செலுத்தலாம்.

தற்போது புற்றுநோய்க்கு செலுத்தக்கூடிய intravenous முறையில் மருந்துகளை செலுத்த 30 லிருந்து 60 நிமிடங்கள் வரை தேவை. ஆனால் இது தோலுக்கடியிலேயே செலுத்தக்கூடிய ஊசி என்பதால் ஏழு நிமிடங்களிலேயே இந்த மருந்தினை செலுத்தி விட முடியும். புற்றுநோய் சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளுக்கு இது மிக முக்கியமான ஒரு அறிவிப்பாக பார்க்கப்படுகிறது. அத்துடன் மருந்துக்கான செலவும் குறையும் என சொல்லப்படுகிறது.
முதலில் இந்த நிறுவனம் இந்த மருந்தினை இந்தியாவில் நான்காவது கட்ட மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் அதன் பிறகு தான் வர்த்தக ரீதியிலான பயன்பாட்டுக்கு அனுமதி வழங்க முடியும் என அரசு தெரிவித்துள்ளது. இந்த மருந்து பயன்பாட்டுக்கு வந்தால் புற்றுநோய் சிகிச்சைக்கான செலவு குறையும் என இந்நிறுவனம் நம்பிக்கை தெரிவிக்கிறது.
இந்த ஊசியை மருத்துவமனையில் தான் செலுத்த வேண்டும் என்பது கிடையாது வீட்டிலேயே வந்து கூட மருத்துவர்களே செலுத்தலாம் எனவே புற்றுநோய் சிகிச்சையில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் இந்த மருந்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதன்முறையாக இந்த மருந்துக்கு பிரிட்டன் அரசு தான் அனுமதி தந்தது. நுரையீரல் புற்றுநோய் , மார்பகப் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய் சிகிச்சைகளில் இந்த மருந்து பயன்படுத்தப்படுகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications