அரசு பத்திரங்களில் நேரடி முதலீடு.. ரீடைல் முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்..!

இந்திய ரீடைல் முதலீட்டாளர்களுக்குப் புதிய முதலீட்டுச் சேவை அளிக்கும் விதமாக மத்திய அரசுடன் இணைந்து ரிசர்வ் வங்கி அரசு பத்திரங்களில் முதலீடு செய்யப் புதிய முதலீட்டுத் தளத்தை உருவாக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

தற்போது சிறு முதலீட்டாளர்கள் அரசு பத்திரங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் தேசிய பங்குச்சந்தையில் இருக்கும் goBID தளத்தின் வாயிலாக அரசு பத்திரங்களில் முதலீடு செய்யலாம்.

ரீடைல் முதலீட்டாளர்கள்

ரீடைல் முதலீட்டாளர்கள்

மத்திய அரசு அதிகளவிலான முதலீட்டாளர்களை ஈர்க்கும் வண்ணம் சந்தையில் இருக்கும் பிற பங்குச்சந்தை முதலீட்டுத் தளத்தைப் போலவே ரீடைல் முதலீட்டாளர்கள் நேரடியாக அரசு பத்திரங்களில் முதலீடு செய்யும் ஒரு சிறப்புத் தளத்தை ரிசர்வ் வங்கி உருவாக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

சக்திகாந்த தாஸ்

சக்திகாந்த தாஸ்

இதுகுறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறுகையில் பங்குச்சந்தை வர்த்தகத் தளங்களை இணைக்கும் அக்கிரிகேட்டர் மாடல் ஏற்கனவே ரிசர்வ் வங்கி வைத்துள்ள நிலையில், தற்போது இதன் வாயிலாக அரசு பத்திர முதலீடுகளுக்கு அளிக்கத் திட்டமிட்டு உள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியா

இந்தியா

இதன் மூலம் ஆசியாவிலேயே முதல் முறையாக இந்தியா, அரசு பத்திரங்களில் முதலீடு செய்யச் சிறு மற்றும் ரீடைல் சந்தை முதலீட்டாளர்களுக்கு அனுமதி கொடுத்துள்ளது. பிரிட்டன், பிரேசில் மற்றும் ஹாங்கேரி ஆகிய நாடுகள் இதுபோன்ற சேவைகளை முதலீட்டாளர்களுக்கு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அரசு பத்திரங்கள்

அரசு பத்திரங்கள்

அரசு இதுநாள் வரையில் அரசு பத்திரங்களை வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் மட்டுமே விற்பனை செய்து முதலீட்டைத் திரட்டி வந்தது. இதனால் ஒவ்வொரு முறையும் அரசு பத்திரங்களை விற்பனையைச் செய்யக் கடுமையான முயற்சிகளைச் செய்ய வேண்டிய நிலை இருந்தது.

ரீடைல் முதலீட்டாளர்கள்

ரீடைல் முதலீட்டாளர்கள்

ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பின் மூலம் அரசு தனது பத்திரங்களை மிகவும் எளிதான முறையில் மிகவும் குறைந்த நேரத்தில் பத்திரங்களை விற்பனை செய்ய முடியும். மேலும் அரசு பத்திரங்கள் மிகவும் பாதுகாப்பானவை என்பதால் ரீடைல் முதலீட்டாளர்களுக்கு இது மிகவும் சிறந்த வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+