சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள், ஈராக் ஆகியவற்றுக்குமான ஒத்துமை அவை அனைத்தும் வளைகுடா நாடுகளாக இருந்தாலும், இந்த 3 நாடுகளுக்கும் மத்தியிலான மற்றொரு முக்கியமான ஒற்றுமை, கச்சா எண்ணெய். ஆம் வளைகுடா நாடுகள் மத்தியிலும், உலகளவிலும் அதிகப்படியாக கச்சா எண்ணெய் உற்பத்தி செய்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நாடுகளில் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள், ஈராக் முக்கியமானவை.
சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள், ஈராக் ஆகிய 3 நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு தான் முக்கியமான பொருளாதார மற்றும் வர்த்தக ஆதாரமாக விளங்கும் வேளையில் இதற்கு இந்தியா மூலம் முக்கியமான பிரச்சனை உருவாகியுள்ளது.

இதனால் அடுத்த 10 வருடத்தில் வளைகுடா நாடுகளின் நிலைமை என்னவாகும் என்பது பெரும் கேள்விக்குறியாக மாறி நிற்கிறது. வளைகுடா நாடுகளுக்கு இந்தியா மூலம் எத்தகைய பிரச்சனை வருகிறது..? இந்த பிரச்சனைக்கும் சீனாவுக்கும் என்ன தொடர்பு என்பதை தான் தற்போது விரிவாக பார்க்கப்போம். இது பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மட்டும் அல்லாமல் சாமானிய மக்களுக்கும் மிகவும் முக்கியமானதாக உள்ளது.
வளைகுடா நாடுகளின் எதிர்காலத்திற்கும் இந்தியாவுக்கும் என்ன பிரச்சனை என்பதை தெரிந்துக்கொள்ளவதற்கு முன்பு, இதற்கு முக்கியமான காரணமாக விளங்கும் சீனாவின் லிங்க்-ஐ அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
சீனாவின் லிங்க: கடந்த 25 ஆண்டுகளாக உலகின் கச்சா எண்ணெய் தேவை வளர்ச்சியை சீனா-வின் உற்பத்தி, ஏற்றுமதி, ஜிடிபி வளர்ச்சி ஆகியவற்றின் மூலம் வழிநடத்தி வருகிறது. இக்காலக்கட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 485,000 பேரல்கள் என்ற அளவில் சீனா கச்சா எண்ணெயை பயன்படுத்தியது.
ஆனால் தற்போது சீனாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை மற்றும் அதிகப்படியான மின்சார வாகனங்களின் பயன்பாடு அந்நாட்டின் கச்சா எண்ணெய் தேவை வளர்ச்சி குறைந்துள்ளது.
2025-ல் சீனாவின் எண்ணெய் தேவை நாளொன்றுக்கு 135,000 பேரல்களாக மட்டுமே உயரும் என சர்வதேச எரிசக்தி அமைப்பு (International Energy Agency) தெரிவிக்கிறது. இதற்கிடையில், இந்தியாவின் எண்ணெய் தேவை வளர்ச்சியும் சுருங்கி, நாளொன்றுக்கு 130,000 பேரல்களாக மட்டுமே உயரக்கூடும் என சந்தை நிலவரம் கூறுகிறது. இது தான் தற்போது சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள், ஈராக் நாடுகளுக்கு தலைவலியாக மாறியிருக்கும் பிரச்சனை.
இந்தியாவின் எண்ணெய் தேவை: சீனாவின் எண்ணெய் தேவை வளர்ச்சி குறைந்த நிலையில், இந்தியா அந்த இடைவெளியை நிரப்பும் என பலரும் எதிர்பார்த்தனர். இதற்காகவே வளைகுடா நாடுகள் இந்தியா உடனான தனது வர்த்தக உறவை தொடர்ந்து மேம்படுத்தி வந்தது. ஆனால், கடந்த மூன்று மாதங்களாக இந்தியாவின் எண்ணெய் தேவை வளர்ச்சி சுருங்கி வருகிறது.
2025-ல் இந்தியாவின் எண்ணெய் நுகர்வு நாளொன்றுக்கு 130,000 பேரல் மட்டுமே இருக்கும் என கணிக்கப்புகள் வெளியாகியிருக்கும் வேளையில், இது கடந்த பத்து ஆண்டுகளில் மிகக் குறைந்த ஆண்டு வளர்ச்சியாக இருக்கும் என கள நிலவரம் கூறுகிறது. 2025 முதல் 2030 வரையிலான காலத்தில் இந்தியாவில் ஒரு மில்லியன் அதாவது 10 லட்சம் பேரல்கள் வரையில் கச்சா எண்ணெய் வாங்கப்படும் என முன்னர் எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக உள்ளது.
சீனா Vs இந்தியா: சீனாவும் இந்தியாவும் கச்சா எண்ணெய் பயன்பாட்டில் பெரிய வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. தற்போது, சராசரியாக ஒரு இந்தியர் ஆண்டுக்கு 1.4 பேரல் எண்ணெயை பயன்படுத்துகிறார் என்றால், சீனாவில் ஒருவர் ஆண்டுக்கு 4.3 பேரல்களை பயன்படுத்துகிறார். இதில் விஷயம் என்னவென்றால் இரு நாடுகளின் மக்கள் தொகையும் கிடைத்தட்ட சமமாக உள்ளது.
பொருளாதாரம் - கச்சா எண்ணெய்: ஒரு நாட்டின் கச்சா எண்ணெய் நுகர்வு என்பது மக்கள் தொகை மற்றும் வருமானம் ஆகிய இரு காரணிகளைப் பொறுத்தது. ஒரு நபரின் ஆண்டு வருமானம் 4,000 டாலர்களைத் தாண்டும்போது, அந்நாட்டில் பொருட்கள் தேவையின் sweet spot என்ற நிலையை அடைகிறது.
இந்த sweet spot நிலையில், அந்நாட்டின் தொழில்மயமாக்கல் மற்றும் நகரமயமாக்கல் வேகமெடுத்து, பொருளாதார வளர்ச்சியும் எண்ணெய் தேவையும் உயரும். சீனா 2001-ல் இந்த sweet spot புள்ளியை அடைந்து, அதன் எண்ணெய் தேவை பெரிய அளவில் உயர்ந்தது. இந்தியா 2006-ல் இதை அடைந்தாலும், எதிர்பார்த்த அளவு எண்ணெய் தேவை உயரவில்லை.
இந்தியா தொய்வு: 2010 முதல் 2015 வரையிலான காலத்தில், சீனாவின் கச்சா எண்ணெய் தேவை மொத்தமாக நாளொன்றுக்கு 3.7 மில்லியன் பேரல்களாக உயர்ந்தது, இதை இந்தியாவால் இன்னும் எட்டப்படாத ஒரு பெரிய வளர்ச்சியாகவே உள்ளது.
இதேபோல் பிரேசில், இந்தோனேசியா, பாகிஸ்தான் போன்ற வளரும் நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவை வளர்ச்சி பெரியதாக இருந்தாலும், சீனாவின் உச்சக்கட்ட வளர்ச்சியை விட இந்தியாவின் நுகர்வின் அளவு மிகவும் குறைவாகவே உள்ளது.
சீனாவும் இந்தியாவும்: சீனாவின் எண்ணெய் தேவை வளர்ச்சிக்கு அதன் பொருளாதார வளர்ச்சி மாடல் முக்கிய காரணமாக இருந்தது. சீனா எண்ணெயை அதிகம் பயன்படுத்தும் கனரக தொழில்கள், உற்பத்தித் துறை, மற்றும் பொது உள்கட்டமைப்பு முதலீடுகளை மையமாகக் கொண்டு தனது பொருளாதாரத்தை வளர்ந்தது.
ஆனால், இந்தியா சேவைத் துறையை மையமாகக் கொண்டு வளர்ந்தது, உற்பத்தி துறையை ஒப்பீட்டளவில் சேவை துறைக்கு குறைவான எரிசக்தி இருந்தாலே போதுமானது. இதனால், இந்தியாவில் எண்ணெய் கச்சா எண்ணெய் தேவை சீனாவைப் போல பெரிய அளவில் உயரவில்லை. இந்த பொருளாதார மாதிரிகளின் வேறுபாடு தான், இந்தியாவால் உபரி கச்சா எண்ணெய் உற்பத்தியை நுகர முடியவில்லை.
இது மறைமுகமாக சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள், ஈராக் போன்ற நாடுகளின் வளர்ச்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. சீனாவின் கச்சா எண்ணெய் இழப்பை இந்தியா பூர்த்தி செய்யும் என கனவு கண்ட வளைகுடா நாடுகளுக்கு இது பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.
2025-ல் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளின் எண்ணெய் தேவை வளர்ச்சியும் பெருந்தொற்று காலத்திற்குப் பிறகு மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா பிரதமர் மோடி? ரம்ஜான் நாளில் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை..!!

எல்பிஜி தட்டுப்பாட்டை சரி செய்ய அமெரிக்காவை நாடும் இந்தியா..!! நிலைமை எப்போது சீராகும்?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

சிலிண்டர் பிரச்சனைக்கு தீர்வு: அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்தடைந்தது மிகப்பெரிய எல்பிஜி கப்பல்!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!



Click it and Unblock the Notifications