சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிரிஸ்டாலினா ஜார்ஜீவா இந்தியா, சீனா போன்ற நாடுகள் சர்வதேச வளர்ச்சியில், நடப்பு ஆண்டில் முக்கிய பங்கு வகிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு உலக பொருளாதாரம் 3 சதவீதத்திற்கு குறைவாகவே வளர்ச்சி காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் இருந்து சில நாடுகள் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன. குறிப்பாக ஆசிய நாடுகளில் இந்தியா மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆக அந்த வகையில் இந்தியாவும், சீனாவும் உலக வளர்ச்சியில் நடப்பு ஆண்டில் முக்கிய பங்கு வகிக்கலாம். மற்ற நாடுகளும் ஏற்றத்தினை எதிர்கொள்ளலாம் என ஜார்ஜீவா கூறியுள்ளார்.
தற்போது சர்வதேச அளவில் பொருளாதாரம் வளர்ந்து வரும் சூழலில், தற்போது மீண்டும் கொரோனாவானாது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதற்கிடையில் ரஷ்யா - உக்ரைன் பிரச்சனை என்பது 1 வருடத்தினையும் தாண்டியும் இருந்து வருகின்றது. ஏற்கனவே சர்வதேச பொருளாதாரம் என்பது 6.1 சதவீதமாக இருந்தது, 3.4 சதவீதமாக சரிவினைக் கண்டுள்ளது.
குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் மேலும் சரிவினைக் கண்டுள்ளது. இதன் காரணமாக வறுமை மற்றும் பசி என்பது இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் இன்னும் ஒரு ஆபத்தான போக்கு என்பது தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறைந்த வருமானம் கொண்ட நாடுகள், மற்றும் பொருளாதார மந்த நிலையால் தேவையானது சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2023ம் ஆண்டின் வளர்ச்சி விகிதத்தில் 90% முன்னேறிய பொருளாதார நாடுகள் சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கி நெருக்கடி குறித்து பேசிய ஜார்ஜீவா, 2008 நெருக்கடிக்கு பிறகு உலகளாவிய வங்கி அமைப்பானது பல மாற்றங்களை கண்டுள்ளது. வங்கிகளில் மற்றும் அல்ல மற்ற துறைகளிலும் இதுபோன்ற கவலைகள் என்பது உள்ளன என சுட்டிக் காட்டியுள்ளார். மொத்தத்தில் சர்வதேச அளவிலான பொருளாதாரம் என்பது சரிவினைக் கண்டாலும், இந்திய மற்றும் சீனாவின் பொருளதாரம் என்பது வளர்ச்சி பாதையில் இருக்கலாம் என்பது இந்திய சந்தைக்கு சாதகமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications