இந்தியா மற்றும் இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளின் பத்திர சந்தையானது, சர்வதேச சந்தையுடன் ஒபபிடும்போது பரவாயில்லை எனும் விதமாக காணப்படுகின்றது.
சர்வதேச அளவில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில், கடன் பத்திரங்களில் அதிக ஏற்ற இறக்கம் நிலவி வருகின்றது.
மூன்றாவது காலாண்டில் சீனா உள்பட பல நாடுகளின் பத்திர சந்தையானது சரிவில் காணப்படுகிறது. குறிப்பாக இரு நாடுகளின் இறையாண்மை கடன் வளர்ச்சி விகிதமானது முறையே 0.4% மற்றும் 1.5% என்ற அளவுக்கு குறைந்த இழப்பினை கண்டுள்ளது. இது ஆசிய நாடுகளில் மிக சின்றத செயல்திறன் கொண்ட சீனாவினையே பின்னுக்கு தள்ளியுள்ளது.
இந்தியா, இந்தோனேஷியா தான் பெஸ்ட்
மூன்றாவது காலாண்டில் சர்வதேச சந்தையில் நிலவி வரும் செல் ஆஃப் நிலைக்கு மத்தியில், இந்தியா மற்றும் இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகள் சற்று பரவாயில்லை எனும் விதமாக காணப்படுகிறது.
மூன்றாவது காலாண்டில் தென் கொரியா, தாய்வான், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், மலேசியா, சீனா, இந்தோனேஷியா, சீனா உள்ளிட்ட நாடுகள், இந்தியா, இந்தோனேஷியாவுக்கு பின்னால் உள்ளன.
அமெரிக்கா, சீனா கூட சரிவு
இது அமெரிக்க உள்ளிட்ட பத்திர சந்தைகளின் ஏற்ற இறக்கத்தின் மத்தியில், இந்தியா, இந்தோனேஷியா சந்தைகள் பாதுகாப்பினை கொடுக்கலாம். குறிப்பாக சீனாவிலும் தற்போது மந்த நிலையே காணப்படும் நிலையில், சீனாவிலும் முதலீடுகள் குறைந்துள்ளது. சீனாவின் பத்திர சந்தையில் ஏப்ரல் மாதம் முதல் சற்று சரிவிலேயே காணப்படுகிறது.
ரூபாய் தான் பெஸ்ட்
ரிசர்வ் வங்கி தொடர்ந்து பணவீக்கத்தினை கட்டுக்குள் வைக்கும் விதமான வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகின்றது. இது பத்திர சந்தைக்கும் ஏற்றம் காண வழிவகுத்துள்ளது. கடந்த 3 மாதங்களில் ஆசிய நாணயங்களில் இந்தியா ரூபாயின் மதிப்பானது சிறந்ததாக மாறியுள்ளது. இது இந்திய சந்தையில் மீண்டும் அன்னிய முதலீடுகள் இந்திய சந்தைக்கு திரும்ப காரணமாக அமைந்துள்ளது.
மேலும் அதிகரிக்கலாம்
தொடர்ந்து சர்வதேச சந்தைக்கு மத்தியில் இந்தியாவின் வளர்ச்சி விகிதமும் சற்றே பரவாயில்லை எனும் விதமாகவே காணப்படுகிறது. சில வாரங்களுக்கு முன்பு வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்ட நிலையில், வரவிருக்கும் ரிசர்வ் வங்கி கூட்டத்திலும் வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ரூபாய் மதிப்பு மேலும் ஏற்றம் காணலாம். இது பத்திர சந்தைக்கு சாதகமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா பிரதமர் மோடி? ரம்ஜான் நாளில் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை..!!

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்



Click it and Unblock the Notifications