இந்தியா - சிங்கப்பூர் யூபிஐ சேவை.. உண்மையில் யாருக்கு லாபம்? தினசரி லிமிட் எவ்வளவு? இலவசமா?

டிஜிட்டல் பேமெண்ட் மூலம் பணப் பரிவர்த்தனை நாளுக்கு நாள் எளிதாகி வரும் வேளையில், நாடுகளுக்கு மத்தியிலான பணப் பரிமாற்றத்தை எளிதாக்கும் வகையில் பல மாத பேச்சுவார்த்தை முயற்சிகளுக்குப் பின்பு இந்தியாவில் முக்கிய டிஜிட்டல் பேமெண்ட் தளமான யூபிஐ மற்றும் சிங்கப்பூரில் இயங்கும் UPI போன்ற Paynow தளம் சர்வதேச பணப் பரிமாற்றத்தில் இரு நாடுகளும் புதிய புரட்சியைச் செய்ய உள்ளது.

டிஜிட்டல் பேமெண்ட் துறையில் வல்லரசு நாடுகள் கூடச் செய்ய முடியாத புரட்சியை இந்தியா தனது யூபிஐ சேவை மூலம் செய்துள்ளது. சொல்லப்போனால் யூபிஐ சேவை வாயிலாகப் பேமெண்ட் செய்வது எளிதாவது மட்டும் அல்லாமல் விசா, மாஸ்டர்கார்டு போன்ற டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தும் எண்ணிக்கையும், அளவும் பெரிய அளவில் குறைந்துள்ளது.

இந்த வெற்றியின் அடுத்தக்கட்டமாக இந்திய UPI, சிங்கப்பூர் Paynow இணைப்பு மூலம் சர்வதேச பணப் பரிமாற்றத்தில் பெரிய அளவிலான மாற்றம் நிகழ உள்ளது. இதனால் யாருக்கு லாபம்..? தினசரி லிமிட் எவ்வளவு? இந்தியாவில் டிஜிட்டல் பரிமாற்றம் போல் இதுவும் இலவசமா?

 ஆர்பிஐ, MAS

ஆர்பிஐ, MAS

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் முன்னிலையில், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் மற்றும் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் (MAS) நிர்வாக இயக்குநர் ரவி மேனன் இந்தியாவின் UPI மற்றும் சிங்கப்பூர் Paynow இணைப்பைத் தொடங்கி வைத்தனர்.

UPI-PayNow ஒருங்கிணைப்பு

UPI-PayNow ஒருங்கிணைப்பு

UPI-PayNow ஒருங்கிணைப்பு மூலம் இந்தியா - சிங்கப்பூர் நாடுகளில் இருக்கும் மக்கள் பணத்தை ஒருவருக்கொருவர் பரிமாற்றம் செய்துக்கொள்ள முடியும். இந்த இணைப்பு மூலம் விரைவாகவும், பாதுகாப்பாகவும், மலிவு விலையிலும் இரு நாட்டு எல்லைகளைத் தாண்டி பணத்தை அனுப்ப முடியும்.

UPI-ஐடி

UPI-ஐடி

வங்கிக் கணக்குகள் அல்லது இ-வாலெட்டுகளில் (VPA) வைத்திருக்கும் பணத்திற்கான UPI-ஐடி, செல்போன் எண் அல்லது விர்ச்சுவல் பேமெண்ட் அட்ரஸ் மட்டுமே பயன்படுத்தி இந்தியாவிலிருந்து பணத்தை அனுப்பவோ பெறவோ முடியும்.

வங்கிகள் பங்கேற்பு

வங்கிகள் பங்கேற்பு

ஆர்பிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி எஸ்பிஐ, ஐஓபி, இந்தியன் வங்கி, ஐசிஐசிஐ வங்கி பணத்தை அனுப்புவும், பெறவும் செய்யும் சேவையைப் பெற உள்ளது. ஆனால் ஆக்சிஸ் வங்கி, டிபிஎஸ் வங்கி பணத்தைச் சிங்கப்பூர் கணக்கில் இருந்து இந்திய கணக்கிற்கு மட்டுமே பெற முடியாது. இதேபோல் சிங்கப்பூர் நாட்டின் DBS - Singapore மற்றும் Liquid Group ஆகிய இரண்டும் பணத்தைப் பெறவும், அனுப்பவும் உள்ளது.

60000 ரூபாய்

60000 ரூபாய்

UPI-PayNow ஒருங்கிணைப்பு மூலம் இந்தியா - சிங்கப்பூர் மக்கள் ஒரு நாளுக்கு 1000 சிங்கப்பூர் டாலர் அல்லது இந்திய ரூபாயில் 60000 ரூபாய் அளவிலான தொகையைப் பணப் பரிமாற்றம் செய்ய முடியும். இந்தப் பரிமாற்றம் மூலம் வேகமாகப் பணத்தை அனுப்பவது மட்டும் அல்லாமல் பேலென்ஸ் உடனடியாக அப்டேட் ஆகிவிடும். இதை மக்கள் உடனடியாகப் பயன்படுத்தவும் முடியும்.

யாரெல்லாம் பயன்படுத்த முடியும்

யாரெல்லாம் பயன்படுத்த முடியும்

UPI-PayNow ஒருங்கிணைப்பு மற்றும் இந்தச் சேவையை அங்கிகரிக்கும் வங்கிகளில் வங்கி கணக்கு வைத்திருந்தால் மட்டுமே இந்தத் தேவையைப் பெற முடியும். உதாரணமாக இந்தியாவில் இருப்பவர் எஸ்பிஐ வங்கியிலும், சிங்கப்பூரில் இருப்பவர் DBS-Singapore வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்தி 60000 இந்திய ரூபாய் வரையில் பணத்தைப் பரிமாற்றம் செய்ய முடியும்.

கட்டணம்

கட்டணம்

இந்தியா - சிங்கப்பூர் மத்தியிலான பணப் பரிமாற்றத்திற்குக் கட்டணம் உள்ளது, இலவசம் கிடையாது. வங்கிகளுக்கு மத்தியில் இந்தக் கட்டணம் மாறுபடும், இதேபோல் தொகையின் அடிப்படையில் கட்டணம் மாறுபடும். இதனால் பேமெண்ட் செய்யும் போது பரிமாற்ற கட்டணம் கணக்கிடப்பட்டுக் கழிக்கப்படும்.

எந்த வங்கிகள்

எந்த வங்கிகள்

ஆக்சிஸ் வங்கி
டிபிஎஸ் வங்கி இந்தியா
ஐசிஐசிஐ வங்கி
இந்தியன் வங்கி
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
ஸ்டேட் பேங் ஆப் இந்தியா

UPI-PayNow ஒருங்கிணைப்பின் முதல் கட்டமாக இந்த வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இந்த சேவை அனுமதிக்கப்பட உள்ளது.

யாருக்கு லாபம்..?

யாருக்கு லாபம்..?

 

சிங்கப்பூரில் பணியாற்றும் மகன் அல்லது மகள் தங்களுடைய பெற்றோருக்கு அவசரமாகப் பணத் தேவை உதாரணமாக மருத்துவத் தேவை போன்ற முக்கியமான விஷயத்திற்கு இந்த சேவை மூலம் இருந்த இடத்தில் இருந்துக்கொண்டு இந்தியாவில் இருக்கும் பெற்றோர்க்கு நொடிகளில் பணத்தை அனுப்ப முடியும்.

 

இதேபோல் இந்தியாவில் இருக்கும் பெற்றோர் தங்களது மகன் அல்லது மகள் சிங்கப்பூரில் படித்துக்கொண்டு இருந்தால் அவர்களுக்குத் தேவையான பணத்தை உடனடியாக அனுப்ப முடியும்.

இப்படி நண்பர்களுக்கு உதவி, வெளிநாட்டில் பணியாற்றும் கணவன் இந்தியாவில் இருக்கும் மனைவிக்கோ அல்லது பிள்ளைகளுக்கு உதவி, இப்படிப் பல வகையில் இது பெரிய அளவில் உதவும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+