ரெசிப்ரோக்கல் வரி விதிப்பு விவகாரம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் இந்தியா இடையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான, வழிகாட்டும் குறிப்பு விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும், கூடிய விரைவில் பேச்சுவார்த்தை தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 26 சதவீத வரியை விதித்திருக்கிறார் அதிபர் டொனால்ட் டிரம்ப். இந்தியா அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிகபட்ச வரி விதிப்பதாக கூறி அவர் இந்த போட்டி வரியை அறிவித்தார். தற்போதைக்கு இந்த போட்டி வரி 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் டிரம்ப் நிர்வாகத்துடன் மத்திய அரசு சமாதான பேச்சு வார்த்தையை முன்னெடுத்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே வர்த்தக ரீதியான பேச்சு வார்த்தைகள் தொடங்க இருக்கின்றன. இதற்கு முக்கியமான வழிகாட்டும் குறிப்பு விதிமுறைகளை அமெரிக்காவும் இந்தியாவும் இறுதி செய்திருப்பதாக எக்னாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிடுகிறது. இந்த வழிகாட்டுதலின் அடிப்படையில் தான் இரு நாடுகளுக்கும் இடையிலான வரி சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது.
இந்த அறிவிப்பானது அமெரிக்க துணை அதிபர் ஜே டி வான்ஸ் தன்னுடைய இந்திய பயணத்தின் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். இதனை அடுத்து ஜே டி வான்ஸ் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இருவரும் இணைந்து ஒரு கூட்டான அறிக்கையை வெளியிட்டனர் . அந்த அறிக்கையில் பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதற்கான வழிகாட்டும் விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசின் வர்த்தகத் துறை பிரதிநிதியான ஜேமிஸன் கிரீர் இந்த தகவலை உறுதிப்படுத்தி இருக்கிறார். அமெரிக்க வர்த்தக துறையும் இந்திய வர்த்தக அமைச்சகமும் போட்டி வரி விதிப்பு சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அடிப்படை வழிகாட்டு நெறிமுறைகளை இறுதி செய்திருக்கிறது என அறிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே சிறந்த நட்புறவு இருந்தாலும் வர்த்தக ரீதியில் பார்க்கும் போது இந்தியா அமெரிக்கா இடையிலான வரி விதிப்பு நடைமுறை பல்வேறு முரண்பாடுகள் இருக்கின்றன.
தற்போது நடைபெறக்கூடிய இந்த பேச்சு வார்த்தை இரு நாடுகளுக்கும் வளர்ச்சியை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த வரி சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்து வர்த்தக ரீதியிலான ஒப்பந்தம் கையெழுத்தாகும் போது இரு நாடுகளுக்கும் புதிய புதிய சந்தைகளில் வாய்ப்புகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா துணை அதிபர் ஜே டி வான்ஸ் தன்னுடைய மனைவி உஷா வான்ஸ் மற்றும் 3 குழந்தைகளோடு இந்தியாவிற்கு பயணம் செய்திருக்கிறார். உஷா வான்ஸ் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர். அவருடைய பெற்றோர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள். 1970களில் அவர்கள் அமெரிக்காவிற்கு குடி பெயர்ந்தனர். ஜே டி வான்ஸ் குடும்பத்தினர் டெல்லியில் அக்சர்தாம் கோயிலுக்கு சென்று வழிபட்டனர். இதனை தொடர்ந்து அவர்கள் டெல்லியில் இருந்து ஜெய்ப்பூருக்கு பயணம் செய்தனர்.
அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை மற்றும் ஒப்பந்தம் இரு நாடுகளின் வளர்ச்சிக்கும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக டிரம்ப் நிர்வாகம் வரி அறிவிப்பில் தீவிரமாக இருப்பதால் முடிந்தவரையில் விரைவாக இந்த பேச்சு வார்த்தையை முடித்து ஒப்பந்தத்தை எட்ட வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications