அமெரிக்க அரசின் வரிவிதிப்பு நடவடிக்கையால் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதனை அடுத்து இந்தியா, சீனா மற்றும் ரஷ்யாவுடன் நெருக்கம் காட்ட தொடங்கியது. இந்த சூழலில் அமெரிக்க அரசு மீண்டும் இந்தியாவுடன் ஒரு சமூகமான உறவை மேற்கொள்வதற்கான பணிகளை தொடங்கியிருக்கிறது.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி உக்ரைன் போருக்கு இந்தியா தான் நிதி அளிக்கிறது என குற்றம்சாட்டி வரும் அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு 50% இறக்குமதி வரியை விதித்துள்ளது. இதனால் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணேய் வாங்குவதை நிறுத்தி கொள்ளும் என கருதப்பட்டது. ஆனால் இந்தியாவோ டிரம்பின் அச்சுறுத்தலுக்கு அடிபணியவில்லை. தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குகிறது.

அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கை பிரிந்து இருந்த இந்தியா சீனா இடையே நட்புறவை ஏற்படுத்தி இருக்கிறது. பிரதமர் மோடி அண்மையில் சீனா சென்றார். சீனாவில் சீன அதிபர் மற்றும் ரஷ்ய அதிபர்களை சந்தித்து மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை அடுத்து இந்தியாவை நாம் சீனாவிடம் இழந்துவிட்டோம் என வெளிப்படையாகவே கூறினார் டிரம்ப்.
இந்தியா சீனா மற்றும் ரஷ்யா நாடுகள் இடையிலான நெருக்கம் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் டிரம்ப் அரசு இறங்கி வர தொடங்கியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் , பிரதமர் மோடி தன்னுடைய சிறந்த நண்பர் என்றும் கூறியிருந்தார். டொனால்ட் டிரம்ப்பின் இந்த சமூக வலைதள பதிவுகளை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியும் இந்தியாவும் அமெரிக்காவும் இயற்கையான நண்பர்கள் அதிபர் டிரம்புடன் பேசுவதற்கு ஆவலுடன் இருக்கிறேன் என தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிலளித்திருந்தார்.
இதனை அடுத்து இரு நாடுகளுக்கு இடையிலான இந்த வரி மோதல்கள் ஒரு முடிவுக்கு வந்து சுமூகமான உறவு எட்டப்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்து இருக்கிறது. கூடிய விரைவில் பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் டிரம்பும் தொலைபேசி வாயிலாக முக்கிய விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கின்றனர் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
மத்திய அரசின் வர்த்தக பேச்சுவார்த்தை குழுவின் தலைவராக இருக்கக்கூடிய ராஜேஷ் அகர்வால் தலைமையிலான குழுவினர் அடுத்த வாரம் அமெரிக்காவிற்கு சென்று அமெரிக்கா அரசு அதிகாரிகளோடு வர்த்தக பேச்சு வார்த்தையை தொடங்க இருப்பதாக எக்னாமிக் டைம்ஸ் செய்தி குறிப்பிட்டு இருக்கிறது. டிரம்ப் மற்றும் மோடி ஆகியோர் இடையிலான தொலைபேசி பேச்சு வார்த்தை , இந்திய அதிகாரிகள் அமெரிக்காவிற்கு சென்று நடத்தப் போகும் பேச்சு வார்த்தைகளின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான வரி பிரச்சனைக்கு ஒரு முடிவு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.
More From GoodReturns

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!

டிரம்ப் வாயை திறந்தாலே பொய் தானா? - ஈரான் ராணுவம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!!

டிரம்ப் செய்யும் தில்லுமுல்லு.. உண்மையை உடைத்த ஈரான் தலைவர்..!

டிரம்ப் ஊதும் மகுடிக்கு கெவின் வார்ஷ் ஆடுவாரா..? தலைதூக்கும் ரெசிஷன் அச்சம்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்வது என்ன?

ஈரானுக்கு 48 மணி நேர கெடு விதித்த டிரம்ப்..!! பதிலுக்கு வஜ்ராயுதத்தை கையில் எடுத்த ஈரான்..!!

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா பிரதமர் மோடி? ரம்ஜான் நாளில் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை..!!

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!



Click it and Unblock the Notifications