டெல்லி: அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் ஜூன் 25ஆம் தேதி கையெழுத்தாகும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மணி கண்ட்ரோல் தளம் வெளியிட்டுள்ள செய்தியில் பிடிஐ நிறுவனம் இந்த செய்தியை வெளியிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சு வார்த்தைகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில் தான் ஜூன் 25ஆம் தேதிக்குள் இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து ஆகிவிடும் என தகவல்கள் தெரிவிப்பதாக பிடிஐ நிறுவனம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. இருநாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் ஒப்பந்தம் எட்டப்படும் என்றும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றிருக்கும் மூத்த அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக பிடிஐ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிடுகிறது.

அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் பல்வேறு நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிகபட்ச வரியை விதித்தார். குறிப்பாக உலகிலேயே அமெரிக்க பொருட்களுக்கு அதிகபட்ச வரி விதிக்கும் நாடாக இந்தியா இருக்கிறது என கூறிய டிரம்ப், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 26 சதவீத வரி விதிப்பை அறிவித்தார். கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி இந்த வரி விதிப்பு அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டார்.
இந்த சூழலில் நிர்வாகத்துடன் மத்திய அரசு வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது தொடர்பான பேச்சு வார்த்தைகளை தீவிரமாக நடத்தி வருகிறது. தற்போதைக்கு டிரம்ப் அரசு ஜூலை 9ஆம் தேதி வரை இந்த வரி விதிப்பு நடவடிக்கையை நிறுத்தி வைத்திருக்கிறது. அதற்குள் இரு நாடுகளுக்கு இடையிலும் பரஸ்பரம் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
இந்தியா சார்பில் வர்த்தக துறையை சேர்ந்த சிறப்பு செயலாளரான ராஜேஷ் அகர்வால் அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த வாரம் நான்கு நாட்கள் பயணமாக அமெரிக்காவிற்கு சென்று இருந்தார் .அங்கே அமெரிக்க வர்த்தகத் துறை அதிகாரிகளை சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாடுகளுக்கும் இடையே தற்போது இருக்கக்கூடிய வர்த்தகம் என்னென்ன ,எந்த துறைகளில் எல்லாம் ஏற்றுமதி இறக்குமதி நடைபெறுகிறது என்பன உள்ளிட்ட விரிவான ஆலோசனைகள் அப்போது நடைபெற்றன.
கடந்த வாரம் மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சரான பியூஸ் கோயலும் அமெரிக்காவிற்கு சென்றிருந்தார். அப்போது இரு நாடுகளுக்கு இடையிலான இந்த வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான மிக முக்கியமான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பயணத்தின் போது அமெரிக்க வர்த்தகத்துறை அமைச்சர் லட்னிக்கை அவர் இரண்டு முறை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இதற்கிடையே தான் முதல் கட்டமாக இரு நாடுகளுக்கும் இடையே இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்துவது என முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த இடைக்கால வர்த்தக ஒப்பந்தமானது ஜூன் 25ஆம் தேதிக்குள் கையெழுத்திடப்பட இருப்பதாகவும் இதற்கான ஆவணங்களை இறுதி செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது.
ஜூலை 7ஆம் தேதி வரை டிரம்ப் இறக்குமதி வரிகளுக்கு தடை விதித்துள்ளதால் அதற்குள்ளாக ஒரு இடைக்கால ஒப்பந்தத்தை ஏற்படுத்தி விட வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் முடிந்த உடன் முதல் கட்ட இருநாட்டு வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சு வார்த்தையை வரும் அக்டோபர் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என இரு நாடுகளும் முடிவு செய்து இருக்கின்றன.

அமெரிக்காவை பொறுத்தவரை அந்நாட்டு வர்த்தக கூட்டாளிகளில் இந்தியாவும் முக்கியமான ஒரு நாடாக இருந்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையான வர்த்தகத்தின் மதிப்பு 131.84 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் 18 சதவீதம் அமெரிக்க சந்தைக்கு தான் செல்கிறது. அதேபோல இந்தியா இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் 6 சதவீத பொருட்கள் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. ஒட்டுமொத்தமாக நாட்டின் மொத்தமாக நாட்டின் 10.7 சதவீத சரக்கு வர்த்தகமானது அமெரிக்காவுடன் தான் நடைபெறுகிறது.
அமெரிக்காவைப் பொறுத்தவரை இந்தியாவுடன் 41.18 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வர்த்தக பற்றாக்குறை கொண்டிருக்கிறது. இதனை சரி செய்ய வேண்டும் என இரு தரப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. 2030ஆம் ஆண்டுகளுக்குள் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் என்பது 500 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயரும் என சொல்லப்படுகிறது.
இந்த சூழலில் இரு நாடுகளுக்கும் பலனளிக்கும் வகையிலான ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது தொடர்பாக தான் தற்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஒருவேளை இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து இடப்பட்டால் இந்தியாவை சேர்ந்த பல்வேறு பொருட்கள் எந்தவித வரியும் இல்லாமல் அமெரிக்க சந்தை நுழைய முடியும். அதேபோல அமெரிக்காவை சேர்ந்த பல்வேறு பொருட்கள் எந்தவொரு வரியும் இல்லாமல் இந்திய சந்தையில் நுழைய முடியும்.
இந்தியாவை பொருத்தவரை ஆடைகள் , நவரத்தின கற்கள், நகைகள் ,தோல் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் ,ரசாயனங்கள் ,கடல் வாழ் உயிரினங்கள், எண்ணெய் வித்துக்கள், வாழைப்பழம் ,திராட்சை உள்ளிட்டவற்றுக்கான இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் அல்லது நீக்க வேண்டும் என அமெரிக்காவிடம் வலியுறுத்தி இருக்கிறது. அமெரிக்காவைப் பொறுத்தவரை வாகன உதிரி பாகங்கள், குறிப்பாக மின்சார வாகன துறையில் பயன்படுத்தக்கூடிய பாகங்கள், மதுபானங்கள், பெட்ரோ கெமிக்கல் பொருட்கள் ,பால் சம்பந்தப்பட்ட பொருட்கள், ஆப்பிள், பாதாம் மற்றும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் ஆகியவற்றுக்கு இந்தியா இறக்குமதி வரியை நீக்க வேண்டும் அல்லது குறைக்க வேண்டும் என வலியுறுத்துகிறது.
அண்மையில் தான் இந்தியா பிரிட்டனுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டது. குறிப்பிட்ட ஒரு நாட்டுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது இந்திய தயாரிப்பாளர்களுக்கு அந்த நாட்டில் ஒரு சந்தை வாய்ப்பு கிடைக்கும், அதே போல அந்த நாட்டு வணிகர்கள் இந்திய சந்தையில் நுழையும் போது ஏற்கனவே இந்தியாவில் இருக்கும் நிறுவனங்கள் பொருளின் தரத்தை உயர்த்தி போட்டியிடக்கூடிய அளவுக்கு விலையை மாற்றும். எனவே நுகர்வோருக்கும் இது பலன் அளிப்பதாக இருக்கும். இந்தியா தற்போதைக்கு ஜப்பான், தென்கொரியா , பிரிட்டன் ஆகிய நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?



Click it and Unblock the Notifications