டெல்லி: உலகின் பல்வேறு டாப் நாடுகளும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில், இந்தியாவின் நிலை சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது.
கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு இப்போது உலகின் அனைத்து நாட்டு மத்திய வங்கிகளும் வட்டி விகிதங்களைத் தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இதன் காரணமாக உலகின் டாப் நாடுகள் அனைத்தும் பொருளாதார சிக்கலை எதிர்கொண்டுள்ளது.
இருப்பினும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இப்போது வரை மோசமாக இல்லை. இதனிடையே ஏப்ரல் மாதத்தில் நாட்டின் உற்பத்தி எப்படி இருந்தது என்பது குறித்த முக்கிய தரவுகள் வெளியாகியுள்ளது.
புதிய ஆர்டர்கள் மற்றும் உற்பத்தியில் ஏற்பட்ட வளர்ச்சி காரணமாகக் கடந்த நான்கு மாதங்களில் இந்தியாவின் தொழிற்சாலை செயல்பாடு கடந்த ஏப்ரல் மாதம் வேகமாக வளர்ந்துள்ளதாகச் சமீபத்தில் வெளியான கணக்கெடுப்பில் கூறப்பட்டுள்ளது. இது மக்களிடையே தேவை அதிகரிப்பதையே காட்டுகிறது.

சர்வதேச அளவில் பல நாடுகளில் வளர்ச்சியைக் குறைத்தாலும், இந்தியா வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதாரங்களில் ஒன்றாக இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
வளர்ச்சி: S&P குளோபல் தொகுத்துள்ள உற்பத்தி குறியீடு கடந்த மாதம் மார்ச் 56.4ல் இருந்த நிலையில், இப்போது அது 57.2 ஆக அதிகரித்துள்ளது. முன்பு உற்பத்தி குறியீடு 55.8ஆக இருக்கும் எனக் கூறப்பட்ட நிலையில், அதைப் பொய்யாக்கி வளர்ச்சி அதிகரித்துள்ளது.
இது குறித்து எஸ்&பி குளோபலின் பொருளாதார இணை இயக்குநர் பொலியானா டி லிமா கூறுகையில், "புதிய ஆர்டர்களில் விரைவாக இருப்பதைப் பிரதிபலிக்கும் வகையில், ஏப்ரல் மாதத்தில் உற்பத்தி வளர்ச்சி அதிகரித்துள்ளது. ஒப்பீட்டளவில் லேசான விலைவாசி ஏற்றம், அதிகரிக்கும் சர்வதேச விற்பனை, விநியோக சங்கிலி ஏற்பட்ட மாற்றத்தால் நிறுவனங்கள் பலனடைந்தன.
இந்திய உற்பத்தியாளர்கள் முன்னோக்கிச் செல்ல ஏராளமான வாய்ப்புகள் இருப்பதையே இது காட்டுகிறது. இதுவரை 2023 இல் வேலைவாய்ப்பு, உள்ளீடு என அனைத்தும் அதிகரித்து நல்ல நிலையிலேயே இருக்கிறது" என்று அவர் தெரிவித்தார்.
வளர்ச்சி அதிகம்: புதிய ஆர்டர்கள் மற்றும் உற்பத்தி என இரண்டும் 13 மாதங்களில் முதல் முறையாகக் கடந்த மார்ச் மாதம் சரிந்த நிலையில், அது ஏப்ரல் மாதம் மீண்டும் அதிகரித்துள்ளது. அதேபோல ஏப்ரல் மாதம் வெளிநாட்டுத் தேவையும் கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

இது குறித்து டி லிமா மேலும் கூறுகையில், "உற்பத்தியாளர்கள் வளர்ச்சி குறியீடுகளைப் பார்த்து உற்சாகமாகவே உள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் வளர்ச்சி குறியீடுகள் குறைந்த நிலையில், இப்போது அது மீண்டும் அதிகரித்துள்ளது நல்ல சமிக்கையாகும்" என்றார்.
விலைவாசி குறையாது: அதேபோல ஏப்ரல் மாதத்தில் இன்புட் காஸ்ட் எனப்படும் மூலப்பொருட்களின் செலவுகள் கணிசமாக உயர்ந்துள்ளது. இருப்பினும், தேவையும் அதிகரித்த நிலையில், நிறுவனங்களால் அந்தச் சுமையை வாடிக்கையாளர்களுக்கு பாஸ் செய்ய முடிந்தது. இதன் மூலம் சில்லறை பணவீக்கம் தற்போதைய சூழலில் குறைய வாய்ப்பில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வட்டி விகிதத்தை உயர்த்தி வருவதே விலைவாசி குறையாமல் இருக்க காரணமாக இருக்கும்.
இந்த நிதியாண்டில் பணவீக்கம் சராசரியாக 5.3% ஆகவும், அடுத்த 5.0% ஆகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது இந்திய ரிசர்வ் வங்கியின் 4.0% இலக்கை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications