இந்திய பொதுத்துறை வங்கிகளை வெளிநாட்டுக் கணக்குகளில் வைத்திருக்கும் பணத்தை முழுமையாக வித்டிரா செய்த இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாக இரு அரசு அதிகாரிகள் மற்றும் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கெய்ர்ன் எனர்ஜி-க்கு எதிராக இந்திய அரசு தொடுத்த வழக்கில் இத்தனியார் நிறுவனத்திற்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்த நிலையில் நஷ்டஈடு தொகைக்கு ஈடாக வெளிநாட்டில் இருக்கும் பணம் மற்றும் சொத்துக்களைக் கைப்பற்றத் திட்டமிட்டு உள்ளதாகக் கெய்ர்ன் எனர்ஜி தெரிவித்துள்ள நிலையில், இந்திய அரசு பொதுத்துறை வங்கிகளுக்கு இப்படியொரு உத்தரவை வெளியிட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
கெய்ர்ன் எனர்ஜி
கெய்ர்ன் எனர்ஜி நிறுவனத்திற்கு எதிராக இந்திய அரசு வரி நிலுவை வழக்கு 6 வருடமாக நடந்து வரும் நிலையில், கடந்த மாதம் இவ்வழக்கின் தீர்ப்பை நடுவர் தீர்ப்பாயம் கெய்ர்ன் எனர்ஜி-க்குச் சாதகமாக வழங்கியது.
இதுமட்டும் அல்லாமல் இந்திய அரசு இந்தப் பிரிட்டன் நிறுவனத்திற்கு நஷ்ட ஈடாக வட்டியுடன் சேர்த்து சுமார் 1.2 பில்லியன் டாலர் தொகை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
1.2 பில்லியன் டாலர் நஷ்டஈடு
இந்நிலையில் கெய்ர்ன் எனர்ஜி தற்போது நடுவர் தீர்ப்பாயம் அறிவித்த 1.2 பில்லியன் டாலர் தொகைக்கு ஈடான இந்திய அரசுக்குச் சொந்தமான வெளிநாட்டுச் சொத்துக்களைக் கைப்பற்ற உள்ளதாக மிரட்டி வருகிறது. இந்திய அரசை விரைவில் நடுவர் தீர்ப்பாயம் அறிவித்த தீர்ப்பைச் செயல்படுத்த கெய்ர்ன் எனர்ஜி நிர்ப்பந்தம் செய்கிறது.
ConocoPhillips - வெனிசூலா அரசு
ஒரு வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் அரசு சொத்துக்களை ஒரு நிறுவனம் கைப்பற்ற முடியுமா என்றால் இதற்குப் பதில் முடியும் என்பது தான். அமெரிக்கா எண்ணெய் நிறுவனமான ConocoPhillips, 2 பில்லியன் டாலர் நஷ்டஈடு வழக்கிற்கு வெளிநாட்டில் வெனிசூலா அரசு சொந்தமான சொத்துக்களைக் கைப்பற்றியது. இதன் பின்பு வெனிசூலா அரசு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்துச் சொத்துக்களைத் திரும்பப் பெற்றது.
பல நாடுகளில் வழக்கு
இந்திய அரசுக்கு எதிராகத் தீர்ப்பு வெளியான நிலையில் கெய்ர்ன் எனர்ஜி தனது கிடைக்க வேண்டிய 1.2 பில்லியன் டாலர் அளவிலான தொகையை விரைவில் இந்தியாவிடம் இருந்து பெற வேண்டும் என நோக்கில் கெய்ர்ன் எனர்ஜி பிப்ரவரி மாதம் அமெரிக்க, பிரிட்டன், பிரான்ஸ், நெதர்லாந்து, சிங்கப்பூர் மற்றும் கியூபெக் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது.
தாமதமின்றிச் சொத்துக்கள் கைப்பற்றல்
பல நாடுகளில் வழக்குத் தொடுத்துள்ளதன் மூலம் அனைத்து நாடுகளில் இருக்கும் இந்திய சொத்துக்களை எவ்விதமான தாமதமின்றிக் கைப்பற்ற முடியும் என்ற நோக்கத்தில் இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளது கெய்ர்ன் எனர்ஜி.
6 வருட வழக்கு
கெய்ர்ன் எனர்ஜி நிறுவனத்திற்கு எதிராக இந்திய அரசு வரி நிலுவை வழக்கைக் கடந்த 6 வருடமாக நடந்த நிலையில் இனி மேலும் தாமதிக்க முடியாது என்பதால், கெய்ர்ன் எனர்ஜி வெளிநாட்டில் இருக்கும் இந்திய வங்கிக் கணக்குகளையும், விமானங்கள், இதர வெளிநாட்டுச் சொத்துக்களைக் கைப்பற்றுவதில் இறங்கும் என ஜனவரி மாதம் தீர்ப்பு வந்த போதே தெரிவித்துள்ளது.
சில நாட்களில் தீர்ப்பு
இந்நிலையில் கெய்ர்ன் எனர்ஜி பல நாடுகளில் தொடுத்துள்ள வழக்குகளின் தீர்ப்பு அடுத்த சில நாட்களில் வர உள்ள நிலையில் மோடி தலைமையிலான மத்திய அரசு பொதுத்துறை வங்கிகள் வெளிநாட்டில் வைத்திருக்கும் பணத்தை வித்டிரா செய்ய உத்தரவிட்டுள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications