இந்தியாவின் முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், நாடு "மிகவும் ஆபத்தான காலகட்டத்தில்" உள்ளதாக எச்சரித்துள்ளார். பிப்ரவரி 1 அன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ள மத்திய பட்ஜெட் 2026-27 அறிக்கை வழக்கமான குறுகிய கால இலக்குடன், நிவாரணங்களுடன் இல்லாமல் நீண்டகால பொருளாதார வளர்ச்சி - ஊக்க திட்டத்துடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இத்தகைய மாறுப்பட்ட நிலைபாடு பட்ஜெட்டில் மத்திய அரசு எடுக்கும் பட்சத்தில் இது நாட்டின் வளர்ச்சியை தொடர்ந்து நிலைநிறுத்தவும், பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்புகளை குறைக்கவும், உறுதியான சூழ்நிலையை உருவாக்கவும் உதவும் என்று PTI வீடியோவில் பேசிய ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

இந்தியா மீதும், இந்திய பொருளாதாரத்தின் மீதும், மத்திய அரசு எடுக்கும் முடிவுகள் குறித்தும் ரகுராம் ராஜன் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தாலும், பல நேரத்தில் அவருடைய எச்சரிக்கையும், கருத்துக்களையும் பொருளாதார வல்லுனர்கள் முக்கியமானதாக பார்க்கின்றனர்.
இந்த நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்ய தயாராகி வரும் வேளையில் ரகுராம் ராஜனின் கருத்துக்கள் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
மேலும் ரகுராம் ராஜன் பேசுகையில் இந்திய பட்ஜெட்டுகள் வரலாற்று ரீதியாக நீண்டகால பொருளாதார திட்டங்களுடன் இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். ஐந்தாண்டு திட்டங்கள் இருந்த காலத்தில்கூட இது இல்லை என்றும் குறிப்பிட்ட அவர், இந்த முறையை மாற்ற வேண்டிய அவசியம் உள்ளதாக தெரிவித்தார்.
"நமது பொருளாதாரம் மேலும் சுயசார்புடையதாகவும், வேகமாக வளர்ச்சியடையும் சந்தையாகவும் மாற வேண்டும். இதனால் உலக நாடுகள் இந்தியாவுடன் நட்பு பாராட்ட ஆர்வமாக முன்வரும்" என்றும் ரகுராம் ராஜன் கூறினார்.
பட்ஜெட் 2026 பொருளாதார பாதுகாப்புக்கு முக்கியம் என்று ராஜன் வலியுறுத்தினார். செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற தொழில்நுட்ப மாற்றங்கள் புதிய வாய்ப்புகளை உருவாக்கினாலும், உலக அளவிலான ஆபத்துகள் அதிகரித்துள்ளன. "இதனால் இந்தியா அருகில் இருக்கும் பணக்கார சந்தையை நம்பாமல், சொந்த சந்தையை வலுப்படுத்த வேண்டும்" என்று அவர் எச்சரித்தார்.
உதாரணமாக இந்தியா மிகப்பெரிய உற்பத்தி நாடாக இருந்தாலும், அதன் பெரும் பகுதி உற்பத்தியை உள்நாட்டில் நுகரப்படுகிறது. இதேபோல் இந்தியாவையும் மாற்ற வேண்டும்.
மேலும் ரகுராம் ராஜன் பேசுகையில் உலகளாவிய விநியோக சங்கிலியில் இந்தியாவை மேம்படுத்தி அதன் இணைப்பை அதிகரிக்க தேவையான கொள்கை மாற்றங்களை இந்த பட்ஜெட்டில் கொண்டு வர வேண்டும் என ரகுராம் ராஜன் பரிந்துரைத்தார்.
இதற்காக வரி விகிதங்களை மறுசீரமைப்பு செய்வது போன்ற முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும் என்று கூறினார். சிகாகோ பூத் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றும் ராஜன், பட்ஜெட் நீண்டகால தொலைநோக்குடன் இருந்தால் நாட்டின் பொருளாதாரம் உறுதியடையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த பட்ஜெட் புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் வர்த்தக தடைகள் போன்ற சவால்களுக்கு மத்தியில் தாக்கல் செய்யப்படுவதால், இதுப்போன்ற பிரச்சனைகளை தாண்டி இந்தியா பொருளாதாரம் எப்படி இயங்க வேண்டும் என்பதற்கான பாதையை இந்த பட்ஜெட் மூலம் நிர்மலா சீதாராமன் சரித்திரம் படைக்கலாம்.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications