திருப்பூருக்கு இனி யோகம் தான்.. ஆஸ்திரேலியா - இந்தியா இடையேயான FTA ஒப்பந்தம் இன்று முதல் அமல்!

இந்தியா - ஆஸ்திரேலியா உடனான வரம்பற்ற வர்த்தக நடவடிக்கை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்த வர்த்தக ஒப்பந்தத்தினால் இரு தரப்பு வணிகமும் மேம்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஏற்றுமதி இறக்குமதியினை தாண்டி, பொருளாதார வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கலாம்.

இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் 1.4 பில்லியன் மக்களை கொண்ட இந்திய சந்தையில், அதிக அளவிலான வணிக வாய்ப்புகளை ஆஸ்திரேலியா பெறலாம். இந்தியா இன்று மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக இருந்து வருகின்றது.

முதல் கட்ட நடவடிக்கை

முதல் கட்ட நடவடிக்கை

மத்திய அரசின் இந்த நடவடிக்கை ஏற்றுமதியாளர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது எனலாம். கட்டண குறைப்புகள் படிப்படியான அமலுக்கு வரும் என்று திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் கட்டமாக கட்டண குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது கட்ட கட்டண குறைப்பானது ஜனவரி 1, 2023 அன்று இருக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

என்ன பொருட்களுக்கு வரி குறைப்பு?

என்ன பொருட்களுக்கு வரி குறைப்பு?

இந்த கட்டண குறைப்பு பட்டியலில் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் கம்பளி, ஆட்டுக் குட்டி, பார்லி, ஓட்ஸ், நண்டுகள், அழகு சாதன பொருட்கள், மற்றும் பல முக்கியமான தாதுக்கள், இரும்பு, டைட்டானியம் டையாக்சைடு உள்ளிட்ட பல பொருட்களுக்குமான 85% மேலான வரிகள் நீக்கப்பட்டுள்ளது. இதனால் இனி பூஜ்ஜிய வரியில் ஆஸ்திரேலிய ஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி செய்து கொள்ளலாம்.

படிப்படியாக வரி குறைக்கப்படும்

படிப்படியாக வரி குறைக்கப்படும்

இதே 5% ஏற்றுமதி வரியில் இறக்குமதி செய்யப்படும் மக்காடாமியா நட்ஸ், வெண்ணெய், பெர்ரி, கடல் உணவுகள், மருந்துகள், கோக்லியர் இம்ப்லாண்ட்ஸ், வைட்டமின்கள், குழந்தைகளுக்கான பொருட்கள், காலை உணவு தானியங்கள், பாஸ்தா, சந்தன சிப்கள், பம்புகள் மற்றும் பில்லர்கள், இயந்திர பாகங்கள், சுரங்கம் சம்பந்தமான இயந்திரங்கள் என பலவற்றிற்கும் படிப்படியாக 0% ஆக குறைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டண சலுகை

கட்டண சலுகை

இது தவிர பிரீமியம் ஓயின், பருப்பு, பாதாம், ஆரஞ்சு மற்றும் ஸ்ட்ராபெர்ரிகள் என பல ஆஸ்திரேலிய உற்பத்தியாளர்கள், இப்போது குறைந்த கட்டண சலுகையை பெறலாம். இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மூலம் மேற்கூறப்பட்ட பொருட்களின் இறக்குமதியானது இங்கு குறைந்த கட்டணத்தில் இறக்குமதி செய்ய முடியும். இதன் காரணமாக விலையும் குறையும்.

பியூஸ் கோயல் கருத்து?

பியூஸ் கோயல் கருத்து?

மொத்தத்தில் இந்த தடையற்ற வணிக ஒப்பந்தம் ஏற்றுமதியினை அதிகரிக்கும். இது இருதரப்பு கூட்டாண்மையை வலுப்படுத்தும். அரசின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் இது குறித்து பியூஸ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் இது ஒரு புதிய தொடக்கத்தின் ஆரம்பம். இது இருதர்பபு வணிகத்திலும் ஒரு முக்கிய மைல்கல். இது ஏற்றுமதியினை அதிகரிக்கும் என்பதோடு, வேலை வாய்ப்பினையும் ஊக்குவிக்கும். இது முதலீட்டுக்கான வாய்ப்பினை அதிகரிக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக இருதரப்பின் கூட்டாண்மையை வலுப்படுத்துகின்றது என தெரிவித்துள்ளார்.

 

முக்கிய அம்சங்கள் என்ன?

முக்கிய அம்சங்கள் என்ன?

100% கட்டண வரிகளுக்கு ஆஸ்திரேலியாவால் பூஜ்ஜிய வரி விதிக்கப்படும்.

அடுத்த 4 - 5 ஆண்டுகளில் இந்தியாவில் கூடுதலாக 10 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்

ஆஸ்திரேலியாவில் இருந்து முதலீடுகள் அதிகரிக்கும்.

1 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் படிப்புக்கு பின் வேலை விசா மூலம் பயனடைவார்கள்

இந்தியாவின் யோகா ஆசிரியர்கள் மற்றும் சமையல் கலைஞர்கள் இதன் மூலம் வாய்ப்பினை பெறுவார்கள்

இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மூலம் இருதரப்பு வணிகமும் 27 பில்லியன் டாலர்களில் இருந்து, 45 - 50 பில்லியன் டாலராக இந்த ஒப்பந்தம் உதவும் எனலாம்.

ஆஸ்திரேலியா முதல் நாளில் இருந்தே சுமார் 96.4% ஏற்றுமதி களுக்கு, பூஜ்ஜிய வரியினை வழங்கும். இதில் ஆஸ்திரேலியாவில் 4- 5% சுங்க வரிகளை ஈர்க்கும் சில பொருட்களையும் உள்ளடக்கியுள்ளது.

 

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி

பெட்ரோலிய பொருட்கள், ஜவுளி மற்றும் ஆடைகள், பொறியியல் பொருட்கள், தோல் பொருட்கள், கெமிக்கல்கள், ஜெம்ஸ் மற்றும் ஜீவல்லரி பொருட்கள் என பலவும் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதே இறக்குமதியில் மூலதன பொருட்கள், நிலக்கரி, கனிமங்கள் மற்றும் இடை நிலை பொருட்கள் என பலவும் அடங்கும்.

இந்தியாவில் பலனடையும் துறைகளாகும்

இந்தியாவில் பலனடையும் துறைகளாகும்

ஆஸ்திரேலியா இந்தியாவின் 17 வர்த்தக பங்காளியாக இருந்து வருகின்றது. பொருட்கள் மற்றும் சேவைகளில் இருதரப்பின் வணிகத்தின் மதிப்பு 27.5 பில்லியன் டாலராகும்

இந்தியாவில் இருந்து ரத்தினங்கள் மற்றும் நகைகள், ஜவுளி, தோல், காலணிக்ள், பர்னிச்சர், உணவு மற்றும் விவசாய பொருட்கள், பொறியியல் பொருட்கள், ஆட்டோமொபைல் சாதனங்கள் என பலதுறைகளும் இந்த ஒப்பந்தத்தினால் பயனடையும். இந்த இரு தரப்பு ஒப்பந்தத்தின் மத்தியில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் பெரும் பலன் அடைவார்கள்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+