இந்தியா - ஆஸ்திரேலியா பொருளாதார நட்புறவை அதிகரிக்கும் புதிய வர்த்தக ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ஆஸ்திரேலியா வர்த்தக அமைச்சர் டான் டெஹானுடன் ஆகியோர் கையெழுத்திட்ட நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்து கொண்டனர்.
இந்தியா உடனான புதிய வர்த்தக ஒப்பந்தம் மூலம் இரு நாடுகளுக்கும் பல நன்மைகள் இருந்தாலும் ஆஸ்திரேலியா சீனாவுக்கு மறைமுகமாகச் செக் வைத்துள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா ஒப்பந்தம்
இந்தியா - ஆஸ்திரேலியா மத்தியிலான இப்புதிய வர்த்தக ஒப்பந்தம் மூலம் இரு நாடுகளுக்கு மத்தியிலான தற்போது இருக்கும் 27 பில்லியன் டாலரான வர்த்தகம் அடுத்த 5 ஆண்டில் 45 பில்லியன் டாலர் வரையில் அதிகரிக்கும். சரி இந்த ஒப்பந்தம் மூலம் சீனாவுக்கு எப்படிச் செக்.
சீனா
உலகில் வேகமாக வளரும் பொருளாதார நாடாக விளங்கும் சீனா கடந்த 2 வருடத்தில் பல பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறது. ஆனால் இதில் முக்கியமாகக் கொரோனா தொற்று உலக நாடுகளுக்குப் பரவியதற்குச் சீனா தான் காரணம் எனக் குற்றம்சாட்டிப் பல நாடுகள் சீனாவிடம் சர்வதேச விசாரணை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்தது. உலகில் வேகமாக வளரும் பொருளாதார நாடாக விளங்கும் சீனா கடந்த 2 வருடத்தில் பல பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறது. ஆனால் இதில் முக்கியமாகக் கொரோனா தொற்றை உலக நாடுகளுக்குப் பரவியதற்குச் சீனா தான் காரணம் எனக் குற்றம்சாட்டிப் பல நாடுகள் சீனாவிடம் சர்வதேச விசாரணை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்தது.
வர்த்தகத் தடை
இதன் பின்பு இரு நாடுகள் மத்தியிலும் பல்வேறு வர்த்தகத் தடைகள் விதித்தது, இதனால் ஆஸ்திரேலியாவை நம்பியிருந்த சீனா பல பொருட்களை பெற முடியாமல் போனது. இதேபோல் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல மலிவுவிலை பொருட்களை ஆஸ்திரேலியா பெற முடியாமல் விலைவாசி உயர்வு பிரச்சனையைச் சந்தித்தது. இதன் பின்பு இரு நாடுகள் மத்தியிலும் பல்வேறு வர்த்தகத் தடைகள் விதித்தது, இதனால் ஆஸ்திரேலியாவை நம்பியிருந்த பல பொருட்கள் சீன பெற முடியாமல் போனது. இதேபோல் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல மலிவுவிலை பொருட்களை ஆஸ்திரேலியா பெற முடியாமல் விலைவாசி உயர்வு பிரச்சனையைச் சந்தித்தது.
கொரோனா
சீனா - ஆஸ்திரேலியா மத்தியிலான நட்புறவில் 2018 முதல் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது, அரசு, பல்கலைக்கழகம் மற்றும் ஊடகங்கள் உட்பட ஆஸ்திரேலியா சமூகத்தின் பல்வேறு துறைகளில் சீன அரசியல் ஆதிக்கத்தின் தலையீடு இருந்தது. இதில் தென் சீனக் கடல் சர்ச்சையும் அடக்கம்.
10 வருடங்கள்
இந்த விரிசல் கொரோனா காலகட்டத்தில் மிகப்பெரிய அளவில் வெடித்து, இரு நாடுகளும் பல்வேறு வர்த்தகத் தடைகளை விதித்தது. இந்த நிலையில் சுமார் 10 வருடங்களாகச் செய்யப்பட்டு வரும் ஆலோசனையின் வாயிலாகத் தனது வர்த்தகத் தேவைகளை இந்தியாவுடன் தீர்த்துக்கொள்ள ஒப்பந்தம் செய்துள்ளது.
குவாட் நாடுகள்
உக்ரைன் பிரச்சனையில் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் நிலைப்பாட்டிற்கு ஆஸ்திரேலியா ஆதரவு அளித்துத் தடை விதித்த நேரத்தில் குவாட் நாடுகளில் இருக்கும் ஆஸ்திரேலியா இந்தியா உடன் புதிய வர்த்தகம் ஒப்பந்தம் செய்துள்ளது முக்கியமானதாக விளங்குகிறது.
சீனாவுக்குச் செக்
இந்த ஒப்பந்தம் மூலம் சீனாவுக்குப் பெரும் வர்த்தக இழப்பு மட்டும் அல்லாமல் தென்கிழக்கு நாடுகள் மத்தியில் சீனா தனது ஆதிக்கத்தை இழந்துள்ளதாக மட்டுமே பார்க்கப்படுகிறது. ஆனால் இந்தியாவிற்குச் செம லாபம்.
More From GoodReturns

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!



Click it and Unblock the Notifications