இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் வேளையில், 2026இல் புதிய நம்பிக்கையுடன் நுழைய உள்ளது சந்தை கணிப்புகள் வெளியாகியுள்ள. இந்த விஷயம் புதிதாக வாகனம் வாங்குபவர்களுக்கும், ஆட்டோமொபைல் துறையில் முதலீடு செய்துள்ளவர்களுக்கும் பெரும் நம்பிக்கையை கொடுத்துள்ளது.
இந்த ஆண்டு ஆட்டோமொபைல் சந்தையில் கார், இரு சக்கர வாகனம், யூட்டிலிட்டி வாகனங்கள் அனைத்திலும் வளர்ச்சி கண்டுள்ளது. ஆட்டோமொபைல் தொழில் நிபுணர்கள் கணிப்பின்படி 2026இல் வாகன விற்பனை 6 முதல் 8 சதவீதம் உயரும் என கணித்துள்ளனர்.

அரசின் கொள்கைகள் ஆட்டோமொபைல் துறைக்கு பெரிய ஆதரவாக செயல்படும் என கணிக்கப்பட்டு உள்ளது. ஜிஎஸ்டி குறைப்பு, வங்கி வட்டி விகிதம் குறைவு, வருமான வரி சலுகை ஆகியவை மக்களின் வாகனம் வாங்கும் திறனை உயர்த்துகின்றன. இதேபோல் நகரங்களில் கடன் எளிதாக கிடைப்பதும். கிராமப்புற மக்களின் வருமானம் நிலையாக இருப்பது ஆட்டோமொபைல் துறைக்கு சாதகமாக அமையும்.
2025இல் பயணிகள் வாகன விற்பனை ஆரம்பத்தில் மெதுவாக இருந்தாலும் பின்னர் வேகமெடுத்தது. இதேபோல் எஸ்யூவி வாகனங்கள் இந்திய சந்தையில் பெரும் ஆதிக்கம் செய்கின்றன. எஸ்யூவி இப்போது சொகுசு வாகனமாக மட்டுமல்லாமல் மக்களின் முக்கிய தேவையாக மாறியுள்ளது.
இந்த நிலையில் 2026ஆம் ஆண்டிலும் அனைத்து முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் மேம்பட்ட எஸ்யூவி கார்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளையில் மாற்று எரிபொருளான சிஎன்ஜி வாகனங்கள் செலவு குறைவு காரணமாக மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றன. இதனால் 2026ல் இவ்விரு பிரிவும் முக்கியமானதாக மாறலாம்.
மேலும் எலக்ட்ரிக் வாகனங்கள் பெரும்நகரங்களில் அதிகளவில் விற்கப்படும் காரணத்தால் இந்த டிரெண்ட் தொடரும். ஜிஎஸ்டி குறைப்பு காரணமாக பெட்ரோல், டீசல் வாகனங்கள் விலை குறைந்துள்ளதால் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான டிமாண்ட் சிறிய அளவில் சரிந்துள்ளது.
இதனால் 2026ஆம் ஆண்டில் கார் வாங்குபவர்களுக்கு பல தேர்வுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளையில் புதிய விதிமுறைகளால் இந்திய ஆட்டோமொபைல் துறைக்கு சில சவால்களும் உள்ளது.
2027 முதல் கார்ப்பரேட் ஆவரேஜ் ஃப்யூல் எஃபிஷியன்சி (CAFE) விதிமுறைகள் கடுமையாக உள்ளது, இதனால் இந்தியாவில் எமிஷன் தரநிலைகள் உயரும். இதை சமாளிக்க தொழில்நுட்பம், ஆராய்ச்சி செலவு அதிகரிக்கும். இது ஆட்டோமொபைல் நிறுவனங்களின் லாப வரம்பை பாதிக்கலாம். இதனால் கார்களின் விலை உயர வாய்ப்புள்ளது.
இதேபோல் இரு சக்கர வாகனங்களுக்கான பாதுகாப்பு விதிமுறைகளும் மாற உள்ளதால் இதன் விலையும் உயர உள்ளது. பைக்குகளில் ஏபிஎஸ், சிபிஎஸ் போன்றவை கட்டாயமாக்கப்படும் காரணத்தால் விலை உயரும், விற்பனையிலும் சிறிய மாற்றம் ஏற்படும். ஆனால் இந்த விதிமுறை மூலம் சாலை பாதுகாப்பை உயர்த்தும்.


Click it and Unblock the Notifications