இந்தியாவும் பங்களாதேஷும் 1996ஆம் ஆண்டில் கையெழுத்திட்ட கங்கை நீர் பகிர்வு ஒப்பந்தத்தை புதுப்பிக்கும் செயல்முறையை இரு நாடுகளும் தொடங்கியுள்ளன. இந்த ஒப்பந்தம் 2026ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காலாவதியாக உள்ளது.
இந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்க தேவையான முன்ஏற்பாடுகள், ஆய்வுகள், ஆலோசனைகளை துவங்க இரு நாட்களைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் இந்தியாவில் இருக்கும் கங்கை மற்றும் பங்களாதேஷ் நாட்டில் இருக்கும் பத்மா ஆறுகளின் நீரோட்ட அளவை கணக்கிட கூட்டாக தொடங்கியுள்ளன.

இந்த அளவீடுகள் மே 31 வரை ஒவ்வொரு 10 நாட்களுக்கும் ஒருமுறை நடைபெறும். இதன் மூலம் இரு நாடுகளிலும் வறட்சியின் போது நீர் ஆதாரம் எப்படியிருக்கிறது என கணக்கிட முடியும்.
2025 ஏப்ரல் பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா சிந்து நீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட நாளில் இருந்து கங்கை நீர் பகிர்வு ஒப்பந்தம் தொடர்பான விவாதங்கள் அவ்வப்போது உருவாகி வருகிறது. குறிப்பாக பங்களாதேஷ் நாட்டில் அரசியல் நிலைதன்மை இல்லாத வேளையில் இந்த பேச்சுவார்த்தை நடக்கிறது.
இந்தியாவின் மத்திய நீர் ஆணைய அதிகாரிகள் தற்போது பங்களாதேஷில் உள்ளனர். அதேபோல பங்களாதேஷ் தொழில்நுட்ப குழு இந்தியாவில் உள்ளது. ஃபராக்கா அணைக்கு (Farakka Barrage) அருகிலும், ஹார்டிஞ்ச் பாலத்திற்கு மேலேயும் நீர் மட்டம் பதிவு செய்யப்படுகிறது. இவை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட இரு முக்கிய அளவீட்டு இடங்களாகும். பங்களாதேஷ் அதிகாரிகள் இந்திய அதிகாரிகளின் பாதுகாப்புக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
ஒப்பந்தத்தின் முக்கிய விபரம்
1996ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி அப்போதைய இந்திய பிரதமராக இருந்த எச்.டி.தேவகவுடா மற்றும் பங்களாதேஷ் பிரதமராக அப்போது இருந்த ஷேக் ஹசினா இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. 1975 இல் இந்தியா ஃபராக்கா அணையை கட்டிய பிறகு, வறண்ட காலத்தில் கங்கை நீரோட்டம் குறித்து பல ஆண்டுகளாக ஏற்பட்ட பிரச்சினைகளை தீர்க்க இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இந்த அணை ஹூக்ளி ஆற்றுக்கு நீரை திருப்பி, கொல்கத்தா துறைமுகத்தை பாதுகாக்க உருவாக்கப்பட்டது. ஆனால் பங்களாதேஷ் இந்த ஒப்பந்தம் இந்தியாவுக்கு சாதகமாக உள்ளது என்று தொடர்ந்து விமர்சித்து வருகிறது. வறண்ட மாதங்களில் நீர் பற்றாக்குறை ஏற்படுவதாக அந்நாடு குற்றம்சாட்டி வருகிறது.
தற்போது செய்யும் அளவீடு மற்றும் ஆய்வின் முடிவுகள் கங்கை நீர் பகிர்வு ஒப்பந்தத்தை புதுப்பிக்க சுமார் 30 ஆண்டுகளுக்கு பின்பு இரு நாடுகளும் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!



Click it and Unblock the Notifications