டெல்லி: வங்கதேசம் மற்றும் இந்தியா மத்தியிலான நட்புறவை அதிகரிக்கும் வகையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சனிக்கிழமை, வங்கதேசம் பிரதமர் ஷேக் ஹசினா இந்தியாவுக்கு அரசுமுறை பயணமாக வந்த வேளையில் இரு நாடுகளுக்கிடையே பல்வேறு துறைகளில் புதிய ஒப்பந்தங்கள் மற்றும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதை அறிவித்தார். இந்த ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கிடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் பிரதமர் மோடி 3வது முறையாக பதவியேற்றிய பின்பு பிரதமர் ஷேக் ஹசினா தான் இந்திய அரசின் முதல் விருந்தினர், இதுவே இந்தியா - வங்கதேசம் மத்தியில் இருக்கும் நட்பை காட்டுகிறது.

முக்கிய அறிவிப்புகள்:
மருத்துவ விசா (Medical Visa): வங்கதேச மக்களுக்காக இந்தியா மருத்துவ விசா வழங்கும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம், பங்களாதேஷ் நோயாளிகள் எளிதாக இந்தியாவுக்கு வந்து சிகிச்சை பெற முடியும்.
ரங்கபூர் துணைத் தூதரகம் (Assistant High Commission): பங்களாதேஷ்த்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ரங்கபூர் நகரில் இந்தியத் துணைத் தூதரகம் திறக்கப்படவுள்ளது. இதன் மூலம், இரு நாடுகளுக்கிடையேயான உறவு மேலும் வலுப்பெறும்.
போக்குவரத்துத் துறை ஒப்பந்தங்கள்:
ராஜ்ஷாஹி-கொல்கத்தா இடையே புதிய ரயில் சேவை (New Train Service): பங்களாதேஷ்-ன் ராஜ்ஷாஹி நகரத்தையும் இந்தியாவின் கொல்கத்தா நகரத்தையும் இணைக்கும் புதிய ரயில் சேவை தொடங்கப்படவுள்ளது. இதன் மூலம், இரு நாடுகளுக்கிடையேயான பயண வசதி மேம்படும்.
சிட்டகொங்-கொல்கத்தா இடையே புதிய பேருந்து சேவை (New Bus Service): பங்களாதேஷ்-ன் துறைமுக நகரான சிட்டகொங் நகரத்தையும் இந்தியாவின் கொல்கத்தா நகரத்தையும் இணைக்கும் புதிய பேருந்து சேவை தொடங்கப்படவுள்ளது.
சரக்கு போக்குவரத்து: பங்களாதேஷ் நாட்டின் ஜெதே-தர்சனா மற்றும் இந்தியாவின் ஹல்டிபாரி - சிலஹட்டி இடையே சரக்கு ரயில் சேவை தொடங்கப்படவுள்ளது. இதன் மூலம், இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகம் மேம்படும்.
மற்ற முக்கிய அறிவிப்புகள்:
சிராஜ்கஞ்ச் நகரில் உள்நாட்டு கண்டெய்னர் டிப்போ (Inland Container Depot - ICD) கட்டுமானம்: பங்களாதேஷ்த்தின் சிராஜ்கஞ்ச் நகரில் இந்திய நிதியுதவியுடன் உள்நாட்டு கண்டெய்னர் டிப்போ கட்டப்படவுள்ளது. இதன் மூலம், வர்த்தக நடவடிக்கைகள் மேம்படுத்தப்படும்.
நேபாளத்திலிருந்து பங்களாதேஷ்த்திற்கு மின்சார ஏற்றுமதி (Power Export): நேபாளத்திலிருந்து பங்களாதேஷ்த்திற்கு 40 மெகாவாட் மின்சாரம் இந்திய மின் இணைப்பு மூலமாக மின்சார ஏற்றுமதி செய்யப்படும்.
கங்கை நீர் ஒப்பந்தம் புதுப்பித்தல் (Renewal of Ganga Water Treaty): கங்கை நதி நீர் பகிர்வு குறித்த ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பது குறித்து இரு நாடுகளும் ஆ
தீஸ்டா நதி நீர் பகிர்வு (Teesta River Water Sharing): தீஸ்டா நதியின் நீர் பகிர்வு பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, தொழில்நுட்பக் குழு ஒன்றை அமைக்க இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். இது நீண்ட காலமாக இருந்து வரும் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முக்கிய நடவடிக்கையாகும்.
காவல்துறைக்குப் பயிற்சி: பங்களாதேஷ் நாட்டின் 350 காவல்துறை அதிகாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
மருத்து நிதியுதவி: மருத்துவ நோயாளிகளுக்கான முக்திஜோதா திட்டம், ஒரு நோயாளிக்கு அதிகபட்ச உச்சவரம்பு 8 லட்சம்
கூட்டணி விரிவாக்கம்: பங்களாதேஷ் நாடு இந்தோ-பசிபிக் பெருங்கடல் கூட்டணியில் இணைந்துள்ளது.
நிதி பரிமாற்ற சேவை: இந்தியாவின் UPI சேவையை பங்களாதேஷ் நாட்டில் தொடங்குவதற்காக NPCI மற்றும் பங்களாதேஷ் வங்கி இடையே வணிக ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது.
இதை தொடர்ந்து 10 புதிய ஒப்பந்தங்கள் இந்தியா பங்களாதேஷ் நாடுகளுக்கு மத்தியில் கையெழுத்தாகியுள்ளது. இதுக்குறித்த விபரம்:
டிஜிட்டல் துறையில் இருநாடுகளுக்கு இணைந்து பணியாற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் (Digital Partnership)
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆகியவற்றில் ஒத்துழைப்பு இருநாடுகளுக்கு இணைந்து பணியாற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் (Green Partnership)
கடல் துறை ஒத்துழைப்பு மற்றும் நீலப் பொருளாதாரம் ஒத்துழைப்பு ஒப்பந்தம் (Maritime Cooperation and Blue Economy)
விண்வெளித் துறை ஒத்துழைப்பு ஒப்பந்தம் (Space Cooperation)
ரயில்வே இணைப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் (Railway Connectivity)
கடல் ஆராய்ச்சி இருநாடுகளுக்கு இணைந்து பணியாற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் (Oceanography)
பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் ஒப்பந்தம் (Defence and Strategic Operation Studies)
சுகாதாரம் மற்றும் மருத்துவம் துறையில் புதுப்பிக்கப்பட்ட ஒப்பந்தம் (Health and Medicine)
பேரிடர் மேலாண்மைத் துறையில் புதுப்பிக்கப்பட்ட ஒப்பந்தம் (Disaster Management)
மீன்வளத் துறையில் புதுப்பிக்கப்பட்ட ஒப்பந்தம் (Fisheries)
இந்த ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளை வலுப்படுத்தவும், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications