டெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மீது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் மத்திய அரசு, பாகிஸ்தான் நாட்டு கப்பல்கள் இந்திய துறைமுகங்களுக்குள் நுழைவதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 26 பேர் கொல்லப்பட்டனர் .இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையிலான உறவின் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக பாகிஸ்தான் நாட்டுக் கப்பல்கள் இந்தியாவின் எந்த துறைமுகங்களிலும் நுழையக்கூடாது, அதாவது இந்தியாவிற்குள்ளேயே நுழைய கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே போல இந்தியாவை சேர்ந்த கப்பல்கள் பாகிஸ்தானில் எந்த ஒரு துறைமுகத்திலும் நுழையக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதிகளை ஊக்குவித்து வருகிறது. இந்த பிரச்சினையை மிக தீவிரமாக மத்திய அரசு கையில் எடுத்திருக்கிறது. முன்னதாக பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் பறக்க கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டது. இதனால் பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளி வழியாக எந்த ஒரு நாட்டிற்கும் செல்ல முடியாது.
தற்போது பாகிஸ்தான் கப்பல்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு பாகிஸ்தான் நாட்டு கப்பல்கள் இந்திய துறைமுகங்களுக்குள் நுழையக்கூடாது என்ற உத்தரவை பிறப்பித்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அடுத்த கட்ட அறிவிப்பு வரும் வரை இந்த தடை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மே 2ஆம் தேதி பாகிஸ்தான் இந்தியா இடையிலான அனைத்து விதமான ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளுக்கும் மத்திய அரசு தடை விதித்தது. பாகிஸ்தானில் இருந்து பொருட்கள் நேரடியாக இந்தியாவிற்கு வருவது மட்டுமின்றி மூன்றாம் தரப்பு நாடுகள் வழியாக இந்தியாவிற்கு வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுத்திருப்பதாக அரசு தெரிவித்து இருக்கிறது.
பாகிஸ்தானில் ஏற்கனவே சிமெண்ட், வேளாண் பொருட்கள் மற்றும் துணிமணிகளின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவும் அந்நாட்டுடனான ஏற்றுமதி இறக்குமதிக்கு தடை விதித்திருப்பதால் பொருளாதார ரீதியாக இந்த நாட்டிற்கு பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது.
முன்னதாக மத்திய அரசு பாகிஸ்தான் உடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது, அந்நாட்டுக்கு கிடைக்கும் நிதி உதவிகளை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. ராஜாங்க ரீதியாக பாகிஸ்தானுக்கு அழுத்தம் தர கூடிய வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா எடுத்து வருகிறது.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

துரந்தர் படத்தின் வசூலில் பங்கு கேட்கும் பாகிஸ்தான் மக்கள்!! இதென்ன புது பிரச்சினை!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications