ஈரான் போரால் ஏற்படும் பாதகமான விளைவுகளில் இருந்து நாடு தப்பிக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் 2026 செப்டம்பர் மாதம் வரை சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதிப்பதாக தெரிவித்திருக்கிறது. உள்நாட்டில் சர்க்கரை விலையை கட்டுப்படுத்தும் வகையில் சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதித்து இருக்கக்கூடிய மத்திய அரசு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவுக்கான சர்க்கரை ஏற்றுமதிக்கு இந்த தடை பொருந்தாது என தெரிவித்திருக்கிறது.

உலகின் இரண்டாவது பெரிய சர்க்கரை உற்பத்தி நாடாக இந்தியா திகழ்ந்து வருகிறது. இந்த சூழலில் மத்திய அரசுக்கு சொந்தமான வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குனரகம் சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதிப்பதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இதற்கு முன்பு அரசு சர்க்கரை உற்பத்தி கூடுதலாக இருக்கும் என்ற நம்பிக்கையில் ஏற்றுமதியை அனுமதித்திருந்தது.
போர் காரணமாக பல்வேறு நாடுகளிலும் கடுமையான எரிபொருள் கட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. கச்சா எண்ணெய் விலைகள் பல மடங்கு உயர்வு கண்டிருக்கின்றன. பல்வேறு பொருட்களின் விநியோகம் தடைப்பட்டு இருப்பதால் பண வீக்கம் அதிகரித்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் உண்டாகிறது. இந்த சூழலில் தான் மத்திய அரசு சர்க்கரை ஏற்றுமதிக்கான தடையை விதித்திருக்கிறது.
ஈரான் போர் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு உரங்கள் வந்து சேரவில்லை. இரண்டு மாத காலமாக உரங்கள் வராததால் இந்திய வேளாண்மை துறையே பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. இந்த சூழலில் எதிர் வரக்கூடிய பருவத்தில் கரும்பு உற்பத்தி தடை பட்டால் நாட்டில் சர்க்கரைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு சர்க்கரை விலை பல மடங்கு உயரும். இவற்றை கருத்தில் கொண்டு தான் அரசு சர்க்கரை ஏற்றுமதிக்கான தடையை அறிவித்திருக்கிறதாம்.
வழக்கமாக அக்டோபர் முதல் செப்டம்பர் மாதங்களில் தான் இந்தியாவில் அதிகமான அளவிற்கு சர்க்கரை உற்பத்தி செய்யப்படும் கிட்டதட்ட 275 லட்சம் டன் சர்க்கரை இந்த காலகட்டத்தில் உற்பத்தியாகிறது. இதில் இந்திய நுகர்வுக்கு போய் போக மீதம் உள்ளதே தான் நம் ஏற்றுமதி செய்து வருகிறோம். ஆனால் தற்போது அரசு முன்னெச்சரிக்கையாக அதனை நிறுத்தி வைத்துள்ளது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பை அடுத்து உலக சந்தையில் சர்க்கரை விலை உயர்ந்தது நியூயார்க்கில் பங்குச்சந்தையில் சர்க்கரைக்கான ஃபியூச்சர்ஸ் வர்த்தக ஒப்பந்தம் இரண்டு சதவீதம் உயர்ந்தது, அதே போல லண்டனிலும் மூன்று சதவீதம் வரை உயர்வு கண்டது.


Click it and Unblock the Notifications

