இந்தியாவுக்கு லட்டு மாதிரி 100 பில்லியன் டாலர் கொடுக்கும் NRI-கள்..!

உலகம் முழுவதும் இருக்கும் இந்தியர்கள் ஐடி, டெக், ஆராய்ச்சி, வங்கி, நிதியியல் சேவை, அறிவியல், கட்டுமானம், ஆட்டோமொபைல் எனப் பல துறையில் பணியாற்றி அசத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சமீப காலங்களில் உலக நாடுகளின் அரசியலிலும் இந்திய வம்சாவளியினர் அசத்தி வருகின்றனர் குறிப்பாக உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் இதர தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அசத்தி வருகின்றனர்.

ரெமிட்டன்ஸ்

ரெமிட்டன்ஸ்

இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்குச் செல்லும் பல கோடி இந்தியர்கள் 90 சதவீதம் பேர் செய்யும் ஒரு செயல் என்றால் தாய் நாட்டிற்குப் பணத்தை அனுப்புவது தான்.

இது ரெமிட்டன்ஸ் என அழைக்கப்படுகிறது, இந்த வருடம் உலகம் முழுவதும் இருக்கும் இந்தியர்கள் தாய் நாட்டிற்கு அனுப்பும் தொகையான வரலாற்று உச்சத்தைத் தொட உள்ளது.

NRI-கள்

NRI-கள்

இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்குச் சென்று பணியாற்றும், வர்த்தகம் செய்யும் NRI-கள் இந்த வருடம் முடிவதற்குள் தாய் நாட்டிற்கு வரலாற்றிலேயே அதிகப்படியான தொகையை அனுப்ப உள்ளனர்.

இந்தியா

இந்தியா

ஆசியாவின் 3வது பெரிய பொருளாதார நாடாக இருக்கும் இந்தியாவுக்கு 1980களில் இருந்து ரெமிட்டன்ஸ் தொகை மிகவும் முக்கியமானதாக உள்ளது. 1990களில் இந்தியாவின் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியைக் காப்பாற்றியதே இந்த ரெமிட்டன்ஸ் தான் என்றால் மிகையில்லை.

100 பில்லியன் டாலர்

100 பில்லியன் டாலர்

இந்த நிலையில் நடப்பு ஆண்டில் இந்தியாவுக்கு வரும் ரெமிட்டன்ஸ் தொகை கடந்த ஆண்டை காட்டிலும் சுமார் 12 சதவீதம் அதிகரித்து 100 பில்லியன் டாலர் அளவீட்டை எட்ட உள்ளது என உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மெக்சிகோ, சீனா, பிலிப்பைன்ஸ்

மெக்சிகோ, சீனா, பிலிப்பைன்ஸ்

இதன் மூலம் ரெமிட்டன்ஸ் அதிகம் பெரும் நாடுகள் பட்டியலில் மெக்சிகோ, சீனா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை விடவும் உச்சத்தை அடைந்து உலகில் அதிகம் ரெமிட்டன்ஸ் பெறும் நாடாக இந்தியா உயர உள்ளது.

பணக்கார நாடுகள்

பணக்கார நாடுகள்

இந்தியாவின் திறமை மிக்க இளைஞர்கள் பணக்கார நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர், துபாய், கத்தார், போன்ற உலகின் பல நாடுகளில் இருக்கும் காரணத்தால் இந்தியாவுக்கு வரும் ரெமிட்டன்ஸ் தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

 வொயிட் காலர் வேலை

வொயிட் காலர் வேலை

இந்தியர்கள் வொயிட் காலர் வேலைகளுக்கு மட்டும் அல்லாமல் ப்ளூ காலர் வேலைகளுக்கு அதிகமாக வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் காரணத்தால் இப்பகுதியில் இருந்து வரும் ரெமிட்டன்ஸ் தொகை மிகவும் அதிகமாக உள்ளது.

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி

இந்தியாவுக்கு என்ஆர்ஐ-கள் பணம் அனுப்புவதால் என்ன நன்மை என்றால், ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியில் இருந்து காப்பாற்ற முடியும். இது மட்டும் அல்லாமல் டாலர் மற்றம் இதர நாணயங்களுக்காக அதிகப் பணத்தைச் செலவு செய்ய வேண்டியது இல்லை.

ஜிடிபி-யில் 3 சதவீதம்

ஜிடிபி-யில் 3 சதவீதம்

குறிப்பாகச் சர்வதேச நாடுகள் மோசமான நிலையில் இருக்கும் போது டாலர் மதிப்பு மட்டும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் அமெரிக்காவில் இருக்கும் என்ஆர்ஐகள் இந்தியாவுக்குப் பணத்தை அனுப்பினால் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியில் இருந்து காப்பாற்ற முடியும். இந்தியாவின் மொத்த ஜிடிபி-யில் 3 சதவீதம் ரெமிட்டன்ஸ் தான்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+