இந்தியா தற்போது வேகமாக வளர்ந்து வரும் ஒரு பெரிய நாடாக மாறியுள்ளது. இதில் தகவல் தொழில்நுட்பம், சேவைகள், வணிகம் போன்ற பல துறைகளில் முன்னிலை வகிக்கிறது. இப்போது, இந்தியா மேலும் ஒரு முக்கியமான சாதனையை எட்டியுள்ளது. உலகில் உற்பத்தி செய்ய மிகவும் குறைந்த செலவாக இருக்கக்கூடிய நாடாக மாறியுள்ளது. இந்த பட்டத்தை இதுவரை சீனா வைத்திருந்தது. ஆனால் இப்போது, இந்தியா சீனாவை முந்திவிட்டது.
இந்தியாவின் புதிய சாதனை: அமெரிக்க செய்திகள் மற்றும் உலக தரவுகளை வெளியிடும் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதில், உலகில் மிகவும் மலிவாக உற்பத்தி செய்யக்கூடிய நாடாக இந்தியா திகழ்கிறது. கடந்த காலத்தில் சீனா தான் இந்த பட்டத்தை வைத்திருந்தது. தற்போது வியட்நாம் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், வங்காளதேசம் ஆகிய நாடுகளும் முதல் 5 இடங்களில் உள்ளன.

இதன் முக்கியத்துவம் என்ன?: இதில் மிகவும் குறைந்த செலவில் உற்பத்தி செய்ய முடிவது, பல உலக நிறுவனங்களை இந்தியாவுக்கு ஈர்க்கும். பெரும் நிறுவனங்கள் அதிக செலவுகளைச் செலுத்த விரும்பவில்லை. அதனால், குறைந்த செலவில் வேலை செய்யக் கூடிய இந்தியா போன்ற நாடுகளை தேர்வு செய்கிறார்கள். இதன் மூலம், இந்தியாவில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும், நாட்டின் வருமானம் பெருகும் மற்றும் மக்களின் வாழ்க்கை நிலை மேம்படும்.
சீனாவுக்கு ஏற்பட்ட பாதிப்பு: சீனா இதுவரை உலகின் தொழிற்சாலை என்ற பெயரால் அறியப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அந்த நிலை குறைந்து வருகிறது. இந்தியா முதலிடம் பிடித்துவிட்டதால், சீனாவை சேர்ந்த நிறுவனங்கள் பதற ஆரம்பித்துள்ளன. பல நிறுவனங்கள் தற்போது சீனாவை விட்டு இந்தியாவை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.
புதிய புள்ளிவிவரங்கள் என்ன சொல்கின்றன?: இந்நிலையில், ஜே.பி. மோர்கன் என்ற நிறுவனம் வெளியிட்ட "PMI" என்ற குறியீட்டின்படி, இந்தியாவின் உற்பத்தி விகிதம் (Manufacturing PMI) ஏப்ரல் 2025இல் 58.2 என்ற உயரமான எண்ணிக்கையை எட்டியுள்ளது. சேவை துறை (Services PMI) 58.7 ஆக உள்ளது என கூறியுள்ளது. மேலும், இந்தியாவுக்கான நன்மைகள் என்னவென்றால், புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்படும். வெளிநாட்டு முதலீடு (FDI) அதிகரிக்கும், வேலைவாய்ப்புகள் உருவாகும், நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி பெறும் மற்றும் கிராம பகுதிகளிலும் தொழில்கள் வளர வாய்ப்பு இருக்கும். இந்தியாவுக்கு இது ஒரு புதிய வாயிலாகும். சீனாவை முந்தியதன் மூலம், இந்தியா ஒரு பெரிய மாற்றத்தின் வழியில் சென்று கொண்டிருக்கிறது. சர்வதேசம் முழுவதும் இந்தியாவை நோக்கி நிறுவனங்கள் கவனம் செலுத்தும்.
எனவே, இந்தியா உலகில் மிகக் குறைந்த செலவில் உற்பத்தி செய்யக்கூடிய நாடாக மாறியுள்ளது என்பது நமக்கு பெருமையாகும். இது எதிர்காலத்தில் புதிய தொழில்கள், அதிக வேலைவாய்ப்புகள், வளமான பொருளாதாரம் ஆகியவற்றை ஏற்படுத்தும். இந்த வளர்ச்சியை நாம் நம்மால் முடிந்தவரை பயன்படுத்திக் கொண்டு நம்மை முன்னேற்றிக் கொள்ள வேண்டும்.
More From GoodReturns

ஈரானுக்குஆயுதம் கொடுத்தால் அவ்ளோதான்! சீனாவை மிரட்டும் டிரம்ப்! வெடிக்கப்போகிறதா அடுத்த உலகப்போர்?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!



Click it and Unblock the Notifications