2022ஆம் ஆண்டின் 2வது காலாண்டில் வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு - 0.6 (மைனஸ்) சதவிகிதமாக உள்ளது. இதுவே மார்ச் காலாண்டில் அமெரிக்கப் பொருளாதாரம் -1.6 சதவீதமாகச் சரிந்திருந்தது.
ஆனால் இதேவேளையில் இந்திய பொருளாதாரம் கடந்த ஆண்டு ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 20.1 சதவீத வளர்ச்சி அடைந்த நிலையில், 2022 ஜூன் காலாண்டில் அமெரிக்கா போல் மைன்ஸ் அளவுக்குச் செல்லாமல் 13.5 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.
உலக நாடுகள் குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன் ஐரோப்பா பொருளாதாரம் மோசமாக இருக்கும் வேளையில் இந்தியா மட்டும் வளர்ச்சி அடைய என்ன காரணம் தெரியுமா.. ரஷ்யா தான். இப்படிப்பட்ட ரஷ்யாவை கைவிட முடியுமா..?
ரஷ்யா
கொரோனா தொற்றுப் பாதிப்பு குறைந்ததில் இருந்து உக்ரைன் நாட்டை எப்போது தாக்குவது எனக் காத்திருந்த ரஷ்யா பிப்ரவரி மாதம் கடையில் தாக்குதலை துவங்கியது. ரஷ்ய - உக்ரைன் போருக்கு பின்பு பல ரஷ்யாவை காட்டிலும் பல நாடுகள் மோசமான நிலைக்கு என்றது, ஆனால் ரஷ்யாவின் உதவியால் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் உள்ளது.
இந்தியா - கச்சா எண்ணெய்
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை உலக நாடுகள் தடை செய்ய முடியாத இதேவேளையில் இந்தியாவுக்கு ஸ்பெஷலாக டிஸ்கவுன்ட் விலையில் கச்சா எண்ணெய் கொடுப்பதாக அறிவித்தது ரஷ்யா. சும்மா இருக்குமா இந்தியா போடுறா ஆர்டர் என்பது போல் நீண்ட கால நண்பனாக இருக்கும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்-ஐ வாங்கிக் குவித்தது.
ரஷ்ய எண்ணெய் ESPO
ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ரஷ்யாவில் இருந்து சுமார் 6 எண்ணெய் கப்பலில் ரஷ்ய எண்ணெய்யான ESPO-வை வாங்கியுள்ளது இந்தியா. இதன் மூலம் எப்போது ரஷ்யா உடனான வர்த்தகத்தில் சீனா முன்னோடியாக இருக்கும் நிலையில் தற்போது இந்தியா முன்னிலை வகிக்கிறது.
6 கப்பல்
ரஷ்யா - உக்ரைன் போர் துவங்கிய பின்பு இந்தியா அதிக ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்கியது ஆகஸ்ட் மாதம் தான். ஒரு காலத்தில் இந்தியா ரஷ்யாவின் ESPO எண்ணெய் என்றாலே வேண்டாம் எனக் கூறி வந்த நிலையில் ஒரே மாதத்தில் 6 கப்பல்களை வாங்கியுள்ளது என Vortexa நிறுவனத்தின் ஆய்வாளர் Emma Li தெரிவித்துள்ளார்.
இந்தியா - ரஷ்யா
இந்தியாவுடன் வர்த்தகத்தை அதிகரிக்க ரஷ்யா ஈரான் வழியாக இயங்கும் INSTC வழித்தடத்தை விரிவாக்கம் செய்து வருகிறது. இதேபோல் ரஷ்யா நிறுவனங்கள் உடனான வர்த்தகத்தை எளிதாக்க ஆர்பிஐ ரூபாய் வாயிலான பணப் பரிமாற்ற முறையை அறிமுகம் செய்துள்ளது. இது இந்தியாவுக்குப் பெரிய அளவில் உதவியது என்றால் மிகையில்லை.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications