உலகின் முன்னணி முதலீட்டு நிறுவனமான இன்வெஸ்கோ குளோபல் சவ்ரின் அசெட் மேனேஜ்மென்ட் நடத்திய மிக முக்கியமான ஆய்வில், இந்தியா சீனாவை பின்னுக்குத் தள்ளியுள்ளது. பொருளாதார அளவீட்டில் அமெரிக்காவுடன் சீனா போட்டிப்போடும் நிலையில் முதலீட்டாளர்கள் மத்தியில் இந்தியாவுக்கு தனிப்பட்ட கவனம் கிடைத்துள்ளது.
உலகளவில் வளர்ச்சி அடையும் நாடுகள் மத்தியில் முதலீட்டாளர்களுக்கு மிகவும் விருப்பமான முதலீட்டு சந்தைகளின் பட்டியலில், சீனாவை ஓரங்கட்டி இந்தியா முன்னேறியுள்ளது.

உலகளவில் பணவீக்கம் அதிகமாக இருக்கும் வேளையிலும், மத்திய வங்கிகள் தொடர்ந்து பென்ச்மார்க் வட்டி விகிதத்தை உயர்த்தும் நிலையிலும் சவ்ரின் வெல்த் பண்ட் நிறுவனங்கள் அனைத்தும் நிலையான வருமானத்தை அளிக்கும் சந்தையில் முதலீடு செய்து வருகின்றனர். இதில் இந்தியாவுக்கு பலன் அளித்துள்ளது.
இன்வெஸ்கோ குளோபல் சவ்ரின் அசெட் மேனேஜ்மென்ட் நடத்திய இந்த ஆய்வறிக்கையில் 142 தலைமை முதலீட்டு அதிகாரிகள், 85 சவ்ரின் வெல்த் பண்ட் நிறுவனங்களின் மூத்த போர்ட்ஃபோலியோ நிபுணர்கள் மற்றும் 57 மத்திய வங்கிகளின் நிபுணர்களின் கண்ணோட்டமும் அடக்கம் என்பதால் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
மத்திய கிழக்கை தளமாகக் கொண்ட ஒரு சவ்ரின் வெல்த் பண்ட் நிறுவனம் இந்த அறிக்கையில் முதலீடு செய்யும் போது வணிகம் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை காரணிகளை பார்க்கும்போது இந்தியா இப்போது ஒரு சிறந்த இடமாக உள்ளது என தெரிவித்துள்ளது.
வளரும் நாடுகள் மத்தியில் சீனாவை விடவும் இந்தியாவை சவ்ரின் வெல்த் பண்ட் முதலீட்டாளர்களுக்கு பிடிக்க முக்கியமான காரணம் சீரான வர்த்தக வளர்ச்சி பாதை, அரசியல் ஸ்திரத்தன்மை, வேகமாக வளர்ந்து வரும் மக்கள்தொகை, சிறப்பான ஒழுங்குமுறை நடவடிக்கைகள் , முதலீட்டாளர்களுக்கு சிறப்பான சூழல் இந்தியாவில் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தேவைக்காக அதிகப்படியான வெளிநாட்டு கார்பரேட் முதலீட்டை பெற்ற நாடுகளில் பட்டியலில் மெக்சிகோ, பிரேசில் உடன் இந்தியாவும் அதிகப்படியான பலன் பெற்றுள்ளதாக இன்வெஸ்கோ நிறுவனத்தின் ஆய்வறிக்கை கூறுகிறது.


Click it and Unblock the Notifications