சர்வதேச முதலீட்டுச் சந்தையில் மிகப்பெரிய அளவிலான மாற்றங்கள் நிகழ்ந்துள்ள நிலையில் ஆசியாவின் மிக முக்கியமான சந்தைகள் தடுமாற்றம் அடைந்து வரும் நிலையில், அதிக வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்றுள்ள உலக நாடுகள் பட்டியலில் ரஷ்யாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முன்னேறியுள்ளது.
இதன் மூலம் உலகளவில் 5வது இடத்தில் இருந்து இந்தியா மார்ச் முதல் வாரத்தில் ஏற்பட்ட முதலீட்டுச் சந்தை மாற்றங்கள் மூலம் ரஷ்யாவை பின்னுக்குத்தள்ளி 4வது இடத்தைப் பிடித்துள்ளது.
Forex இருப்பு அளவு
ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி மார்ச் 5ஆம் தேதி வர்த்தக முடிவில் இந்தியாவின் Forex இருப்பு அளவு 4.3 பில்லியன் டாலர் அளவில் சரிந்து 580.3 பில்லியன் டாலர் அளவை அடைந்துள்ளது. இதேவேளையில் ரஷ்யாவின் Forex இருப்பு அளவீடு 580.1 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி
அன்னிய செலாவணி அளவு ரிசர்வ் வங்கி டாலரை வாங்கும் போதும், விற்பனை செய்யும் போது மாறுபடும். பிப்ரவரி மாத கடைசியில் அமெரிக்கப் பத்திர சந்தையில் உருவான அதீத லாபகரமான சூழ்நிலையில் இந்தியச் சந்தையில் அதிகளவிலான முதலீடுகள் வெளியேறியது.
ரூபாய் மதிப்பு
இந்தத் தருணத்தில் ரூபாய் மதிப்புக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது, ரூபாய் மதிப்பை சரிவைக் குறைக்கவும், மேம்படுத்தவும், சுமார் 43 பில்லியன் டாலர் அளவிலான டாலரை ரீடைல் சந்தைக்குள் கொண்டு வந்தது. இதனால் ரூபாய் மதிப்பு கட்டுப்படுத்தப்பட்டது.
நாணய கொள்கை தளர்வு
இந்தியாவின் அன்னிய செலாவணி அளவீடு சிறப்பாக இருக்கும் வரையில் நாட்டின் நாணய கொள்கை மிகவும் ஏதுவாக இருக்கும், ஆனால் ரூபாய் மதிப்பு, முதலீடு சந்தையில் ஏற்படும் பாதிப்பு நாட்டின் டாலர் இருப்பை அதிகளவிலான பாதிப்பை ஏற்படுத்தும்.
12 மாதத்தில் 130 பில்லியன் டாலர்
கடந்த 12 மாதத்தில் இந்தியச் சந்தையில் சுமார் 130 பில்லியன் டாலர் இந்திய சந்தைக்குள் வந்துள்ளது. இதேவேளையில் ரஷ்ய சந்தையில் அதிகளவிலான முதலீடு குவிந்திருந்தாலும், அதிகளவில் வெளியேறிய காரணத்தால் 4வது இடத்தை இந்தியாவிடம் ரஷ்யா இழந்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் தாக்குதல்: இந்தியர்களுக்கு பாதுகாப்பான இடம் தர மறுத்ததா இஸ்ரேல்? வைரலாகும் புகைப்படம்

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!



Click it and Unblock the Notifications