சமீபத்தில் இந்தியாவில் பில்லியனர்கள் அதிகரிப்பை காட்டும் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. UBS-இன் பில்லியனர் அறிக்கை 2024-ஆம் ஆண்டில் இந்தியாவில் 185 பில்லியனர்கள் உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் உலகின் 3-வது பெரிய பில்லியனர் நாடாக இந்தியா உயர்ந்துள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் அடையாளமாக பில்லியனர் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
UBS அறிக்கையின் மூலம் இந்தியாவில் பில்லியனர்கள் எண்ணிக்கை விரைவாக அதிகரித்து வருவதை தெரிந்துகொள்ள முடிகிறது. 2023-ஆம் ஆண்டில் 32 புதிய பில்லியனர்கள் உருவாகினர். ஆனால் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 21% அதிகரிப்பு உள்ளது. 2015-ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து பில்லியனர்களின் எண்ணிக்கை பல்வேறு நாடுகளிலும் இரட்டிப்பாகியுள்ளது. அதாவது சுமார் 123% அதிகரிப்புடன் பில்லியனர்கள் அதிகரித்து வருவதாக UBS அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பில்லியனர்களின் நிகர மதிப்பு கடந்த ஆண்டை விட 42.1% அதிகரித்து 95.6 பில்லியன் டாலர்களாக உயர்ந்திருக்கிறது. இந்தியாவில் வலுவான பொருளாதாரம் இருப்பதை இதை வைத்து நாம் தெரிந்து கொள்ள முடியும். UBS அறிக்கையின் படி இந்த வளர்ச்சி இந்தியாவின் பொருளாதாரம் உலகளாவிய செல்வத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதும் தெரிய வருகிறது.
அமெரிக்காவும் சீனாவும் UBS அறிக்கை தரவரிசையில் முன்னணியில் உள்ளன. 2024 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் 84 பில்லியனர்கள் அதிகரித்துள்ளனர். இவர்களுடைய சொத்து மதிப்பு $ 4.6 டிரில்லியன் முதல் $ 5.8 டிரில்லியன் வரை அதிகரித்திருக்கிறது. சீனாவில் பில்லியனர் அறிக்கையில் சிறு சரிவு ஏற்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு 93 பில்லியனர்கள் சீனாவில் குறைந்துள்ளனர். இதனால் மொத்த பில்லியனர் சொத்து மதிப்பு $ 1.8 ட்ரில்லியனிலிருந்து $ 1.4 ட்ரில்லியன் வரை சரிந்துள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது.
உலகளாவிய பில்லியனர்கள் எண்ணிக்கை 2015-ஆம் ஆண்டில் 1,757 ஆக இருந்தது. ஆனால் 2024-ஆம் ஆண்டில் 2682-ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் இந்த பில்லியனர்களின் மொத்த செல்வம் 121% அதிகரித்து $ 14 ட்ரில்லியனை எட்டியுள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது. அதேபோல குடும்பமாக இணைந்து வணிகங்களில் ஈடுபடும் குடும்பங்களின் எண்ணிக்கையிலும் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. இந்தியப் பொருளாதாரத்தில் குடும்ப வணிகங்கள் முக்கிய பங்காற்றியுள்ளன என்று யூபிஎஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications