அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை.. $5 டிரில்லியன் இலக்கு குறித்து சி ரங்கராஜன் கருத்து..!

நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதாரம் மந்த நிலையில், இருந்து வந்த நிலையில், இதனை இன்னும் மோசமாக்கும் விதமாக கொரோனாவும் வந்தது.

குறிப்பாக கடந்த ஆண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதமானது, வரலாற்றில் இல்லாத அளவுக்கு மோசமான சரிவினைக் கண்டது.

தற்போது தான் பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டுள்ள நிலையில், இனி வரும் ஆண்டுகளில் பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பலாம் என்ற நம்பிக்கையும் இருந்து வருகின்றது.

இலக்கினை அடைவது சாத்தியமல்ல

இலக்கினை அடைவது சாத்தியமல்ல

எனினும் உருமாற்றம் அடைந்து பரவி வரும் கொரோனாவின் தாக்கம் என்பது மேற்கொண்டு, தாக்கத்தினை ஏற்படுத்துமோ என்ற அச்சமும் சந்தையில் நிலவி வருகின்றது. இந்த நிலையில் மத்திய அரசின் $5 டிரில்லியன் இலக்கு என்பது கை அடைவது கஷ்டம், தற்போதைய சூழலில் அதனை அடைவது சாத்தியமற்றது.

வருட வளர்ச்சி இலக்கு

வருட வளர்ச்சி இலக்கு

அப்படி அரசின் இந்த இலக்கினை அடைய வேண்டுமெனில் நாட்டில் பொருளாதார வளர்ச்சி விகிதமானது ஒவ்வொரு ஆண்டும் 9% வரை வளர்ச்சியினை எட்ட வேண்டும். அப்படி வளர்ச்சி கண்டால் மட்டுமே இலக்கினை எட்ட முடியும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சி ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.

முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்

முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்

ICFAI Foundationன் 11வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய சி ரங்கராஜன், மூன்றாவது அலையின் தாக்கத்தினை எதிர்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். தடுப்பூசி மூலம் பாதுகாப்பு மற்றும் மருத்துவ துறையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் அதிகரித்தால், இது ஒட்டுமொத்த உள்கட்டமைப்பு வசதியையும் மேம்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

9% ஆக வளர்ச்சி காண வேண்டும்

9% ஆக வளர்ச்சி காண வேண்டும்

சில வருடங்களுக்கு முன்பு இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கினை அடைவது கஷ்டம். ஆனால் இது தற்போது சாத்தியமற்றதாகி விட்டது. 2019ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 2.7 டிரில்லியன் டாலராக இருந்தது. ஆனால் மார்ச் 22லும் நாம் அதே நிலையில் தான் இருப்போம். ஆக 2.7 டிரில்லியன் டாலரில் இருந்து 5 டிரில்லியன் டாலராக அதிகரிக்க வேண்டும். இதனை அடைய ஐந்து வருடங்களுக்கு தொடர்ச்சியாக 9% ஆக வளர வேண்டும்.

நிதி பற்றாக்குறை

நிதி பற்றாக்குறை

5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தினை அடைய பல சமூக பொருளாதார பிரச்சனைகளுக்கு விடை கொடுக்க வேண்டியிருக்கும். வருவாய் விகிதமானது அதிகரித்து வரும் நிலையில், பட்ஜெட்டில் உள்ள மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதி பற்றாக்குறையை 6.8% கீழாக குறைக்க வேண்டிய அவசியமில்லை.

லாக்டவுனால் மோசமாக சரிவு

லாக்டவுனால் மோசமாக சரிவு

கொரோனா லாக்டவுன் காரணமாக பொருளாதார வளர்ச்சி விகிதம் குறித்தான, பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 2021ல் இந்தியாவின் ஜிடிபி விகிதம் 7.3% ஆக சரிவினைக் கண்டுள்ளது. அமெரிக்காவில் 3.5%மும், பிரான்சில் 8.1%மும், லண்டனில் 9.8%மும் வீழ்ச்சி கண்டுள்ளது.

மீள்ச்சி கண்டு வரத் தொடங்கியுள்ளது?

மீள்ச்சி கண்டு வரத் தொடங்கியுள்ளது?

தற்போது லாக்டவுனில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், பொருளாதாரம் தற்போது மீண்டு வரத் தொடங்கியுள்ளது. முதல் அலையானது பொருளாதாரத்தினை மிக மோசமாக சரிவினைக் கண்டது. இரண்டாவது அலையின்போது லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+