சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர் காரணமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் எல்பிஜி தட்டுப்பாடு நிலவுகிறது. போரால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வர வேண்டிய எல்பிஜி நிறுத்தப்பட்டதே இந்த தட்டுப்பாடுக்கு காரணம்.

மத்திய அரசு வீட்டு உபயோக பயன்பாட்டு சிலிண்டர் விநியோகத்திற்கு தான் முன்னுரிமை தர வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. இதனால் எண்ணெய் நிறுவனங்கள் வணிக சிலிண்டர் டெலிவரி மற்றும் ஆலைகளுக்கான எல்பிஜி விநியோகத்தை நிறுத்தியுள்ளன. இது இந்தியாவில் முதுகெலும்பாக கருதப்படும் விவசாயத்திற்கே பிரச்சினை ஏற்படுத்த தொடங்கியுள்ளது.

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

இந்தியா தனக்கு தேவையான யூரியா மற்றும் டிஏபி ஆகியவற்றை பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்கிறது. அதே வேளையில் உள்நாட்டில் உரம் தயாரிக்க எல்பிஜி கட்டாயம் தேவை. ஈரான் போர் இந்த இரண்டு விஷயங்களுக்குமே முட்டுக்கட்டை போட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் இந்தியாவுக்கு எல்பிஜி வரத்து நிறுத்தப்பட்டிருப்பது.

கடந்த ஆண்டு மட்டும் இந்தியா தனக்கு தேவையான 70 சதவீத உரத்தை ஓமன், சவுதி, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்கிறது. இந்த கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தான் வர வேண்டும். உலகின் இரண்டாவது பெரிய உர நுகர்வாளராக இந்தியா திகழ்கிறது. கப்பல்கள் போக்குவரத்து நிறுத்தம் இந்தியாவில் உரத்தட்டுப்பாடு ஏற்படும் அபாயத்தை உண்டாக்கியுள்ளது.

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

மத்திய அரசு இந்த பிரச்சினையை சமாளிக்க உரக் கொள்முதல் திட்டத்தில் சில அதிரடி மாற்றங்களை செய்திருக்கிறது. வழக்கமாக உரம் வாங்கும் நாடுகளுக்கு பதிலாக இந்தியா தற்போது இந்தோனேஷியா, பெலாரஸ், சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் இருந்து உரங்களை கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளது. வழக்கத்தை விட இங்கிருந்து இரண்டு மடங்கு அதிகமாக உரம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. ஈரான் போர் காரணமாக விநியோக சங்கிலியில் ஏற்பட்ட தடங்கல், உள்நாட்டில் விவசாயிகளுக்கு உரத்தட்டுப்பாட்டை ஏற்படுத்திவிடும் என்பதால் மத்திய அரசு இந்த நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது.

Also Read

மேலும் யூரியா மற்றும் பொட்டாஷ் போன்ற உரங்களின் கையிருப்பை உறுதி செய்ய மத்திய அரசு மாற்று ஏற்பாடுகளை யோசித்திருக்கிறது. மேற்கத்திய நாடுகளின் தடை இருந்தாலும் கூட இந்தியாவின் உணவு பாதுகாப்பை உறுதி செய்ய ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து உரங்களை வாங்க மத்திய அரசு முன்னுரிமை தருகிறது.

இந்திய விவசாயிகளுக்கு ஏப்ரல் முதல் டிசம்பர் மாதம் வரை அதிக உரம் தேவை. அது கிடைக்கவில்லை என்றால் உள்நாட்டில் உரங்களின் விலை உயரும் இது விவசாயத்தையும் உணவு பாதுகாப்பையும் பாதிக்கும். இதனால் குறைந்த விலையில் தடை இன்றி உரம் கிடைக்க ஒரே நாட்டை சார்ந்து இருக்காமல் உர கொள்முதலை பரவலாக்க அரசு முடிவு செய்துள்ளது.

Recommended For You

இந்தியாவுக்கு தேவையான உரத்தில் 70% ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தான் வரவேண்டும். ஆனால் அது தற்போது நிறுத்தப்பட்டு இருக்கிறது. மத்திய, மாநில அரசுகளிடம் தொடர்ந்து உரம் கிடைப்பது உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகளும் உரம் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனங்களும் கேட்டுக் கொண்டுள்ளன.

தட்டுப்பாடு காரணமாக எண்ணெய் நிறுவனங்கள் வீட்டு உபயோக பயன்பாட்டு சிலிண்டர் டெலிவரிக்கு தான் முன்னுரிமை தர வேண்டும் என மத்திய அரசு அறிவித்துவிட்டது இதனால் உரம் தயாரிப்பு நிறுவனங்களுக்கு எல்பிஜி விநியோகம் நிறுத்தப்பட்டு இருக்கிறது. இது உரம் உற்பத்தியை குறைத்துவிட்டது. எனவே வெளிநாடுகளில் இருந்து தான் இதனை இறக்குமதி செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+