மேற்கு ஆசியா போர் காரணமாக இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் மற்றும் பிற எரிபொருட்களின் விநியோகம் பெருமளவில் தடைப்பட்டு இருக்கிறது. இதனால் தற்போது நாடு முழுவதுமே சிலிண்டருக்கு பெரிய தட்டுப்பாடு நிலவுகிறது.
எண்ணெய் நிறுவனங்களை பொறுத்தவரை மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி மருத்துவமனைகள் மற்றும் விடுதிகள் மற்றும் வீட்டு உபயோகத்திற்கு தேவையான சிலிண்டர் விநியோகத்திற்கே முன்னுரிமை தரப் போவதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றன. இதன் காரணமாக வணிக நோக்கத்தில் பயன்படுத்தப்படக்கூடிய சிலிண்டர்கள் விநியோகத்தை நிறுத்தி வைத்திருக்கின்றன.

திடீரென வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டு இருப்பது ஹோட்டல், உணவகங்கள் மற்றும் டீக்கடை உள்ளிட்டவற்றை நடத்தி வருபவர்களுக்கு பெரிய இடியாக அமைந்திருக்கிறது. சென்னை , மதுரை ,நெல்லை , புதுச்சேரி, பெங்களூரு, மும்பை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உணவகங்கள் தங்களுடைய மெனுக்களின் எண்ணிக்கையை குறைத்துவிட்டன. பல்வேறு உணவகங்களும் மூடப்பட்டுள்ளன.
இதே நிலை நீடித்தால் அடுத்த சில தினங்களில் நாடு முழுவதுமே முற்றிலுமாக உணவகத்தையே மூடக்கூடிய சூழல் உண்டாகிவிடும் அல்லது மீண்டும் விறகு அடுப்புகளை நோக்கி செல்ல வேண்டிய சூழல் உண்டாகும் என உணவக உரிமையாளர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் ஹோட்டல் உரிமையாளர் சங்கங்கள் சார்பாக மத்திய அரசுக்கு கடிதமும் எழுதப்பட்டிருக்கிறது. ஹோட்டல்கள் மூடப்பட்டால் இது சார்ந்து இயங்கக்கூடிய லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்தியாவில் கிட்டத்தட்ட 5 லட்சம் உணவகங்கள் மூடப்படக்கூடிய அபாயம் உண்டாகும் என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது. அன்றாட உணவுக்காக உணவகங்களை சார்ந்து இருக்கக்கூடிய முதியவர்கள், இளைஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு பெரிய சிக்கலை உண்டாக்கும். நாடு முழுவதுமே வணிக பயன்பாட்டு சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டு இருக்கக்கூடிய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை ஒன்றை நடத்தினார். இந்த ஆலோசனையில் பெட்ரோலிய துறை அமைச்சர் ஹதித் சிங் பூரி மற்றும் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது எல்பிஜி உற்பத்தி, சப்ளை மற்றும் தற்போது ஏற்பட்டு இருக்கக்கூடிய பிரச்சனை உள்ளிட்டவை குறித்து விரிவாக விவாதம் செய்யப்பட்டது. இந்த விவாதத்தை தொடர்ந்து மத்திய அரசு ஒரு தனி கமிட்டியை அமைத்திருக்கிறது. இந்த கமிட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயங்கக்கூடிய உணவகங்கள் மற்றும் வணிக பயன்பாட்டு சிலிண்டர்களை அதிக அளவில் வாங்கக்கூடிய நபர்களோடு பேச்சு வார்த்தை நடத்தும்.
இதனை அடுத்து முன்னுரிமை அடிப்படையில் இவர்களுக்கு படிப்படியாக கேஸ் விநியோகம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மணி கண்ட்ரோல் தளம் வெளியிட்டு இருக்கக்கூடிய செய்தி கூறுகிறது. மேலும் உள்நாட்டில் எல்பிஜி உற்பத்தி என்பது 10% உயர்த்தப்பட்டு இருப்பதாகவும் அந்த செய்தி குறிப்பிடுகிறது. தற்போதைக்கு விநியோக மேலாண்மையில் பிரச்சனை இருப்பதாகவும் இந்த கமிட்டி அதனை சரி செய்யும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் எல்பிஜி மற்றும் எல்என்ஜி ஆகியவை மாற்று வழிகளில் இந்தியாவுக்கு கொண்டு வர வழிவகை செய்யப்பட்டிருப்பதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஹார்முஸ் ஜலசந்தி இல்லாமல் மற்ற வழித்தடங்கள் மூலம் கச்சா எண்ணெய் மற்றும் பிற எரிவாயுக்களை கொள்முதல் செய்யும் விகிதம் 70% உயர்த்தப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தியாவை சேர்ந்த அனைத்து எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களும் தற்போது தங்களுடைய நூறு சதவீத திறனை பயன்படுத்தி எல்பிஜி மற்றும் பிற எரிபொருட்கள் உற்பத்தியை தீவிரப்படுத்தி இருப்பதாக அந்த செய்தி குறிப்பிடுகிறது.
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications