ரிஷி சுனக் வந்தாச்சு.. மோடி அரசு எதிர்பார்த்தது இனியாவது நடக்குமா..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பல போராட்டங்கள், தோல்விக்குப் பின்பு இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் பிரிட்டன் நாட்டின் பிரதமராகியுள்ளார்.

இவரது வெற்றி பிரிட்டன் நாட்டில் வாழும் இந்தியர்களுக்கும், ரிஷி சுனக் இருக்கும் கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களுக்கும் மகிழ்ச்சியை அளித்தாலும் பிரிட்டன் மக்கள் விரும்பவில்லை எனக் கருத்து நிலவி வருகிறது.

இதுகுறித்து பிரிட்டன் நாட்டின் மிகவும் பிரபலமான தி டெய்லி ஷோவில் ரிஷி சுனக் கடுமையாக விமர்சிக்கப்பட்டு உள்ளது.(வீடியோ கடைசியில் இணைக்கப்பட்டு உள்ளது)

ரிஷி சுனக் மனைவி அக்ஷதா மூர்த்தி-யின் வருமானம் எவ்வளவு தெரியுமா..?! ரிஷி சுனக் மனைவி அக்ஷதா மூர்த்தி-யின் வருமானம் எவ்வளவு தெரியுமா..?!

ரிஷி சுனக்

ரிஷி சுனக்

எது எப்படி இருந்தாலும் ரிஷி சுனக் வந்தது மூலம் பிரிட்டன் அரசியல் தடுமாற்றங்கள் கண்டிப்பாகக் குறையும், இதேபோல் முன்னாள் நிதியமைச்சராக இருந்த ரிஷி சுனக் தற்போது பிரதமராகி இருக்கும் காரணத்தால் கட்டாயம் பொருளாதாரச் சரிவில் இருந்து மீண்டு வர வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.

இந்தியா

இந்தியா

அதேவேளையில் இந்தியாவுக்கான ஒரு திட்டம் நீண்ட காலமாகப் பிரிட்டன் அரசு முன்னிலையில் காத்திருக்கிறது, இத ரிஷி சுனக் ஆட்சியிலாவது முடிவுக்கு வருமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இது மட்டும் நடந்துவிட்டால் இந்தியாவுக்கு ஜாக்பாட் ஆக அமையும்.

 உற்பத்தி மற்றும் ஏற்றுமதி
 

உற்பத்தி மற்றும் ஏற்றுமதி

இந்தியா தனது பொருளாதாரத்தைச் சேவைத் துறை ஆதிக்கத்திலிருந்து மீட்டு எடுத்து உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வர்த்தகமாக மாற்றிச் சீனாவுக்கு இணையாகப் பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்ய வேண்டும் எனத் திட்டமிட்டு அதற்காக நிறுவனங்களை ஈர்ப்பது முதல் கொள்கை மாற்றங்கள் செய்வது வரையில் பல முக்கியமான பணிகளைச் செய்து வருகிறது.

பீர் டிரேட் ஒப்பந்தம்

பீர் டிரேட் ஒப்பந்தம்

இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகத்தை அதிகரிக்க வேண்டும் என்றால் உலக நாடுகள் உடன் சரியான மற்றும் லாபகரமான பீர் டிரேட் ஒப்பந்தம் அவசியமாக உள்ளது. சமீபத்தில் இந்திய ஐக்கிய அரபு நாடுகள் உடன் ப்ரீ டிரேட் ஒப்பந்தம் செய்தது மூலம் பல பொருட்களின் ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் வரிச் சலுகை பெற்று இரு நாடுகள் மத்தியில் வர்த்தக அளவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

பிரிட்டன் - இந்தியா ப்ரி டிரேட் ஒப்பந்தம்

பிரிட்டன் - இந்தியா ப்ரி டிரேட் ஒப்பந்தம்

இதேபோல் பிரிட்டன் - இந்தியா மத்தியிலான ப்ரி டிரேட் ஒப்பந்தம் செய்ய நீண்ட காலமாக மோடி அரசு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் தனியாக வந்த பின்பு இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம் மிகவும் முக்கியமானதாக விளங்கியது.

தொடர் தாமதம்

தொடர் தாமதம்

இந்த நிலையில் இரு நாடுகள் மத்தியிலான வர்த்தக ஒப்பந்தம் விதிமுறைகள், கண்டிஷன்களை ஆலோசனை செய்து முடிவு செய்யப்பட்ட நிலையில் பிரிட்டன் நாட்டின் அரசு தலைகீழாகக் கவிழ்ந்தது. முதலில் போரிஸ் ஜான்சன் மற்றும் அவரது நிர்வாகக் குழுவின் மீது அபராதம், போரிஸ் ஜான்சன் ராஜினாமா, புதிய அதிபருக்கான தேர்தல், லிஸ் ட்ரஸ் தேர்வு, எலிசபெத் ராணி மறைவு, லிஸ் ட்ரஸ் ராஜினாமா, ரிஷி சுனக் புதிய பிரதமராகத் தேர்வு எனத் தாமதமானது.

தீபாவளி இலக்குத் தோல்வி

தீபாவளி இலக்குத் தோல்வி

இந்தியா - பிரிட்டன் மத்தியிலான ப்ரீ டிரேட் ஒப்பந்தம் தீபாவளி பண்டிகைக்குள் கையெழுத்தாக வேண்டி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில் தாமதமானது. இந்த நிலையில் ரிஷி சுனக் வந்த பின்பு அரசியல் தடுமாற்றம் குறையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்தியா - பிரிட்டன் மத்தியிலான ப்ரீ டிரேட் பேச்சுவார்த்தை விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு

இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு

இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமரானது மூலம் இந்தியாவிற்கு மிகவும் சாதகமான சூழ்நிலை உருவாகும். பல மாதங்களாகத் தேங்கிக்கிடக்கும் பேச்சுவார்த்தை வேகமெடுக்கும் இது கண்டிப்பாக இந்தியாவுக்குச் சாதகமாக அமையும் என இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (FIEO) துணைத் தலைவர் காலித் கான் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு விவகாரம்

உள்நாட்டு விவகாரம்

அதேவேளையில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பிஸ்வஜித் தர் கூறுகையில், புதிய இங்கிலாந்து பிரதமர் முதலில் உள்நாட்டுப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தி பொருளாதாரத்தை மேம்படுத்தும் பணிகளைத் தான் முதலில் பார்ப்பார் அதன் பின்பு தான் வெளிநாட்டு விவகாரங்களில் கவனம் செலுத்துவார் எனத் தெரிவித்துள்ளார்.

ரிஷி சுனக் குடும்பம் பிரிட்டன் வந்தது எப்படி..?ரிஷி சுனக் குடும்பம் பிரிட்டன் வந்தது எப்படி..?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India-Britain free trade agreement back to light; Does Rishi sunak take a call on modi plan

India-Britain free trade agreement back to light; Does Rishi sunak take a call
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X