நிதி துறை செயலாளர் இல்லாமலேயே தயாரிக்கப்படுகிறதா மத்திய பட்ஜெட் 2026?

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் நிதி அமைச்சக அதிகாரிகள் மத்திய பட்ஜெட் 2026-27க்கான தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் 9ஆவது பட்ஜெட் ஆகும். பிப்ரவரி 1, ஞாயிற்றுக்கிழமை இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் என்பது வழக்கத்துக்கு மாறானது. மேலும், பட்ஜெட் ஒருங்கிணைப்புக்கு பொறுப்பான நிதிச் செயலாளர் இல்லாமலேயே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருப்பது விவாத பொருளாகி இருக்கிறது.

நிதி அமைச்சகத்தில் மூத்தவராகவும், பட்ஜெட் தயாரிப்பு மற்றும் அன்றாடச் செயல்பாடுகளில் நிதிச் செயலாளர் முக்கியப் பங்கு வகிப்பார். முன்னாள் பொருளாதார விவகாரங்கள் துறைச் செயலாளர் அஜய் சேத், 2025 ஜூன் 30 வரை நிதிச் செயலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார். தற்போது அவர் இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (IRDAI) தலைவராக உள்ளார். அவருக்கு முன் துஹின் காந்தா பாண்டேவும் நிதிச் செயலாளராகப் பொறுப்பு வகித்துள்ளார்.

நிதி துறை செயலாளர் இல்லாமலேயே தயாரிக்கப்படுகிறதா மத்திய பட்ஜெட் 2026?

நிதிச் செயலாளர் இல்லாவிட்டாலும், அமைச்சகப் பணிகள் வழக்கம் போல் நடைபெறுவதாகவும், சவால்கள் எழவில்லை எனவும் நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. செலவினம், வருவாய் முன்மொழிவுகள், வரி வசூல் குறித்த முக்கிய பட்ஜெட் பணிகள், பொருளாதார விவகாரங்கள், செலவினம் மற்றும் வருவாய் துறைகளால் ஒருங்கிணைக்கப்படுகின்றன.

நிதியமைச்சர் சீதாராமனின் ஒன்பதாவது பட்ஜெட் குழுவில், நிதிச் சேவைகள் செயலாளர் எம். நாகராஜு, டிஐபிஏஎம் (DIPAM) செயலாளர் அருணிஷ் சாவ்லா, தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன் ஆகியோர் தொடர்கின்றனர். ஆனால் வருவாய், செலவினம், பொருளாதார விவகாரங்கள் துறைகளுக்கு முறையே அர்விந்த் ஸ்ரீவஸ்தவா, வி. வுவல்னம், அனுராதா பிரசாத் என மூன்று புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த புதிய செயலாளர்கள் அமைச்சகத்திற்குப் புதியவர்களல்ல. அர்விந்த் ஸ்ரீவஸ்தவா பிரதமர் அலுவலக கூடுதல் செயலாளராகவும், பொருளாதார விவகாரங்கள் துறையின் பட்ஜெட் பிரிவில் இணைச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். வி. வுவல்னம், பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சக கூடுதல், டிஐபிஏஎம்-ல் இணைச் செயலாளராகவும், நிதி அமைச்சக துணைச் செயலாளராகவும், உலக வங்கியில் இயக்குநரின் ஆலோசகராகவும் அனுபவம் கொண்டவர்.

வரிவிதிப்புத் துறையில், மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (CBDT) தலைவர் ரவி அகர்வால் 2024 ஜூன் முதல் பதவியில் உள்ளார். அவர் 2026 ஜூன் 30 வரை ஓராண்டு நீட்டிப்புப் பெற்றுள்ளார். இது பட்ஜெட் மற்றும் புதிய வருமான வரிச் சட்டத்தை செயல்படுத்தக் உதவும்.

மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்திற்கு (CBIC) புதிய தலைவராக, 1990 பேட்ச் இந்திய வருவாய் சேவை (சுங்கம் மற்றும் மறைமுக வரிகள்) அதிகாரியான விவேக் சதுர்வேதி, 2025 டிசம்பர் 1 அன்று பொறுப்பேற்றார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+