மத்திய பட்ஜெட்டில், உயர் மதிப்புள்ள மூலதனப் பொருட்களை உள்நாட்டில் உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கவும், இறக்குமதி சார்பைக் குறைப்பதை இலக்காக கொண்டும் ரூ 23,000 கோடி ஊக்கத்தொகை திட்டங்களை அறிவிக்க அரசு பரிசீலினை செய்து வருவதாக எக்கனாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
அரசாங்க அதிகாரிகள் தெரிவித்தபடி, இத்திட்டங்கள் தற்போது தயாராகி வருகின்றன. கட்டுமான உபகரணத் துறைக்கு ரூ 14,000 முதல் ரூ 16,000 கோடி வரையிலும், வாகனத் துறைக்கான உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளை (GVCs) வலுப்படுத்தும் நோக்கில் ரூ 7,000 கோடி மதிப்பிலான திட்டங்களும் இறுதி செய்யப்பட உள்ளன.

மூலதனப் பொருட்கள் சுற்றுச்சூழல் அமைப்பைப் பலப்படுத்த முந்தைய முயற்சிகளின் தொடர்ச்சியாக இப்புதிய திட்டங்கள் பார்க்கப்படுகின்றன. 2022 ஜனவரியில், கனரகத் தொழில் துறை அமைச்சகம் ரூ 1,207 கோடி செலவில், தொழில்நுட்ப மேம்பாடு, சோதனை வசதிகளை ஆதரிக்கும் இரண்டாம் கட்ட திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
சமீபத்திய பட்ஜெட் நடவடிக்கைகளில் உள்நாட்டுமயமாக்கலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. 2025-26 யூனியன் பட்ஜெட்டில், மின்சார வாகனம் மற்றும் மொபைல் போன் பேட்டரி உற்பத்திக்கு 35, 28 மூலதனப் பொருட்களுக்குச் சுங்க வரி விலக்கு அளிக்கப்பட்டது. இது உள்நாட்டு லித்தியம்-அயன் பேட்டரி உற்பத்தியை அதிகரிக்கும்.
முன்மொழியப்பட்ட கட்டுமான உபகரணத் திட்டம், சுரங்கப்பாதை தோண்டும் இயந்திரங்கள், கிரேன்கள் போன்ற உயர்ரக இயந்திரங்களை உள்நாட்டில் தயாரிக்க கவனம் செலுத்துகிறது. இதன் நோக்கம் இறக்குமதி சார்புநிலையைக் குறைப்பதே. இத்துறையின் மதிப்பு அடிப்படையில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்ட பாகங்கள் சீனா, ஜப்பான், தென் கொரியா, ஜெர்மனி போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
சீனா சுரங்கப்பாதை தோண்டும் இயந்திரங்கள் ஏற்றுமதிக்கு விதித்த கட்டுப்பாடுகள், இந்தியாவில் உள்கட்டமைப்பு திட்டங்களைத் தாமதப்படுத்தின. டெல்லி-பெய்ஜிங் பேச்சுவார்த்தையை அடுத்து, கடந்த ஆண்டு அவை தளர்த்தப்பட்டன. ஹைட்ராலிக்ஸ், அடிப்பாகங்கள், மின்னணு கட்டுப்பாட்டு அலகுகள் (ECUs), சென்சார்கள், டெலிமேடிக்ஸ் ஆகியவை இத்துறையின் முக்கிய இறக்குமதிப் பொருட்களில் அடங்கும்.
"இந்த திட்டம் அதிக எடையுள்ள மற்றும் முழுமையாகத் தயாரிக்கப்பட்ட இயந்திரங்களின் இறக்குமதியைக் குறைக்கும்," என்று உயரதிகாரி ஒருவர் எக்கனாமிக் டைம்ஸிடம் தெரிவித்தார். ஏற்கனவே உள்ள ஊக்கத்தொகை கட்டமைப்புகளின் வெற்றியை மேலும் அதிகரிக்கும் வகையில் இப்புதிய திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
வாகனத் துறைக்கான முன்மொழியப்பட்ட GVC திட்டம், மேம்பட்ட ஓட்டுநர் உதவி அமைப்புகள் (ADAS), 360 டிகிரி கேமராக்கள் மற்றும் சென்சார்கள் போன்ற அதிநவீன பாகங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு முன்னுரிமை அளிக்கும் என எக்கனாமிக் டைம்ஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறைந்தது 50% உள்நாட்டு மதிப்பு கூட்டலுடன் உற்பத்தி செய்வது ஏற்றுமதி வாய்ப்புகளையும் உருவாக்கும்.
மேலும், வாகன உதிரிபாக உற்பத்தியில் பயன்படும் அச்சுகள் (moulds), மின் கருவிகள் (power tools) வாங்குவதற்கான மானியங்களும் சேர்க்கப்படலாம். இத்திட்டம், உற்பத்திக்கு முந்தைய சோதனைகளுக்கான மாதிரி உருவாக்க மையங்களை (prototyping centres) உருவாக்கி, தொழில்துறை ஒத்துழைப்பு மூலம் விநியோகச் சங்கிலி மீள்தன்மையை வலுப்படுத்தும்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications