மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர், நிதி அமைச்சகத்தில் 'அல்வா விழா' நடத்தப்படுகிறது. பிப்ரவரி 1 அன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் நடைபெறும் இறுதிக்கட்ட தயாரிப்புகளை இது குறிக்கிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் இச்சடங்கு பட்ஜெட் தயாரிப்பின் இறுதிப் படிநிலையாகும் என நிதி அமைச்சகம் தெரிவிக்கிறது.
இந்த ஆண்டுக்கான அல்வா விழா அடுத்த வாரம் நடைபெறும். பிப்ரவரி 1, 2026 அன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ள பட்ஜெட் தாக்கலுக்கு முன் இது நடைபெறும். மேலும், பட்ஜெட் அச்சிடும் பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கான தனிமைப்படுத்தப்பட்ட 'லாக் இன்' காலம் தொடங்குவதையும் இது குறிக்கிறது. இது வழக்கமாக அச்சகப் பகுதியில் நடைபெறும்.

நிதியமைச்சர் மத்திய பட்ஜெட்டை மக்களவையில் சமர்ப்பிப்பதற்கு முன், ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் விழாவாகும். நார்த் பிளாக்கில் உள்ள பெரிய கடாயில் அல்வா தயார் செய்யப்பட்டு, பட்ஜெட் தயாரிப்புப் பணியில் உள்ள அமைச்சக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்குப் பரிமாறப்படுகிறது.
இந்த விழா டெல்லி நார்த் பிளாக் வளாக நிதி அமைச்சக அலுவலகத்தில் நடைபெறும். இங்கு பட்ஜெட் ஆவணங்களை அச்சிடுவதற்கான பாதுகாப்பான அச்சகம் உள்ளது. அல்வா விழா, பட்ஜெட் ஆவணங்கள் அச்சிடும் செயல்முறை தொடங்குவதைச் சுட்டுகிறது. பல மாதங்களாக பட்ஜெட்டை உருவாக்கிய குழுவின் கூட்டு முயற்சிகளை இவ்விழா கொண்டாடுகிறது.
விழா முடிந்ததும், அமைச்சக அதிகாரிகள் சிறப்பு 'லாக் இன்’ காலத்திற்குள் (lock-in period) செல்வார்கள். பட்ஜெட் ரகசியங்கள் கசிவதைத் தடுக்க, அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். இக்காலத்தில், பட்ஜெட் அதிகாரிகள் நாடாளுமன்றத்தில் ஆவணம் தாக்கல் செய்யப்படும் வரை அமைச்சக வளாகத்தை விட்டு வெளியேற அனுமதியில்லை.
இறுதி பட்ஜெட் ஆவணத்தின் ரகசியத்தன்மையை பாதுகாப்பதற்காக, அவர்கள் குடும்பத்தினருடனும், வெளி உலகத்துடனும் அனைத்து தொடர்புகளையும் துண்டித்துக் கொள்கிறார்கள். நிதியமைச்சர் பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்த பின்னரே, ஊழியர்கள் நார்த் பிளாக்கை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள்.
பட்ஜெட் பிப்ரவரி 1 அன்று தாக்கல் செய்யப்படுவதால், அல்வா விழா பொதுவாக ஜனவரி கடைசி வாரத்தில் நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு, இந்த விழா ஜனவரி 24 அன்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. நடப்பு நிதியாண்டில் 7.4 சதவீதம் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி எதிர்பார்க்கப்படும் நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது தொடர்ச்சியான ஒன்பதாவது பட்ஜெட்டாக, 2026-27 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
மத்திய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் கிரண் ரிஜிஜு ஜனவரி 9 அன்று தெரிவித்தபடி, பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் கட்டம் ஜனவரி 28 அன்று தொடங்கி பிப்ரவரி 13 வரை நடைபெறும். ஒரு இடைவேளைக்குப் பிறகு இரண்டாவது கட்டம் நடைபெறும்.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications