காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து மத்திய அரசு பாகிஸ்தான் மீது பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தான் சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டது. உலக நாடுகளுக்கு இடையே இருக்கும் முக்கியமான நதிநீர் ஒப்பந்தங்களில் சிந்து நதி நீர் ஒப்பந்தம் முதன்மையானது. பகை கொண்ட இரண்டு நாடுகள் இடையே 60 ஆண்டுகளுக்கு மேலாக அமலில் இருந்த இந்த ஒப்பந்தம் தான் தற்போது இந்தியாவால் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.

இதனால் பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளிலும் வேளாண்மை பாதிக்கப்படும் என சொல்லப்படுகிறது .இந்த சூழலில் சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்திருக்கும் மத்திய அரசு சிந்து நதியின் மீது இரண்டு நீர் தேக்கங்களை கட்டுவதற்கு திட்டமிட்டு இருப்பதாக இந்தியா டாட் காம் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. சிந்து நதியின் பெரும்பாலான தண்ணீரை இந்தியாவே சேகரித்து பயன்படுத்த இந்த நீர் தேக்கங்கள் வழிவகை செய்யும் என சொல்லப்படுகிறது.
இந்த இரண்டு நீர் தேக்கங்களும் கட்டி முடிக்கப்பட்டு விட்டால் சிந்து நதி நீரின் போக்கை இந்தியா எளிதாக கட்டுப்படுத்த முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து மத்திய அரசு இப்படி ஒரு முடிவை எடுக்கவில்லை பல ஆண்டுகளாகவே இதற்கான திட்டமிடலும் ஆலோசனைகளும் நடந்து வந்தன அதன் அடிப்படையில் தான் தற்போது பணிகள் நடைபெறுகின்றன என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிந்து நதி நீர் ஆணையத்திற்கான முன்னாள் தலைவர் ஏ கே பஜாஜ் , என்டிடிவிக்கு அளித்துள்ள பேட்டியில் இந்த இரண்டு நீர் தேக்கங்களும் கட்டப்பட்டு விட்டால் இந்தியா சிந்து நதியின் பெரும்பாலான தண்ணீரை பயன்படுத்த முடியும். தேக்கி வைத்துக்கொள்ள முடியும் என கூறுகிறார்.
பாகல் தல் மற்றும் பர்சார் ஆகிய இரண்டு நீர் தேக்க திட்டங்கள் தான் தற்போது தீவிர படுத்தப்பட்டு வருகின்றன இது முழுமை அடைந்து விட்டால் இந்த தண்ணீரை, ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கு திருப்பி விட்டு அந்த மாநிலங்களின் வேளாண் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும் என சொல்லப்படுகிறது.
1960 ஆம் ஆண்டு இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே சிந்து நதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் ஏற்பட்டு வந்தாலும் இந்த நதிநீர் ஒப்பந்தம் தொடர்ந்து அமலில் தான் இருந்து வந்தது. இதன் படி சிந்து நதியின் கிழக்கு நதிகளாக அறியப்படும் சட்லஜ், பயாஸ் மற்றும் ரவி ஆகிய மூன்று நதிகளின் நீரை இந்தியா பயன்படுத்திக் கொள்வதற்கு முழு உரிமை அளிக்கப்படுகிறது. மேற்கு நதி எனப்படும் சிந்து, ஜீலம், செனாப் ஆகிய மூன்று நதிகளின் பாகிஸ்தான் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் குறிப்பிட்ட அளவு நீரை இந்தியாவுன் பயன்படுத்த அனுமதி உண்டு.
இந்த நதி நீரை பெருமளவில் இந்தியாவிற்கு திருப்பி விடும் நோக்கில் தான் இந்த அணைகள் கட்டப்படுகின்றன. இதில் பாகல் துல் திட்டத்திற்கான கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன பர்சர் நீர் தேக்கத்திற்கான திட்டமிடும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கின்றன.


Click it and Unblock the Notifications