இந்தியாவின் பெயரை பாரத் என ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ ஜி20 கூட்டத்தின் சிறப்பு விருந்து அழைப்பிதழ்களில் இடம்பெற்று இருந்தது மக்கள் மத்தியில் பெரும் விவாதமாக மாறியுள்ளது.
இதேவேளையில் செப்டம்பர் 18-22 வரை திட்டமிடப்பட்டுள்ள நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடரில் இந்தியாவின் அதிகாரப்பூர்வ பெயரை 'பாரத்' என மாற்றுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்ற வாய்ப்புள்ளது என்றும் கருத்து நிலவுகிறது.

இந்த நிலையில் நாட்டு மக்கள் பர்மா - மியான்மர் பெயர் மாற்றம் தொடர்பாக அமெரிக்கா எடுத்துள்ள முடிவை இந்திய மக்கள் கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
இந்தியாவின் அண்டை நாடாகவும், எல்லையை பகிர்ந்துக் கொள்ளும் நாடாக இருக்கும் பர்மா, பல தலைமுறைகளாக இதே பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. ஆனால் 1989ல் அந்நாட்டில் உருவான ராணுவ அரசால் பர்மா என்ற பெயர் மியான்மர் என மாற்றம் செய்யப்பட்டது.
ஜனநாயகத்திற்கு ஆதரவான எழுச்சியை அந்நாட்டு ராணுவம் நசுக்கி, ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்ற பின்னர் இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இது மட்டும் அல்லாமல் பர்மா நாட்டின் மிகப்பெரிய நகரமான ரங்கூன் பெயரை ஆங்கிலத்தில் யாங்கோன் என்றும் மாற்றியது.
இந்த பெயர் மாற்றம் என்பது அடிப்படையில் ஆங்கில இடப் பெயர்களை முற்றிலும் நீக்கிவிட்டு பர்மிய இடப்பெயர்கள் மற்றும் உச்சரிப்புடன் சீரமைக்கும் நோக்கத்தில் அமைந்தது. பர்மிய மொழியில் அந்நாட்டின் அதிகாரப்பூர்வ பெயர் மியான்மர் ஆகும், மியான்மர் என்ற பெயர் 13 ஆம் நூற்றாண்டிலிருந்து பயன்படுத்தப்படுகிறது. பர்மா என்ற பெயர் அந்நாட்டில் ஆதிக்கம் செலுத்தும் இனக்குழுவான பர்மன் என்பதிலிருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
உலகளவில் பெரும்பாலான நாடுகள் பர்மா-வின் பெயரை மியான்மர் என்ற மாற்றத்தை அங்கீகரித்து, பயன்பாட்டில் கொண்டு வந்தாலும் . அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற சில நாடுகளில், பர்மா என்ற பெயரைத் தொடர்ந்து பயன்படுத்துகின்றன. ஏன் தெரியுமா..?
1989 பெயர் மாற்றத்தை அங்கீகரிக்காத அமெரிக்க அரசு மியான்மர் என்ற பெயரை பயன்படுத்தாமல் இன்னும் பர்மா என்ற பெயரைப் பயன்படுத்துகிறது. இந்த பெயர் மாற்றம் சட்ட விரோத அரசாங்கத்தால் மக்களின் அனுமதியின்றி செய்யப்பட்டதாக அமெரிக்கா கூறுகிறது.

2016 ஆம் ஆண்டு அந்நாட்டில் ஜனநாயக ஆட்சி நடைமுறைக்கு வந்து புதிய அதிபராக Aung San Suu Kyi பதவியேற்றிய போது, பர்மா, மியான்மர் பெயர் விவகாரம் வந்த வேளையில் அவர் இரண்டு பெயருமே அங்கிகரிக்கப்படுகிறது என தெரிவித்தார். ஆனால் இன்னமும் அமெரிக்கா மியானமர் என்ற பெயரை பயன்படுத்தாமல் பர்மா என்ற பெயரையே பயன்படுத்துகிறது.
சமீபத்தில் அமெரிக்காவின் கருவூல துறை வெளியிட்ட அறிக்கையில் பர்மா என்ற பெயரையே பயன்படுத்தியுள்ளது. மியானமர் என்ற பெயரை பயன்படுத்தாமல் இருப்பதற்கான காரணத்தையும் அமெரிக்காவின் நாடாளுமன்றத்தில் நிர்வகிக்கப்படும் usip தளத்தில் தெரிவித்துள்ளது.

இதேபோல் இந்தியாவில் 135 கோடி மக்களின் அனுமதி இல்லாமல் நாடாளுமன்றத்தில் மசாதா தாக்கல் செய்து இந்தியாவின் பெயர் பாரத் என மாற்றப்பட்டால், மியான்மர் பெயரை அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் அங்கிரிக்கப்படாமல் இருப்பது போன்ற நிலை பாரத்-க்கும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதை மோடி அரசு எப்படி கையாளுகிறது என்பதை பெயர் மாற்றத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த பின்பு தான் தெரியும், உலகளவில் வேகமாக வளரும் நாடுகளில் முக்கியமானதாக இருக்கும் இந்தியாவுக்கு பெயர் மாற்றம் சர்வதேச சந்தையில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..?


Click it and Unblock the Notifications