டிரம்ப்-க்கு மோடி தரும் 2.6 பில்லியன் டாலர் கிப்ட்.. ஆயுத ஒப்பந்தம்..!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்த மாதம் இந்தியா வருகிறார், இந்தச் சந்திப்பில் இந்தியா அமெரிக்க ராணுவ உபகரணங்கள் மற்றும் ஆயுத தயாரிப்பு நிறுவனமான லாக்ஹீட் மார்டின்-யிடம் இருந்து 2.6 பில்லியன் டாலர் மதிப்பிலான 24 MH-60R Seahawk ரக ராணுவ ஹெலிக்காப்படர்களை வாங்கும் திட்டத்திற்கு இறுதி முடிவு எடுக்க உள்ளது.

இந்தியா சீனா

இந்தியா சீனா

அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப் போர் நடைபெற்று வந்த போது இந்தியாவையும் வர்த்தக ரீதியில் அமெரிக்கச் சீண்டியது யாராலும் மறக்க முடியாது. ஆனால் இந்தச் சந்திப்பில் இரு நாடுகள் மத்தியிலான வர்த்தகப் பிரச்சனை அனைத்தையும் தீர்க்க வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காகத் தான் இந்தியாவில் பல மேக் இன் இந்தியா திட்டங்கள் இருந்தாலும் இந்த ஆயுத ஒப்பந்தம் நடத்தத் திட்டமிட்டுள்ளது.

ரஷ்யா

ரஷ்யா

பொதுவாக இந்தியா ரஷ்யாவிடம் இருந்து தான் அதிகளவிலான ஆயுதங்கள் மற்றும் ராணுவ உபகரணங்கள் வாங்கும். ஆனால் சமீபத்தில் இந்தியா அமெரிக்காவிடம் இருந்து அதிகளவிலான ஆயுதங்களை வாங்கி வருகிறது. 2007ஆம் ஆண்டு முதல் சுமார் 17 பில்லியன் டாலர் அளவிலான ஆயுதங்களை இந்தியா அமெரிக்காவிடம் இருந்து வாங்கியுள்ளது.

பிப்ரவரி 24

பிப்ரவரி 24

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம் பிப்ரவரி 24ஆம் தேதி இந்தியா வருவதாகத் தகவல் இருந்தாலும் அமெரிக்கா இதை உறுதி செய்யவில்லை. காரணம் தற்போது நடந்து வரும் வர்த்தக ஒப்பந்தங்கள் தான். அனைத்தும் தனக்குச் சதாகமாக இருக்கும் பட்சத்தில் தான் அமெரிக்க அதிபர் இந்தியாவிற்கு வருவார் என்ற பேச்சும் இருந்து வருகிறது.

வர்த்தகக் கட்டுப்பாடுகள்

வர்த்தகக் கட்டுப்பாடுகள்

அமெரிக்கா உடனான வர்த்தகத்தில் சீனாவை அடுத்து அதிக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் நாடுகளைப் பட்டியலில் இந்தியா இருக்கும் நிலையில் இந்திய வர்த்தகச் சந்தைக்கும் சில மாதங்களுக்கு முன் பல வர்த்தகக் கட்டுப்பாடுகளை விதித்தது டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு.

Generalized System of Preferences

Generalized System of Preferences


இதில் முக்கியமான ஒன்றாக அமெரிக்காவுடனான வர்த்தகச் செய்யும் நாடுகள் மத்தியில் சில நாடுகளுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கும். இதை அமெரிக்கா Generalized System of Preferences திட்டம் என அழைக்கும். இத்திட்டத்தில் இருக்கும் நாடுகளுக்கு அமெரிக்கா வர்த்தகம் செய்யச் சில குறிப்பிடச் சலுகையை வழங்கி வந்தது.

இந்த முக்கியமான திட்டத்தில் இருந்து கடந்த ஆண்டு அமெரிக்க அரசு, இந்தியாவை நீக்கியது. இதனால் சுமார் 5.6 பில்லியன் டாலர் அளவிலான வர்த்தகப் பொருட்கள் மீதான வரி உயர்ந்தது. இதற்கு எதிராக இந்தியாவும் தனது பங்கிற்குச் சுமார் 12க்கும் அதிகமான அமெரிக்கப் பொருட்களின் மீது வரியை விதித்தது.

 

வர்த்தகப் பிரச்சனை

வர்த்தகப் பிரச்சனை

இரு நாடுகளுக்கு மத்தியில் இருக்கும் வர்த்தகப் பிரச்சனையைச் சரி செய்யவேண்டும் என முடிவு செய்துள்ள நிலையில் அமெரிக்கா, இந்திய பயணத்திற்குத் திட்டமிட்டது.

இந்தியாவை மீண்டும் Generalized System of Preferences திட்டத்தின் கீழ் சேர்க்க வேண்டும் என்றால் பல்வேறு வர்த்தக நிபந்தனைகளை அமெரிக்கா விதித்தது. இதில் முதன்மையான ஒன்று வரிக் குறைப்பு

 

வரிக் குறைப்பு

வரிக் குறைப்பு

டிரம்ப்-இன் பயணம் குறித்த அறிவிப்பு வெளியான முதல் இரு நாடுகள் மத்தியிலான (வர்த்தக) பேச்சுவார்த்தை துவங்கியது. இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பாதாம், வால்நட் மற்றும் ஆப்பிள் மீது விதித்துள்ள விரியை நீக்க அமெரிக்கா உறுதி அளித்துள்ளது.

இதேபோல் இந்தியா, அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் மருத்து உபகரணங்கள் மீது விதிக்கப்பட்ட அதீத வரியைக் கணிசமாகக் குறைக்க ஒப்புதல் அளித்துள்ளது.

 

ஹார்லி டேவிட்சன்

ஹார்லி டேவிட்சன்

இதோடு அமெரிக்கத் தயாரிப்பான ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள் மீது அமெரிக்காவிற்குப் பதிலடி கொடுக்கும் விதிமாக இந்திய அரசு விதித்த வரியில் 50 சதவீதத்தைக் குறைக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

5 - 6 பில்லியன் டாலர் வர்த்தகம்

5 - 6 பில்லியன் டாலர் வர்த்தகம்

இந்தியாவை மீண்டும் அமெரிக்காவின் Generalized System of Preferences திட்டத்திற்கு வர வேண்டுமெனில் தற்போது செய்யப்படும் வர்த்தக அளவை விடவும் கூடுதலாக 5 முதல் 6 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும் என நிபந்தனையும் வித்துள்ளதாகத் தெரிகிறது.

இதன் ஒரு பகுதியாகத் தான் தற்போது 24 MH-60R Seahawk ரக ராணுவ ஹெலிக்காப்படர்களை வாங்க திட்டமிட்டு உள்ளதாகலும் தெரிகிறது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+