உலக நாடுகளின் பொருளாதாரம், வர்த்தகத்தை கொரோனா தொற்று நோய்க்கு பின்பு தலைகீழாக புரட்டிப்போட்ட ஒரு விஷயம் ரஷ்யா - உக்ரைன் போர், இந்த போருக்கு பின்பு தான் ஐரோப்பிய நாடுகளும், உலக நாடுகளும் எந்த அளவுக்கு ரஷ்யாவை சார்ந்துள்ளது என வெளிச்சத்திற்கு வந்தது.
உக்ரைன் உடனான ரஷ்யாவின் போர் இன்னும் முடியாத நிலையில் ரஷ்யாவின் நிதி நிலையை சீர்குழைக்கவும், பொருளாதாரத்தை மோசமாக்கவும் உக்ரைன் ஆதரவு அளிக்கும் மேற்கத்திய நாடுகள் ஒன்றிணைந்து ரஷ்யா வெரும் 60 டாலர் விலையில் தான் கச்சா எண்ணெய் விற்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த நிலையில் உக்ரைன் உடனான ரஷ்யாவின் போர் துவங்கிய காலத்தில் இருந்து இந்தியா ரஷ்யாவிடம் இருந்து அதிகப்படியான கச்சா எண்ணெய் வாங்கி வரும் வேளையில் இது நாள் வரையில் பெரும் தள்ளுபடியில் வாங்கி வந்தது. இதனால் 60 டாலர் பென்ச்மார்க் விலைக்கு குறைவாக வாங்கப்பட்டதாக கூறப்பட்டது.
ஆனால் தற்போது ரஷ்யா இந்தியாவுக்கு ஒரு பேரல் கச்சா எண்ணெய்யை சுமார் 80 டாலருக்கு விற்பனை செய்ததாக சில முக்கிய எண்ணெய் வர்த்தகர்கள் கூறியதாக ரெயூட்டர்ஸ் தெரிவித்துள்ளது. கச்சா எண்ணெய் சந்தையில் அதிகப்படியான டிமாண்ட் இருக்கும் காரணத்தால் இதன் விலையில் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில் ரஷ்யா தனது கச்சா எண்ணெய் விலையை உயர்த்தியதாக தெரிகிறது.
ரஷ்யா மற்றும் சவுதி அரபியா உடன் சில பல OPEC+ நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த காரணத்தால் ரஷ்யாவின் URAL கச்சா எண்ணெய் விலை கடந்த 2 வாரத்தில் ஒரு பேரலுக்கு 4-5 டாலர் வரையில் அதிகரித்துள்ளது. இதேபோல் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 6-7 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.
ரஷ்யாவில் இருந்து வாங்கப்படும் கச்சா எண்ணெய் விலை என்பது இதுவரையில் இதை வாங்கும் இந்தியன் ஆயில் கார்ப், பார்த் பெட்ரோலியம் கார்ப், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப், மங்களூர் ரிப்பைனரி மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் லிமிடெட், HPCL மிட்டல் எனர்ஜி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், நைரா எனர்ஜி ஆகியவை எவ்விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
ஆனால் இந்திய நிறுவனங்களும், இந்திய அரசும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை சற்றும் குறைக்கவில்லை. அக்டோபர் மாதம் வரையில் இந்தியாவின் டாப் கச்சா எண்ணெய் சப்ளையராக ரஷ்யா உள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications