அமெரிக்காவின் கோபத்திற்கு உள்ளாகும் இந்தியா.. பாதிப்பு என்ன?

ரஷ்யா - உக்ரைன் இடையேயான பிரச்சனைக்கு மத்தியில் மேற்கத்திய நாடுகளின் கவனம், இந்தியா சீனா மீது திரும்பியுள்ளது எனலாம். ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை தடை செய்ய வேண்டும் என மேற்கத்திய நாடுகள் கூறி வரும் நிலையில், சீனாவும் இந்தியாவும் சலுகை விலையில் எண்ணெய் வாங்கி வருகின்றன.

இது மேற்கத்திய நாடுகள் மத்தியில் பெரும் கடுப்பினை கிளப்பியுள்ளது என்று தான் கூற வேண்டும்.

இந்தியாவும், சீனாவும் மேற்கத்திய நாடுகளின் வேண்டுகோளை ஏற்கவில்லை என்பது அதிருப்திகரமான ஒரு விஷயமாக இருந்து வருகிறது.

தடைக்கு மத்தியில் இறக்குமதி

தடைக்கு மத்தியில் இறக்குமதி

இப்படி ஒரு நிலையில் அமெரிக்கா சென்றுள்ள மத்திய அமைச்சர், நாங்கள் எந்த நாட்டில் இருந்தும் கச்சா எண்ணெய் வாங்குவோம் என பேட்டி அளித்துள்ளார். இது மேற்கத்திய நாடுகள் மத்தியில் பெரும் அதிருப்தியினை ஏற்படுத்தியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஏற்கனவே மேற்கத்திய நாடுகளின் தடையால், பல நாடுகளும் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதை தடை செய்துள்ளன. சில நாடுகள் தடை செய்ய திட்டமிட்டு வருகின்றன. இந்த நிலையில் தான் இந்தியாவும் சீனாவும் தொடர்ந்து இறக்குமதி செய்து வருகின்றன.

மக்களுக்கு வழங்க வேண்டியது கடமை

மக்களுக்கு வழங்க வேண்டியது கடமை

இது குறித்து பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க கூடாது என எந்த நாடும் எங்களுக்கு தடை விதிக்கவில்லை. அப்படியே தடை விதித்தாலும் இந்திய மக்களுக்கு தேவையானதை வழங்க வேண்டியது அரசின் கடமை. நாங்கள் எந்த நாட்டிலும் கச்சா எண்ணெய் வாங்குவோம். அதனை யாராலும் தடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.

இந்தியாவின் நிலைப்பாடு

இந்தியாவின் நிலைப்பாடு

உலகின் மிகப்பெரிய எண்ணெய் இறக்குமதியாளராக இருந்து வரும் இந்தியா, ரஷ்யா உக்ரைன் இடையேயான பிரச்சனைக்கு மத்தியில் இந்தியா விலகியே இருந்தாலும், ரஷ்யா உக்ரைனுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என கூறி வருகின்றது. அதேசமயம் மேற்கத்திய நாடுகளில் ரஷ்யாவுடன் வணிக நடவடிக்கையை நிறுத்த கோரி வருகின்றன. இதன் மூலம் ரஷ்யாவினை பொருளாதார ரீதியாக தனிமை படுத்த மேற்கத்திய நாடுகள் திட்டமிட்டு வருகின்றன. ஆனால் இந்தியாவோ தள்ளுபடி விலையில் எண்ணெய் வாங்கி வருகின்றது.

ஓபெக்-ன் அதிரடி முடிவு

ஓபெக்-ன் அதிரடி முடிவு

ஏற்கனவே மேற்கத்திய நாடுகளின் தடைகளுக்கு மத்தியில் நடப்பு ஆண்டின் தொடக்கத்தில், கச்சா எண்ணெய் விலை 130 டாலர்களுக்கு மேலாக உச்சம் தொட்டு, அதன் பின்னர் படிப்படியாக குறைந்தது. ஆனால் தற்போது ஓபெக் நாடுகளின் முடிவால் மேற்கொண்டு கச்சா எண்ணெய் விலையானது மீண்டும் பேரலுக்கு 100 டாலர்களை தாண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொள்கையில் தெளிவாக இருங்கள்

கொள்கையில் தெளிவாக இருங்கள்

இதற்கிடையில் ஹர்தீப் சிங் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக்கூடாது என்று, இதுவரை எந்த நாடும் இந்தியாவிடம் கேட்டுக்கொண்டது இல்லை. உங்கள் கொள்கையில் நீங்கள் தெளிவாக இருந்தால் அதாவது, எரிபொருள் பாதுகாப்பு, குறைவான விலையில் எரிபொருள் தர வேண்டும் என்ற கொள்கை இருந்தால், நீங்கள் எங்கு வேண்டுமானாலும் கச்சா எண்ணெய் வாங்கலாம் என தெரிவித்துள்ளார். இது நியாயமான ஒன்றாகவே இருந்தாலும், ஹர்தீப்பின் இந்த பேச்சானது பெரும் சலசலப்பினை ஏற்படுத்தியுள்ளது. இது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் மத்தியில் பெரும் சலசலப்பினை ஏற்படுத்தியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+