வேலைக்காகுமா சீன புறக்கணிப்பு.. எதார்த்தம் என்ன.. இதோ ஒரு அலசல்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த காலங்களில் இந்திய சீன வர்த்தகம் எப்படி இருந்தது? அகில இந்திய வர்த்தகர்கள் சொல்வது போல் இந்தியா சீனாவினைத் தவிர்த்தால், அது இந்தியாவுக்கு பிரச்சனையா? இதனால் இந்தியா பாதிக்கப்படுமா? சீனாவுக்கு என்ன பிரச்சனை? என்பதை பற்றித் தான் இந்தக் கட்டுரையில் பார்க்க போகிறோம்.

கடந்த 2000ம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகமானது வெறும் 3 பில்லியன் டாலர்கள் மட்டுமே இருந்தது, ஆனால் இது பின்னர் படிப்படியாக உயர்ந்து 2008ல் 51.8 பில்லியன் டாலராக அதிகரித்தது.

ஆக இப்படி படிப்படியாக வளர்ந்து சீனா, இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக மாறியுள்ளது.

சீனா பொருளாதாரத்தில் இந்தியா முக்கிய பங்கு
 

சீனா பொருளாதாரத்தில் இந்தியா முக்கிய பங்கு

இன்னும் இதனை தெளிவாக சொல்லவேண்டுமானால் கடந்த 2018ம் ஆண்டில், சீன இந்தியாவுக்கு இடையிலான வர்த்தக உறவுகள் புதிய உச்சங்களை எட்டின. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் 95.54 பில்லியன் டாலர்களாக அதிகரித்திருந்தது. இதெல்லாவற்றையும் சீனாவின் பொருளாதாரத்தில் இந்தியா முக்கிய பங்கு வகித்தது. இதே இந்தியாவின் பொருளாதாரத்தில் சீனாவும் முக்கிய பங்கு வகித்தது. இவ்வாறு ஒருவருக்கொருவர் பொருளாதாரத்தில் பின்னிப் பிணைந்து காணப்படுகிறது.

வணிகம் பெரும் வளர்ச்சி

வணிகம் பெரும் வளர்ச்சி

கடந்த பத்து ஆண்டுகளில் இவ்விரு நாடுகளுக்கும் இடையில் வணிகம் பெரும் வளர்ச்சியினை கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், 2019-ல் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் சற்று குறைந்து, 92.7 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது. சீனா இந்தியா இருவரும் வர்த்தக பங்காளிகளாக இருந்தாலும், இந்த வர்த்தகத்தினால் அதிகப் பலன் என்னவோ சீனாவுக்கு தான்.

இந்தியாவின் ஏற்றுமதி

இந்தியாவின் ஏற்றுமதி

இதனை தெளிவுபடுத்தும் விதமாக 2018ம் ஆண்டில், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகம் 95.54 பில்லியன் டாலர், ஆனால் அதில் இந்தியாவின் ஏற்றுமதி பொருட்களின் மதிப்பு வெறும் 18.84 பில்லியன் டாலர்கள் என்று இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் வலைத்தளத்தில் காணப்படும் தரவுகள் தெரிவிக்கின்றன.

சீனா நிறுவனங்கள் முதலீடு
 

சீனா நிறுவனங்கள் முதலீடு

ஆனால் இதில் இன்னொரு கவனிக்க வேண்டிய விஷயமும் உள்ளது. அது இ-காமர்ஸ், ஸ்மார்ட்போன் துறை, ஆட்டோமொபைல் துறை என இந்தியா சீனாவுக்கு ஒரு பெரிய முதலீட்டு மையமாக இருப்பது சீனா தான். இது உலகமே அறிந்த ஒரு உண்மையாகும். இது மட்டும் அல்ல சீனாவின் மற்றொரு ஜாம்பவான் ஆன அலிபாபா நிறுவனம், இந்தியாவின் சில ஸ்டார்டப் நிறுவனங்களில் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றது.

சீனாவின் பங்கு

சீனாவின் பங்கு

குறிப்பாக பிக்பாஸ்கெட், பேடிஎம், ஸ்னாப்டீல் மற்றும் சோமோட்டோ போன்ற நிறுவனங்களில் கணிசமான அளவு முதலீடு செய்துள்ளது. அதேபோல, பைஜு, ப்ளிப்கார்ட், ஓலா, ஸ்விக்கி உள்ளிட்ட இந்திய நிறுவனங்களில் சீனாவின் டென்சென்ட் நிறுவனத்திற்கு பங்கு உள்ளது. இப்படி முக்கியமான சில இந்திய நிறுவனங்களில் சீன நிறுவனங்களின் முதலீடுகளும் உள்ளன.

ஸ்மார்ட்போன் சந்தை

ஸ்மார்ட்போன் சந்தை

இதுமட்டும் அல்ல இன்று உலகளவில் சிறந்த ஸ்மார்ட்போன் சந்தையாக இருக்கும் சீனாவின், விவோ, ஒப்போ, சியோமி போன்ற மொபைல்போன் நிறுவனங்களுக்கு இந்தியா தான் மிகப் பெரிய சந்தை. ஆக இப்படியாக ஒவ்வொரு விஷயத்திலும் சீனா இந்தியாவினையும், இந்தியா சீனாவினையும் சார்ந்துள்ள நிலையில், இந்த பதற்றமான நிலையினால் இரு நாடுகளுக்குமே பிரச்சனை தான்.

இரு நாடுகளுக்கும் பாதிப்பு தான்

இரு நாடுகளுக்கும் பாதிப்பு தான்

ஆக சீனா இந்தியா இடையே சுமூக நிலை ஏற்படாவிட்டால், அது வர்த்தகம் மற்றும் முதலீடுகளில் பாதிப்பினை ஏற்படுத்தும். அதிலும் கொரோனாவினால் இரு நாடுகளுமே பாதிக்கப்பட்டிருந்தாலும், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது இந்தியா தான். இதனால் இந்தியாவுக்கு பாதிப்பு சற்று அதிகம் என்றே கூறலாம். ஒரு வகையில் சீனாவுக்கு மாற்று இருந்தால், இந்த பிரச்சனையில் இருந்து இந்தியா மீள முடியும்.

சீனாவுக்கு பெருத்த அடி தான்

சீனாவுக்கு பெருத்த அடி தான்

அதே சமயம் உலகின் இரண்டாவது நாடு என்று பெருமைபடக் கூறிக் கொண்டிருக்கும் சீனாவுக்கு, இந்தியா வர்த்தக பங்காளியாக இல்லை எனில் நிச்சயம் பெருத்த அடி வாங்கும். ஆக இந்தியாவுடனான உறவை சுமூகமாக பேணுவது சீனாவுக்கும் மிக மிக அவசியமான ஒன்றாகும். அதே நேரம் இந்தியாவும் இதனால் பாதிக்கப்படக்கூடும் என்பதும் உண்மையே. ஆக மொத்தத்தில் பொருளாதார ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் பின்னி பிணைந்து உள்ளன.

சீனா – இந்தியா வர்த்தகம்

சீனா – இந்தியா வர்த்தகம்

ஏனெனில் இந்தியாவில் ஏற்கனவே கொரோனாவால் பொருளாதாரம் பின்னோக்கி சென்று கொண்டுள்ளது. இந்த நேரத்தில் இது போன்ற பதற்றங்கள் இன்னும் பின்னடைவையே கொடுக்கும். இதனை தெளிபடுத்தும் விதமாக பிசினஸ் டுடேவில் வெளியான ஒரு அறிக்கையில், 2020ம் நிதியாண்டில் சீனா இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்தது 5.3% தான். ஆனால் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்தது 14% என்றும், ஆக மொத்தத்தில் மொத்த வர்த்தகம் 10.45% என்றும் ஒர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்திய – சீனா டாப் 5 ஏற்றுமதி

இந்திய – சீனா டாப் 5 ஏற்றுமதி

இந்தியாவில் இருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட அதிகளவிலான பொருட்களில் ஆர்கானிக் கெமிக்கல்ஸ், தாது மற்றும் சாம்பல், சிலாக், கனிம எரிபொருட்கள், எண்ணெய் மற்றும் அது சார்ந்த பொருட்கள், மீன் மற்றும் கடல் உணவுகள், எலக்ட்ரிகல் மெஷினரி மற்றும் உபகரணங்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

சீனாவுக்கு எவ்வளவு ஏற்றுமதி

சீனாவுக்கு எவ்வளவு ஏற்றுமதி

இவற்றில் கடந்த ஏப்ரல் முதல் மார்ச் 2020 வரையிலான காலகட்டத்தில் எவ்வளவு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன என்பதை பற்றித் தான் பார்க்க போகிறோம். ஆர்கானிக் கெமிக்கல்ஸ் 2,702.34 மில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 16.83% குறைவாகும்.

இதே தாதுக்கள் சிலாக் மற்றும் சாம்பல் ஏற்றுமதியானது 93.16% அதிகரித்து 2,356.94 மில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

கனிம எரிபொருட்கள், எண்ணெய் மற்றும் அது சார்ந்த பொருட்கள் ஏற்றுமதியானது 25.47% குறைந்து, 2,128.32 மில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

மீன் மற்றும் கடல் உணவுகள் ஏற்றுமதியானது 85.31% அதிகரித்து. 1,336.57 மில்லியன் டாலர் மதிப்புக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

எலக்ட்ரிகல் மெஷினரி மற்றும் உபகரணங்கள் ஏற்றுமதி 48.77% ஏற்றம் கண்டு, 826.47 மில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

சீனா - இந்திய டாப் 5 ஏற்றுமதி

சீனா - இந்திய டாப் 5 ஏற்றுமதி

சீனாவில் இருந்து இந்தியாவுக்கு அதிகளவில் எலக்ட்ரிகல் மெஷினரி மற்றும் உபகரணங்கள் ஏற்றுமதி, உலைகள், கொதிகலன்கள், மெஷினரி மற்றும் இயந்திர உபகரணங்கள், ஆர்கானிக் கெமிக்கல்ஸ், பிளாக்டிக்ஸ், உரம் உள்ளிட்டவை அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன.

இந்தியாவுக்கு எவ்வளவு ஏற்றுமதி

இந்தியாவுக்கு எவ்வளவு ஏற்றுமதி

எலக்ட்ரிகல் மெஷினரி மற்றும் உபகரணங்கள் ஏற்றுமதியானது கடந்த நிதியாண்டில் 7.39% குறைந்து, 19,301.01 மில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது.

இதுவே உலைகள், கொதிகலன்கள், மெஷினரி மற்றும் இயந்திர உபகரணங்கள் ஏற்றுமதியானது 0.46% குறைந்து, 13,322.13 மில்லியன் டாலர் மதிப்பளவு இந்தியாவுக்கு இறக்குமதி செய்துள்ளது.

ஆர்கானிக் கெமிக்கல்ஸ் ஏற்றுமதியானது 7.28% குறைந்து, 7,970.43 மில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது.

பிளாக்டிக்ஸ் மற்றும் பல பொருட்கள் 0.29% குறைந்து 2,714.82 மில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது.

இதே உரம் இறக்குமதியானது 11.32% குறைந்து, 1,820.88 மில்லியன் டாலர்களாகவும் குறைந்துள்ளது. முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும்போது, கடந்த 2020ம் நிதியாண்டில் சற்று குறைந்திருந்தாலும் , இந்தியாவினை அதிகளவில் இறக்குமதி செய்துள்ளது கவனிக்கதக்கது.

இந்தியாவில் சீனாவின் ஸ்மார்ட்போன் ஆதிக்கம்

இந்தியாவில் சீனாவின் ஸ்மார்ட்போன் ஆதிக்கம்

இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணியில் இருக்கும் ஜியோமி தான் வழக்கம் போல டாப் லெவலில் உள்ளது. கடந்த 2018ல் 28.3% ஆக இருந்த ஜியோவின் பங்கு, 2019ம் ஆண்டில் 28.6% ஆக அதிகரித்துள்ளது.

இதே சாம்சங்கின் சந்தை 2018ல் 22.6% ஆக இருந்த நிலையில், 2019ல் 20.3% குறைந்துள்ளது.

இதே சீனாவின் விவோ 2018ல் 10.1% ஆக இருந்த நிலையில், 2019ல் 15.6% ஆக அதிகரித்துள்ளது.

இதே மற்றொரு சீனாவின் முன்னணி பிராண்டான ஒப்போ 2018ல் 7.2% ஆக இருந்த நிலையில், 2019ல் 10.7% ஆக அதிகரித்துள்ளது.

இதுவே ரியல்மி ஸ்மார்ட்போன் சந்தையானது 2018ல் வெறும் 3.2% ஆக இருந்த நிலையில், 2019ல் 10.6% ஆக அதிகரித்துள்ளது.

மற்ற ஸ்மார்ட்போன் சந்தையானது 2018ல் 28.6% ஆக இருந்த நிலையில், 2019ல் 14.2% ஆக சரிந்துள்ளது.

சீனாவின் ஸ்மார்ட் டிவி

சீனாவின் ஸ்மார்ட் டிவி

ஜியோமி டிவி இந்திய சந்தையில் 2018ல் 24% ஆக இருந்த நிலையில், 2019ல் 27% ஆக அதிகரித்துள்ளது.

எல்ஜி டிவி 2018ல் 21% ஆக இருந்த நிலையில், 2019ல் வெறும் 13% ஆக குறைந்துள்ளது.

சாம்சங் கடந்த 2018ல் 12% ஆக இருந்த நிலையில், 2019-லிம் 12% ஆக பெரிய அளவில் மாற்றமில்லாமல் தனது சந்தை பங்கினை கொண்டுள்ளது.

சோனி டிவியானது 2018ல் 13% ஆக இருந்த சந்தை பங்கு, 2019ல் 11% ஆக இந்தியாவில் குறைந்துள்ளது.

டிசிஎல் 2018ல் 4% சந்தை பங்கினை இந்தியாவில் கொண்டு இருந்த நிலையில், 2019ல் 8% ஆக அதிகரித்து இருமடங்காக அதிகரித்துள்ளது.

வியூ 2018ல் 5% சந்தை பங்கினை இந்தியாவில் கொண்டு இருந்த நிலையில், 2019ல் 7% ஆக அதிகரித்துள்ளது.

இதே மற்ற டிவிக்களின் சந்தையானது 2018ல் 21% ஆக இருந்த நிலையில், 2019ல் 22% ஆக சற்று அதிகரித்துள்ளது.

சோலார் பொருட்கள் இறக்குமதி

சோலார் பொருட்கள் இறக்குமதி

சீனாவில் இருந்து அதிகளவில் இறக்குமதி செய்யும் பொருட்களில் ஒன்று சோலார் மற்றும் சோலார் சம்பந்தபட்ட உபகரண பொருட்கள் தான்.கடந்த 2017ம் நிதியாண்டில் 88.2% ஆக இருந்த சோலார் சம்பந்தபட்ட உபகரண பொருட்கள், 2018ம் நிதியாண்டில் 89.1% ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த 2019ம் நிதியாண்டில் 78.4% சற்றுக் குறைந்துள்ளது. இதில் கவனிக்க தக்கவிஷயம் என்னவெனில், தாய்லாந்து, வியட்னாம், சிங்கப்பூர், தாய்வான், மலேசியா உள்ளிட்ட நாடுகளும் சீனாவில் இருந்து சோலார் உபகரணங்களை இறக்குமதி செய்கின்றன. ஆனால் அவர்கள் அதிகபட்சமாக 7% வரையில் தான் இறக்குமதி செய்கின்றன.

எந்த நாடு எவ்வளவு அன்னிய நேரடி முதலீடு

எந்த நாடு எவ்வளவு அன்னிய நேரடி முதலீடு

இந்தியாவில் செய்யப்பட்டுள்ள அன்னிய நேரடி முதடுகளில் ஏப்ரல் 2000 ஆண்டு முதல் மார்ச் 2020 வரையிலான முதலீடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் மொரிஷியஷ் 141.9 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடுகளை செய்து டாப் லெவலில் உள்ளது.

இதே சிங்கப்பூர் 97.7 பில்லியன் டாலரும், ஜப்பான் 33.9 பில்லியன் டாலரும், நெத்ர்லாந்து 33.5 பில்லியன் டாலரும், அமெரிக்கா 29.8 பில்லியன் டாலர்களும் முதலீடு செய்துள்ளன.

இதுவே லண்டன் 28.2 பில்லியன் டாலர்களும், ஜெர்மனி 12.2 பில்லியன் டாலர்களும், சைப்ரஸ் 10.7 பில்லியன் டாலர்களும், பிரான்ஸ் 8.5 பில்லியன் டாலர்களும், ஐக்கிய அரேபிய நாடுகள் 7 பில்லியன் டாலர்களும், இதில் சீனா வெறும் 2.4 பில்லியன் டாலர்கள் மட்டுமே முதலீடும் செய்துள்ளன.

மொத்த முதலீடு எவ்வளவு

மொத்த முதலீடு எவ்வளவு

இந்தியாவினை பொறுத்த வரையில், அன்னிய நேரடி முதலீட்டில் சீனா 18வது இடத்தில் உள்ளது. எனினும் சில முதலீடுகள் சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் மூலம் சீனாவின் முதலீடுகள் செய்யப்படுகின்றன.

இதில் இந்தியா ஸ்டார்டப்களில் 3.9 பில்லியன் டாலர்களும், இதே ஹாங்காங், சிங்கப்பூர் மூலம் 4.2 பில்லியன் டாலரும், ஆக மொத்தத்தில் சீனா மூலம் இந்தியாவில்; செய்த முதலீடுகள், தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள முதலீடுகள் என 26 பில்லியன் டாலர் கணக்கிடப்பட்டுள்ளது.

ஆக இப்படியாக ஒவ்வொரு விஷயத்திலும் சீனாவும் இந்தியாவும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்திருக்கையில், இனி என்ன செய்யப்போகின்றனவோ தெரியவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India can boycott china? how can affect india and china?

The border tensions with china given rise calls for boycott of neighbour.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X