இந்தியா - கனடா பிரச்சனை குறித்து உலக நாடுகள் அனைத்தும் பேச துவங்கியுள்ளது, காரணம் கனடா அரசு இந்தியா மீது வைத்துள்ள குற்றச்சாட்டு அப்படிப்பட்டது. இந்தியா - கனடா மத்தியிலான நட்புறவு இன்று நேற்று துவங்கியது இல்லை, பல தசாப்தங்களாக இருப்பதோடு கடந்த 15 வருடத்தில் வர்த்தகம், முதலீடு, வேலைவாய்ப்பு, கல்வி, அரசியல், கலாச்சாரம் என பல பெரிய அளவில் விரிவாக்கம் அடைந்துள்ளது.
இப்படியிருக்கையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜர் என்பவரை இந்திய அரசு கொன்றதாக குற்றம் சாட்டியதில் இரு நாடுகளுக்கும் மத்தியிலான பிரச்சனை மிகப்பெரியதாக வெடித்து, கனடா - இந்தியா அடுத்தடுத்து கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் இந்தியா - கனடா உறவு குறித்து அனைத்து இந்தியர்களும் தெரிந்துக்கொள்ள வேண்டிய 5 முக்கியமான விஷயங்கள் உள்ளது.
அன்னிய செலாவணி: இந்தியாவின் மொத்த அன்னிய செலாவணியில் கனடாவின் பங்கு 0.56 சதவீதம், ஏப்ரல் 2000 முதல் ஜூன் 2023 வரையில் இந்தியா $645,386.0884 மில்லயன் டாலர் அன்னிய செலாவணியை பெற்றுள்ளது. இதில் 3,642.5243 மில்லியன் டாலர் அதாவது 0.5644 சதவீதம் கனடாவின் பங்கு.
வெளிநாட்டு இந்தியர்கள்: கனடா-வின் 5.26 சதவீதம் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் வசித்து வருகிறார்கள். வெளிநாட்டில் சுமார் 3,21,00,340 இந்தியர்கள் உள்ளனர், இதில் 16,89,055 பேர் அதாவது 5.26 சதவீதம் பேர் கனடாவில் வசித்து வருகின்றனர். இதில் 1,78,410 பேர் என்ஆர்ஐ, 15,10,645 பேர் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்கள்.
கல்வி : கனடாவில் படிக்கும் மாணவர்களில் 7 பேரில் ஒருவர் இந்தியர். 2022 ஆம் ஆண்டில் 13,24,954 மாணவர்கள் உலக நாடுகளில் படித்து வருகின்றனர். இதில் 1,83,310 பேர் அதாவது 13.83 சதவீதம் பேர் கனடாவில் படித்து வருகின்றனர்.
சுற்றுலா : இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டவர்கள் பட்டியலில் கனடா 4வது இடத்தில் உள்ளது. 2021 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்த மொத்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளில் 5.3 சதவீதம் பேர் கனடா நாட்டை சேர்ந்தவர்கள். இதில் 72.6 சதவீதம் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள், 1.1 சதவீதம் பேர் வர்த்தகம் மற்றும் ப்ரொபஷ்னல் காரணத்திற்காக வந்தவர்கள். 0.3 சதவீதம் மருத்துவ காரணத்திற்காக வந்தவர்கள்.
இருதரப்பு வர்த்தகம் : இந்தியாவின் மொத்த வர்த்தகத்தில் 0.70 சதவீதம் கனடா நாட்டை சார்ந்துள்ளது. 2022-23 ஆம் நிதியாண்டில் இந்தியா - கனடா மத்தியிலான இருநாட்டு வர்த்தகத்தின் மதிப்பு 8,161.02 மில்லியன் டாலர். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்தியாவின் வர்த்தக உபரி நாடுகள் பட்டியலில் கனடாவும் ஒன்று. அதாவது இறக்குமதியை காட்டிலும் ஏற்றுமதி அதிகமாக இருக்கும் நாடுகள்.
ஏற்றுமதி - இறக்குமதி : இந்தியாவில் இருந்து கனடாவுக்கு மருந்து, இறால், ஸ்மார்ட்போன், வைர நகைகள், பாசுமதி அரிசி, எண்ணெய் - எரிவாயு பைப்கள், டீ-சர்ட் போன்றவை
ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதேபோல் கனடாவில் இருந்து இந்தியாவுக்கு வரும் பொருட்களின் பட்டியல் நிலக்கரி, போட்டாஷியம் க்லோரைட், மசூர் பருப்பு, காப்பர் தாது, மர பசை போன்றவை இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications