இந்தியா கனடா மத்தியிலான உறவு பல காலமாக சிறப்பாக இருக்கும் காரணத்தாலேயே பல லட்சம் இந்தியர்கள் பணியாற்றியும், குடியுரிமை பெற்றும் உள்ளனர். இந்த நிலையில் தற்போது இருநாடுகளுக்கு மத்தியிலான உறவு முறியும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜர் என்பவரை இந்திய அரசு கொன்றதாக குற்றம் சாட்டினார். இந்தியாவில் தேடப்பட்டு வந்த காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜர், ஜூன் 18ஆம் தேதி கனடாவின் Surrey-யில் உள்ள குருத்வாராவின் கார் பார்கிங் பகுதியில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதில் இந்தியாவுக்கு தொடர்ப்பு இருப்பதாக கூறினார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.

இந்த நிலையில் இரு நாட்டு அரசுகளும் அடுத்தடுத்து நடவடிக்கை எடுத்து வரும் வேளையில் தற்போது இந்திய அரசு கனடாவில் இருக்கும் இந்தியர்களை அந்நாட்டின் சில முக்கிய பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
கனடாவில் இந்திய அதிகாரிகள் மற்றும் ஆன்டி இந்தியா கொள்கைக்கு எதிராக இருக்கும் இந்திய சமுகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இத்தகைய பகுதிகளுக்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பயணம் செய்தாலும் அதிகப்படியான எச்சரிக்கை உடன் பயணம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதனால் இந்தியாவில் இருக்கும் கனடா நாட்டு அரசு, அமைப்புகள், முதலீட்டு நிறுவனங்களின் முதலீடுகள் என்னாகும் என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. முதலில் கனடாவில் இந்தியாவின் பங்கு என்ன என்பதை பார்ப்போம், கனடாவில் இருந்து இந்தியா மிகவும் குறைந்த அளவிலான பொருட்களை மட்டுமே வாங்குகிறது. ஆனால் கனடா கல்லூரிகளில் இந்தியர்கள் அதிகளவிலானோர் படித்து வருகின்றனர். இதனால் கல்வி, வேலைவாய்ப்பு, ரெமிட்டனஸ் ஆகியவற்றில் கனடாவில் இந்தியாவில் பங்கு அதிகம்.
இதேவேளையில் கனடா நாட்டின் பொதுத்துறை பென்ஷன் மேலாளர்கள் இந்திய நிறுவனங்கள், திட்டங்களில் பல பில்லியன் டாலர் தொகையை முதலீடு செய்துள்ளனர். கனடா நாட்டின் மூன்று பெரிய முதலீடு நிறுவனங்களான கனடா ஓய்வூதிய திட்ட முதலீட்டு வாரியம் (CPPIB) மற்றும் கியூபெக் தொழிலாளர்கள் மற்றும் ஒன்டாரியோ பள்ளி ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய பண்ட் அமைப்புகள் சமீபத்தில் மும்பை டெல்லியில் அலுவலகங்களைத் திறந்துள்ளன.
கனடா ஓய்வூதிய திட்ட முதலீட்டு வாரியம் மற்றும் கியூபெக் தொழிலாளர்கள் மற்றும் ஒன்டாரியோ பள்ளி ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய பண்ட் அமைப்புகள் மட்டும் சுமார் 1.2 டிரில்லியன் கனடா டாலர் அதாவது 893 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான போர்ட்போலியோ-வை நிர்வாகம் செய்து வருகிறது.
இந்த நிலையில் கனடா - இந்தியா மத்தியிலான முதலீட்டு மதிப்பு 2022 ஆம் ஆண்டில் 36.2 பில்லியன் கனடா டாலராக உயர்ந்தது. கடந்த 4 வருடத்தில் 37 சதவீதம் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது, இரு நாடுகள் மத்தியிலான நட்புறவு மிகவும் சிறப்பாக இருந்த காரணத்தால் முதலீடு சமீபத்தில் பெரிய அளவில் உயர்ந்தது. இதில் CPPIB அமைப்பு மட்டும் இந்தியாவில் 21 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது. இப்படி பல அமைப்புகள் சிறிதும் பெரிதுமாக முதலீடு செய்துள்ளது.
இந்த நிலையில் ஹர்தீப் சிங் நிஜ்ஜர் மரணம் தொடர்பான குற்றச்சாட்டு இரு நாடுகள் மத்தியில் பூதாகரமாக வெடித்த நிலையில் இது மேலும் மோசமாகும் பட்சத்தில் தற்போதைய முதலீடு மட்டும் அல்லாமல் எதிர்கால முதலீடுகளும் கேள்விக்குறியாகும். இரு நாடுகள் மத்தியிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை ஏற்கனவே முறிந்துள்ளது, ஹோல்டு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications