இந்தியர்கள் வளைகுடா நாடுகளுக்கு பின்பு அனைத்து பிரிவுகளிலும், அதிகம் பணியில் இருக்கும் ஒரு நாடு என்றால் அது கனடா தான். ஐடி, மருத்துவம் மட்டும் அல்லாமல் அனைத்து மட்டங்களிலும் இந்தியர்கள் கனடாவில் பணியாற்றி வருகிறார்கள், சமீபத்தில் கனடா அரசு விசாவிலும், வெளிநாட்டில் இருந்து வரும் ஊழியர்களின் குடும்பங்களுக்கு பணியாற்றும் உரிமை என் பல விஷயங்களில் விசா, வொர்க் பர்மிட் கொடுத்தது.
இதேபோல் கனடாவில் இந்திய நிறுவனங்களுக்கும் மிகவும் சாதகமான வர்த்தக சூழ்நிலை இருந்த காரணத்தால் அதிகப்படியான முதலீடுகள் கனடாவில் குவிந்தது. ஆனால் இப்போது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ-வின் குற்றச்சாட்டு காரணமாக இரு நாடுகள் மத்தியிலான நட்புறவில் பெரிய விரிசல் ஏற்பட்டு உள்ளது.

இரு நாடுகள் மத்தியிலான பிரச்சனை உடனடியாக சரிசெய்யும் அளவில் இல்லை என்பதாலும், நாஸ்காம் அமைப்பும் உடனடியாக பாதிப்படையும் அளவுக்கு பெரிய பிரச்சனைகளும் இல்லை என அறிவித்திருக்கும் வேளையில்.. இந்தியா ஐடி நிறுவனங்களுக்கு தற்போது இருக்கும் ஒரே வழி காத்திருந்து நடப்பதை கூர்ந்து கவனிப்பது தான்.
செப்டம்பர் 20 ஆம் தேதி கனடா நாட்டு ஐடி நிறுவனமான Resson Aerosace தானாக முன்வந்து மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்துடனான முதலீட்டு கூட்டணி ஒப்பந்தத்தை முறித்துக்கொள்வதாக செப்டம்பர் 20 ஆம் தேதி புதன்கிழமை இரவு 8.19 மணிக்கு தெரிவித்துள்ளது. இதன் மூலம் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா குழுமம் ரெஸ்ஸோ நிறுவனத்தில் வைத்திருந்த 11.18 சதவீத பங்குகளுக்கு இணையான 4.7 மில்லியன் கனடா டாலர்கள் பணத்தை அதே நாளில் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேவேளையில் இந்திய அரசு அடுத்த அறிப்பு வரும் வரையில் கனடா நாட்டை சேர்ந்தவர்களுக்கு விசா அளிப்பதை நிறுத்தி வைத்துள்ளது. இதேபோல இந்தியாவில் இருந்து கனடா செல்பவர்களுக்கும் பல அறிவுரை வழக்கப்பட்டும் உள்ளது, கனடாவும் விசா கொடுப்பதில் பல கெடுபிடிகளை காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கனடாவில் இன்போசிஸ் Toronto, Calgary, Vancouver பகுதியில் அலுவலகம் வைத்துள்ளது, சமீபத்தில் IPS canada Inc நிறுவனம் Ottawa-வில் துவக்கப்பட்டு 8000 ஊழியர்கள் வரையில் சேர்க்க திட்டமிட்டது. டிசிஎஸ் அமெரிக்கா - கனடாவில் மட்டுமே சுமார் 53000 ஊழியர்களை பல பிரிவுகளில் வைத்துக் கொண்டு இயங்கி வருகிறது.
இப்படி பல இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் சிறிதும், பெரிதுமாக கனடாவில் தனது பங்கீட்டை வைத்துள்ளது. இப்படியிருக்கையில் இந்தியா - கனடா மத்தியிலான பிரச்சனை பெரிதாக மாறினால் இதன் பின்விளைவு இத்துறை சார்ந்த ஊழியர்களை நேரடியாக பாதிக்கும்.
More From GoodReturns

இன்போசிஸ் தலையெழுத்தை மாற்றப்போகும் புது CEO.. சலில் பாரிக் நிலைமை என்ன..?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications