சென்னை: இந்தியாவில், சீன நிறுவனங்கள் கொடிகட்டிப் பறந்த காலத்தில், இரு நாடுகளின் எல்லையில் ராணுவத்தினர் இடையே நடத்த தாக்குதல் சம்பவம் பெரும் பாதிப்பை இந்தியா - சீனா மத்தியிலான வர்த்தகத்தில் ஏற்பட்டது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியா அரசு, சீன முதலீடுகள் முதல் சீன தொழில்நுட்பம், சீன அதிகாரிகள் வரையில் இந்தியாவுக்கு வருவதைத் தடை செய்தது. இதன் மூலம் இந்திய வர்த்தக துறை எந்த அளவுக்குப் பாதித்துள்ளது என்பது குறித்த கணக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

கடந்த 4 ஆண்டுகளில் இந்தியா-சீனா இடையே அதிகரித்து வரும் பதற்றங்கள் காரணமாக, இந்திய எலக்ட்ரானிக்ஸ் பொருள் உற்பத்தியாளர்கள் சுமார் 15 பில்லியன் டாலர் இந்திய ரூபாய் மதிப்பில் இது கிட்டத்தட்ட ரூ.1,12,500 கோடி உற்பத்தி இழப்பையும், 1 லட்சம் வேலைவாய்ப்புகளையும் இழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பிரச்சனை சீன குடிமக்களுக்கான விசா வழங்கும் செயல்பாட்டில் ஏற்படும் தாமதம் மற்றும் இந்தியாவில் இயங்கும் சீன நிறுவனங்கள் மீதான அரசின் விசாரணை ஆகியவற்றால் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு வருகிறது.
எலக்ட்ரானிக்ஸ் பொருள் உற்பத்தித் துறை பல்வேறு அமைச்சகங்களுக்குச் சமர்ப்பித்த அறிக்கைகளில், இந்தியா 10 பில்லியன் டாலர் (ரூ.75,000 கோடி) மதிப்பிலான ஏற்றுமதி வாய்ப்பையும், 2 பில்லியன் டாலர் (ரூ.15,000 கோடி) மதிப்பிலான உள்நாட்டு மதிப்புக் கூட்டல் ( Domestic Value Addition - DVA) இழப்பையும் சந்தித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் எலக்ட்ரானிக்ஸ் பொருள் உற்பத்தி துறையை சேர்ந்த தொழில்துறை நிர்வாகிகளின் கூறுகையில், தற்போது 4,000 முதல் 5,000 சீன நிறுவன அதிகாரிகளின் விசா விண்ணப்பங்கள் அரசின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றன.
இதன் காரணமாக, இந்திய எலக்ட்ரானிக்ஸ் பொருள் உற்பத்தி துறையின் விரிவாக்கத் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்திய அரசு 10 நாட்களுக்குள் வணிக விசா அதாவது பிஸ்னஸ் விசா விண்ணப்பங்களை அனுமதிக்கும் வழிமுறையை உருவாக்கியிருந்தாலும், சீன அதிகாரிகளுக்கும், வல்லுனர்களுக்கும் தொடர்ந்து மாதக்கணக்கில் விசா வழங்கப்படாமல் உள்ளது.
இந்திய செல்போன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் சங்கம் (ICEA) மற்றும் தகவல் தொழில்நுட்ப உற்பத்தியாளர்கள் சங்கம் (MAIT) ஆகிய தொழில் சங்கங்கள், தற்போது ஒரு மாதத்திற்கும் மேலாக தாமதமாகும் சீன நிறுவன அதிகாரிகளின் விசா ஒப்புதல்களை விரைவுபடுத்துமாறு மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.
இந்தியாவில் இருக்கும் ஸ்மார்ட்போன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தித் துறையில் தொழில்நுட்ப பரிமாற்றம், திறன் பரிமாற்றம், புதிய உற்பத்தி பிரிவுகளை நிறுவுதல் மற்றும் இயக்குதல், திறன் மேம்பாட்டுச் செயல்முறைகளை உருவாக்குதல், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளுதல் போன்ற பல்வேறு பணிகளுக்கு இந்த துறையில் முன்னோடியாக இருக்கும் சீன நிர்வாகிகள் தேவைப்படுகின்றனர் என்று தொழில்துறை நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மேலும், உள்ளூர் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து உற்பத்தி தளங்களை அமைக்க இந்தியாவிற்கு அழைக்கப்பட்ட சீன நிறுவனங்களின் தலைமை குழுக்களின் விசா விண்ணப்பங்களும் தேங்கியுள்ளன. இதுவும் முக்கிய பின்னடைவாக உள்ளது.
இந்தியா-சீனா இடையே வழக்கமான வணிக நடவடிக்கைகள் சிறப்பாக இருந்திருந்தால், தற்போதைய 18% ல் இருந்து 22-23% ஆக இந்திய நிறுவனங்களின் உள்நாட்டு மதிப்புக் கூட்டல் அதிகரித்திருக்கும் என ICEA மதிப்பிடுகிறது.
இதன் மூலம், உள்நாட்டு மொபைல் போன் எகோசிஸ்டம் ரூ.15,000 கோடி மதிப்பிலான கூடுதல் உள்நாட்டு மதிப்பு கூட்டல் (DVA) ஆண்டு தோறும் கிடைத்திருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டு உள்ளது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications