டெல்லிக்கும் இஸ்லாமாபாத்துக்கும் இடையே நிலவும் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில் வடமேற்கு இந்தியாவில் உள்ள முக்கியமான விமான நிலையங்களின் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்த அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவு விமானப் பயணிகளையும், சுற்றுலா துறையையும் கணிசமாக பாதித்துள்ளது. இந்த திடீர் முடிவிற்கான காரணம் என்ன? அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன? என்பது குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.
இந்திய அரசு ஜம்மு & காஷ்மீரில் உள்ள அவந்திப்பூர் விமான நிலையம், ஹரியானாவில் உள்ள அம்பாலா உள்நாட்டு விமான நிலையம், பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமான நிலையம், குஜராத்தில் உள்ள நலியா விமான நிலையம், உத்தரபிரதேசத்தில் உள்ள சர்சாவா விமான நிலையம், லடாக்கில் உள்ள தோய்ஸ் விமான நிலையம் மற்றும் ராஜஸ்தானில் உள்ள உத்தர்லாய் விமானப்படை நிலையம் ஆகியவற்றை மே 9-ஆம் தேதி முதல் தற்காலிகமாக மூடியுள்ளது. இந்த அறிவிப்பு வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கு பிறகு தெரிவிக்கப்பட்டது.

அதோடு இன்னும் 8 விமான நிலையங்களும் மூடப்படும் பட்டியலில் இணைந்துள்ளன. கிஷன்கர், பூந்தர், லூதியானா, ஸ்ரீநகர், ஜம்மு, லே, சண்டிகர், அமிர்தசரஸ், பாட்டியாலா, பதிண்டா, ஹல்வாரா, பதான்கோட், சிம்லா, காகல், தர்மசாலா, ஜெய்சால்மர், ஜோத்பூர், பிகானர், முந்த்ரா, ஜாம்நகர், ராஜ்கோட், போர்பந்தர், காண்ட்லா, கேஷோட், பூஜ், குவாலியர் மற்றும் ஹிண்டன் ஆகிய விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.
மே 15-ஆம் தேதி அதிகாலை 5.20 மணி வரையில் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் பகல்காமில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இந்தியா பதிலடியாக ஆபரேஷன் சிந்துர் என்ற தாக்குதலை நடத்தியது. அதன் பிறகு மீண்டும் ட்ரோன் மூலம் பாகிஸ்தான் தனது தாக்குதலைத் தொடர்ந்தது. இந்த தாக்குதலையும் இந்தியா எதிர்கொண்டது. இந்நிலையில் டெல்லி மற்றும் இஸ்லாமாபாத் பகுதிகளில் பதற்றம் அதிகரித்து வருகிறது.
மே 8-ஆம் தேதி அன்று சுமார் 450 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அதோடு ஜம்மு & காஷ்மீர், அமிர்தசரஸ் மற்றும் சிம்லா உட்பட வடமேற்கு இந்தியாவில் உள்ள சுமார் 20-க்கும் மேற்பட்ட விமான நிலையங்களும் மூடப்பட்டது.
மே 10-ஆம் தேதியான சனிக்கிழமை அன்று வடக்கு, மேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் உள்ள விமான நிலையங்களின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கும் பாகிஸ்தான் எல்லைக்கும் அருகில் இருக்கும் 4 விமான நிலையங்களான புஜ், காண்ட்லா, ஜாம்நகர் மற்றும் ராஜ்கோட் போன்ற விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.
ஜம்மு, ஸ்ரீநகர், லே, ஜாம்நகர், ஜோத்பூர், அமிர்தசரஸ், பூஜ், சண்டிகர் மற்றும் ராஜ்கோட் போன்ற பகுதிகளுக்கு செல்லும் விமானங்களும் மே 10 வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது. இண்டிகோ விமான நிறுவனமும் 165-க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்துள்ளது.
மே 9-ஆம் தேதி என்று டூரிசம் ஸ்டாக்குகள் சரிவை சந்தித்தன. அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்கள் காரணமாக சுற்றுலாவுக்கான தேவையும் குறைந்து வருகிறது. சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் மற்றும் சிவில் விமான பாதுகாப்பு பணியகம் ஆகியவை விமான கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகரித்து வருகின்றன.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications