சீனா மற்றும் ஐரோப்பாவில் இருந்து அதிகரித்து வரும் வாய்ப்புகளுக்கு மத்தியில் இந்தியாவை உலகளாவிய உற்பத்தி தளமாக மாற்றுவதிலும், இந்தியாவை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பொருளாதார நாடாக மாற்றுவதிலும் மத்திய அரசு அதிகப்படியான கவனத்தைச் செலுத்தி வருகிறது.
இதைச் சாத்தியமாக்க அரசின் முதலீடுகளும், சேவைகள் மட்டும் போதாது, தனியார் துறைக்குத் தேவையான ஊக்கத்தை அளிக்க வேண்டும் என்பதற்காகக் கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகப்படியான மூலதனத்திற்கான வாய்ப்பா அளித்துள்ளது.
உள்நாட்டு நாட்டு நிறுவனங்களுக்கு மூலதன வாய்ப்பு அளித்தது போலவே. கடந்த 2 வருடத்தில் வெளிநாடுகளில் இருந்து உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு வாய்ப்பு அளிக்கும் அனைத்துத் தரப்பு நிறுவனங்களைப் பல்வேறு சலுகைகளைக் கொடுத்து மத்திய மாநில அரசு ஈர்த்து வருகிறது.

இந்திய நிறுவனங்கள்
இந்திய நிறுவனங்கள் அடுத்தப் பத்தாண்டுகளில் சுமார் 14 லட்சம் கோடி ரூபாய் அளவிலான மூலதன முதலீட்டுத் திட்டங்களைப் பட்டியலிட்டு தயாராக வைத்துள்ளது. இதில் பெரும்பாலான நிறுவனங்கள் எனர்ஜி, மின்சாரம், டிஜிட்டல் இன்பராஸ்டக்டசர், அதிக மூலதனம் மிகுந்த துறைகளில் முதலீடு செய்ய உள்ளனர்.

முக்கியத் துறை
மேலும் எலக்ட்ரானிக்ஸ், கெமிக்கல்ஸ் மற்றும் பார்மா போன்ற உற்பத்தி-இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டங்களுக்குத் தகுதியான துறைகளிலும் அதிகப்படியான முதலீடுகளையும் செய்ய உள்ளனர். 2022 ஆம் ஆண்டின் ஏப்ரல் - நவம்பர் மாதத்தில் இந்திய நிறுவனங்கள் அறிவித்த முதலீடுகள் கொரோனாவுக்கு முந்தைய காலகட்டத்தை விடவும் அதிகமாகும்.

8.5 லட்சம் கோடி ரூபாய்
நிர்மல் பேங் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டிஸ் என்னும் நிறுவனம் வெளியிட்ட தரவுகள் படி, இந்திய தனியார் நிறுவனங்கள், 2022 ஆம் ஆண்டின் ஏப்ரல் - நவம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 8.5 லட்சம் கோடி ரூபாய் மொத்த மூலதன முதலீட்டை அறிவித்துள்ளன. 2020 ஆம் நிதியாண்டின் அளவீட்டை ஒப்பிடுகையில் இதன் அளவு 5.6 லட்சம் கோடி ரூபாயாகும்.

கெமிக்கல், ரினியூவபிள் எனர்ஜி
இந்த 8.5 லட்சம் கோடி ரூபாயில் 35 சதவீதம் கெமிக்கல் துறையைச் சார்ந்தும், மற்றொரு 35 சதவீதம் renewable energy துறையைச் சார்ந்தும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அம்பானி, அதானி
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் கௌதம் அதானிக்கு சொந்தமான அதானி கிரீன் எனர்ஜி இணைந்து அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.7.5 லட்சம் கோடி கிரீன் எனர்ஜி துறையில் முதலீட்டுத் திட்டங்களை அறிவித்துள்ளன.

முக்கிய முதலீடுகள்
1. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் - 5,950 கோடி ரூபாய் - புதுப்பிக்கத்தக்க மற்றும் கிரீன் ஹைட்ரஜன்
2. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் - 2,750 கோடி ரூபாய் - RJio, கெமிக்கல்ஸ்
3. வேதாந்தா - 1,540 கோடி ரூபாய் - செமிகண்டக்டர் உற்பத்தி
4. பொதுத்துறை எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் - 1,100 கோடி ரூபாய் - எண்ணெய் மற்றும் எரிவாயு
5. பார்த் பெட்ரோலியம் - 1,000 கோடி ரூபாய் - புதுப்பிக்கத்தக்க மற்றும் புதுப்பிக்க முடியாத ஆற்றல்
6. ஆர்சிலர் மிட்டல் - 975 கோடி ரூபாய் - ஸ்டீல் உற்பத்தி ஆலை
7. ஹிண்டால்கோ இந்தியன் - 640 கோடி ரூபாய் - அலுமினியம்
8. என்டிபிசி - 414 கோடி ரூபாய் - பவர், பசுமை ஆற்றல் உட்பட
9. அதானி கிரீன் - 1,500 கோடி ரூபாய் - புதுப்பிக்கத்தக்க ஆற்றல்

தனியார் மற்றும் அரசு முதலீடுகள்
ப்ரோகரேஜ் நிறுவனமான ICICI செக்யூரிட்டிஸின் கூற்றுப்படி, பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த மூலதன முதலீடுகள் 2023 ஆம் நிதியாண்டில் 21 லட்சம் கோடியைத் தாண்டும் என்றும் வலுவான ரியல் எஸ்டேட் மற்றும் கடன் சுழற்சியுடன் உடன் முதலீடுகள் அதிகரித்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.