இந்தியாவில் கொரோனா தொற்று மிகவும் மோசமான நிலையில் பாதித்துள்ள நிலையில், நாட்டின் பொருளாதாரத் தரவுகள் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் இந்திய நுகர்வோரின் நம்பிக்கை அளவு பெரிய அளவில் குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மார்ச் மாதம் இந்தியாவின் consumers' confidence Index அளவீடு 53.1 புள்ளிகளாக இருந்த நிலையில், மே மாதத்தில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு 48.5 புள்ளிகளாகக் குறைந்துள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
100 புள்ளிகளுக்கு மேல் இருந்தால் இந்திய நுகர்வோர்கள் நம்பிக்கையாக இருக்கிறார்கள் என்பது பொருள், 100 புள்ளிகளுக்குக் கீழ் இருந்தால் இந்திய நுகர்வோர்கள் அவநம்பிக்கையுடன் இருக்கிறார்கள் என்பது பொருள்.
இதுமட்டும் அல்லாமல் அடுத்த ஒரு வருடத்தில் இதன் அளவீடு 108.8 புள்ளிகளாக இருக்கும் எனக் கணிக்கப்பட்ட நிலையில் தற்போது இக்கணிப்பின் அளவீடு 96.4 புள்ளிகளாகக் குறைந்துள்ளது.
சமீபத்தில் வெளியான நுகர்வோர் சந்தை அறிக்கையில் கூட இந்திய மக்கள் கொரோனா அச்சத்தின் காரணமாகச் செலவு செய்வதைப் பெரிய அளவில் குறைத்துள்ளதாகவும், இதனால் சந்தையில் டிமாண்ட் மற்றும் வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications